திங்கள், 1 செப்டம்பர், 2025

தமிழமுது –111. – தொல்தமிழர் உணவு –கள்..?கள் உண்ணலாம் ; உண்ணக்கூடாது…!

 

தமிழமுது –111. –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

கலித்தொகை :

கள் உண்ணலாம் ; உண்ணக்கூடாது…!

”நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து

அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்

திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது…” -99 : 1 -3.

 

கள்ளைஉண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும் ; அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக்கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர்  அந்தணராகிய வியாழ குருவும் வெள்ளி குருவும்  இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள  அரசியலைக்கூறும்  ; நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சி புரிபவன் நீ.

 ( அந்தணர் இருவர் என்றது  தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய  வெள்ளியும் ஆவர்.  வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம் வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன்,  கள் உண்ணக் கூடாது என்றும் ; வெள்ளி, கள் உண்ணலாம் என்றும் தம் நூலில் கூறியுள்ளனர்.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக