-முடிவுரை-
தமிழமுது –125 –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
புறநானூறு:
கள்,
சிறப்புக்குரிய விருந்துணவாகும்.
”சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெரினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே”
– 235: 1- 5:
ஔவையார். அதியமான்நெடுமானஞ்சியைப்
புகழ்ந்து பாடிய பாடல் .
சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத்
தருவான்;
பெருமளவு கள்ளைப் பெற்றால்அதனை நாங்கள் உண்டு பாட, அதைக் கேட்டு மகிழ்ந்து
அவனும் உண்பான்;
சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை
மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;
பெருமளவு சோறாக இருந்தாலும், அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்.
தொல்
தமிழர் வாழ்வியலில் கள் சிறப்புக்குரிய விருந்துணவாகும்.
போர்க்கள வெற்றிக் கொண்டாட்டங்களிலும் விழாக்களில் நிகழ்த்தும் மகிழ்ச்சி
ஆரவாரத்திலும் கள், சிறப்பிடம் பெறும் . குறிப்பாக
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் பல வகையான இறைச்சிகளோடு
கள் உண்டு மகிழ்தல் நடைபெறும்.
மன்னர்கள் இருக்கையிலிருந்து எழுந்து புலவர்களை எதிர்கொண்டு அழைப்பர். புலவர்களுக்கு
வேண்டுமளவு பொருள் கொடுத்து மகிழ்வர்.
மேற்சுட்டியுள்ள ஒளைவயார் பாடலில்
மன்னனை நாடிவந்த புலவருக்குச் சிறப்பளிக்கும் பொருட்டு ‘கள்’ கொடுத்து மகிழ்ந்தான்
மன்னன்; புலவரும் மன்னனின் விருந்தோம்பும்
பண்பினைப் பெரிதும் பாராட்டியுள்ளார் என்பதறிந்து மகிழ்க.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
தமிழமுது ……………………………………தொடரும் ………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக