தமிழமுது –110. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
பரிபாடல் : திரட்டு –
1:53 – 56.
கள்ளோடு
கூடும் காம இன்பம்.
”அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரியுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற
சூடு நறவொடு காமம் முகிழ் விரிய
சூடா நறவொடு காமம் விரும்ப …”
பூமுடி நாகர்
கோயிலில் செவ்வரியும் கருவரியும் படர்ந்த மை தீட்டப்பட்ட கண்களையுடைய விறலியரும் கூத்தரும்
கூடிக் காண்பார் அனைவராலும் விரும்பப்படும் பாட்டினைப் பாடி ஆடலையும் செய்தனர். சூடுதற்குரிய
நறவ மொட்டுடன அதனைச் சூடிய மைந்தர், மகளிரின் காமப் பண்பும் அரும்பி மலர்ந்து நின்றது,
அத்தகைய ஆடவரும் மகளிரும் கள்ளோடு காம இன்பத்தையும் விரும்பினர்.
(கள் காம இன்பத்தை மிகுவித்தலின்
கள்ளொடு காமம் விரும்ப என்றார். சூடு நறவு – சூடும் நறவ மொட்டு, நறவம் பூ, வாசனைக் கொடி ; சூடா நறவு – கள் ; நறவ மொட்டு அலரும் போதே மைந்தர், மகளிர் உள்ளத்தே
காமம் முகிழ்த்தது ).
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக