தமிழமுது –114 –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
அகநானூறு
: கள்ளுக்கு விலையாக யானையின் தந்தம்.
“வல்வில் இளையர் தலைவர் எல்வுற
வரிகிளர் பணைத்தோள் வயிறுஅணி திதலை
அரியலாட்டியர் அல்குமனை வரைப்பில்
மகிழ்நொடை பெற்றாராகி நனைகவுள்
கானயானை வெண்கோடு சுட்டி
மன்றுஓடு புதல்வன் புன்தலை நீவும்
……………………………………
குறும்பொறை உணங்கும் ததர்வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்.” – 7 – 12 ; 17,18.
ஆறலைகள்வர் தலைவர், இரவில் கோடுகள் விளங்கும் பருத்த
தோள் மீது தேமல் படர்ந்த வயிறு உடைய கள் விற்கும் பெண்கள் வீட்டின்கண் கள்ளுக்கு விலையாகக் கொடுப்பதற்குக்
கைப்பொருள் வேறு இல்லையாகத் தன் மனையிடத்து உள்ள காட்டு யானையின் வெண்ணிறக் கொம்புகளைச்
சுட்டிக் காட்டி அவற்றை எடுத்து வரும்படி அம்பலத்து ஆடித்திரியும் புதல்வனின் புல்லியத்
தலையைத் தடவி ஏவுவார்.
குறுகிய பாறையிடத்து விரைந்த நடையினை உடைய ஒட்டகத்தின் நிலைகொண்ட
பசியினைப் போக்கும் சுள்ளி போன்று காய்ந்து
கிடக்கும் வெண்ணிற எலும்புகள். (எலும்புகளை ஒட்டகங்கள் உணவாகக் கொள்ளும். இஃது ஓர் அரிய செய்தி.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக