வியாழன், 11 செப்டம்பர், 2025

தமிழமுது –121 – தொல்தமிழர் உணவு –கள்..?பனங்கள் ; நெல்லால் ஆக்கிய கள்.

 

தமிழமுது –121 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பட்டினப்பாலை:

 பனங்கள் ; நெல்லால் ஆக்கிய கள்.

“சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்

மடல் தாழை மலர் மலைந்தும்

பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்.

புன்தலை இரும் பரதவர்

பைந்தாழை மா மகளிரொடு

பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது

உவவு மடிந்து உண்டு ஆடியும்.” – 87 – 93.

சிவந்த தலை மயிரினையுடைய பெரிய பரதவர்கள், உவா நாளில் கரிய குளிர்ந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை, அவர்கள் தங்கள் தொழிலில் தோன்றும் ஊக்கம் தவிர்ந்து காணப்படுவர். பசுமையான தழை ஆடை உடுத்திய கரிய , தம் மனைவியருடன் கூடியிருப்பர்.

 பரதவர், சினைகளை உடைய சுறாமீனின் கொம்பை நட்டு, அதில் வலிய தெய்வத்தை நிறுத்தி வழிபடுவர்.

 அவ்வழிபாட்டின் பொருட்டு, விழுதுகளைக்கொண்ட தாழையின் அடிப்பகுதியில் வளர்ந்துள்ள, வெண் கூதாளியின் குளிர்ந்த பூக்களால் ஆகிய மாலையை அணிவர், மடலையுடைய தாழையின் மலரைச் சூடுவர். சருக்கரை உடைய பனை மரத்தினின்றும் எடுக்கப்பட்ட கள்ளை உண்பர், நெல்லால் ஆக்கப்பட்ட கள்ளையும் உண்டு விளையாடுவர்.

(பரதவர், சுறாமீன்களால் தங்களுக்கு எவ்வித இடையூறும் நேராமல் அத் தெய்வம் காக்கும் என நம்பினர். உவவு – உவா நாள் – மதி நிறை நாள் ; காழ் – காம்பு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக