தமிழமுது –130. –
பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.
”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-5.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.
கடல் கொண்ட தென்னாடு:
ஆரிய நாகரிகத்தினும்
தமிழ் நாகரிகம் பன்னூறு மடங்கு பழைமையுடையது என்பதைச் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது
தொடக்கற்ற பழம் பெருமையே காட்டும். திருக்குறளில்
பழங்குடி என்னும் தொடரை விளக்குகையில் பரிமேலழகர், “சேர சோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்ட
குடி.” என்று கூறுவது காண்க.
கி.மு 1000 ஆண்டுகட்கு
முன்னதாகக் கூறப்படும் பாரதப் போரில் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன் இரு படைக்கும்
சோறு வழங்கியதாகப் புறப்பாடல் ஒன்று கூறுகின்றது. இங்ஙனம் பெருஞ்சோறு வழங்கிய காரணத்தால்
இவன் “ பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்” என அழைக்கப்பட்டான். இவனைப் பாடிய புலவரான ‘முரஞ்சியூர்
முடிநாகராயரும்’ இவன் காலத்தவராதலின் பாரத காலந்தொட்டே தமிழிற் சிறந்த பாக்கள் இருந்தமை
மறுக்க முடியாத உண்மையாகிறது.
பாரதக் கதையில் பாண்டியனது தலைநகர் மணவூர் என்று
கூறப்படுவதனால் அஃது இடைச் சங்கத்தினும் பிந்தியது என்றும், வான்மீகியாரின் இராமாயணத்தில்
கவாடபுரமே தலைநகராகக் கூறப்படுவதலால் அஃது இடைச் சங்க காலத்தில் இருந்ததென்றும் தலைச்சங்கம்
இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் மிகப் பழைமையானது என்றும் ஏற்படுகின்றன.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும் …………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக