தமிழமுது
–136. – பண்டைய தமிழ்நாட்டின்
எல்லைகள்.
பதிற்றுப்பத்து
:குமட்டூர்க் கண்ணனார்
”வடவேங்கடம்
= இமயமலை ’-3.
“கவிர்ததை
சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து
இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர்
துவன்றிய பேரிசை இமயம்
தென்
அம் குமரியொடு ஆயிடை
மன்மீக்
கூறுநர் மறம் தப கடந்தே. -2: 21 – 25.
முள் முருக்க மரங்கள்அடர்ந்து வளர்ந்துள்ள இமயமலையின் பக்கமலையில் கவரி
மான்கள் தூங்குகின்றன ; அவ்வாறு தூங்கும்போது அவை பகற்பொழுதில் தாம் நீர் அருந்திய
அருவியையும் உண்ட நரந்தம் புல்லையுமே கனவில் காணும் வாழ்க்கையுடையன ; அவ்வாறு அமைதி
நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரும் புகழ் உடையதுமான இமயமலைக்கும் தென்
திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தை ஆளும் மன்னர்களுள் செருக்கால்
தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு எதிர்நின்று போரிட்டு
வென்றாய் என்று இமயவரம்பன் வெற்றிச் சிறப்புகளைப் புகழ்ந்துரைக்கின்றார் புலவர்.
(
கவிர் – முள் முருக்க மரம் ; ததைதல் – நெருங்குதல் ; கவரி – கவரி மான் ; ஆரியர் – முனிவர்கள்.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும்
…………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக