சனி, 13 செப்டம்பர், 2025

தமிழமுது –122 – தொல்தமிழர் உணவு –கள்....? .......கள்ளின் தெளிவு …. தேறல்.

 தமிழமுது –122 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்:

கள்ளின் தெளிவு …. தேறல்.

ஞெண்டு ஆடுசெறுவில் தராய்க்கண் வைத்த

விலங்கல் அன்ன போர்முதல் தொலைஇ

வளஞ்செய் வினைஞர் வல்சொ நல்க

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்

இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவீர்.” 460- 464.

 

நண்டுகள் ஆடித் திரியும் வயல்களுக்கு அருகில் உள்ள மேட்டு நிலத்தில் அமைக்கப்பட்ட மலையைப் போன்ற நெற்போர்களை, அடிமுதல்     அழித்துக் கடாவிட்டு, வளமையை உண்டாக்கும் உழவர், வலையர் மகளிர்க்கு நெல்லை முகந்து தருவர். அம்மகளிர், களிப்பு மிகுதியால் அசைகின்ற மிடாவிலிருந்து வார்த்த , பசிய முளையால் ஆக்கிய கள்ளின் தெளிவை ஞாயிற்றின் இளங்கதிர் எறிக்கும் காலத்தில் களங்கள் தோறும் நீவிர் பெறுகுவீர்.

 

(தசும்பு – கள் குடம் ; வாக்கிய – ஊற்றிய ; களமர் – உழவர் ; தேறல் – கள்ளின் தெளிவு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக