தமிழமுது –131. –
பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.
”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-6.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.
கடல் கொண்ட தென்னாடு:
இன்றைய உலக
அமைப்புடன் ஒப்பிட்டு நோக்கினால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி இந்துமாக்கடல்,தெற்கு ஆசியா,
பசிபிக்கடலின் தென்பகுதி, ஆஸ்திரேலியா இத்தனையையும் இலெமூரியாக் கண்டம் உள்ளடக்கி இருந்தது.
அந்நாளில் இன்றைய ஆசியாவுன்
பெரும்பகுதியும் ஐரோப்பா,ஆப்பிரிக்கா, அமெரிக்கா இவையும் பெரும்பாலும் சதுப்பு நிலங்களாகவே
இருந்தன. சில பகுதிகள் கடலுள் ஆழ்ந்தும் இருந்திருகக்கூடும்.அந்நாளில் நீர்மட்டத்திற்கு
மேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே. மற்ற இன்றைய
கண்டங்களெல்லாம் நீருள் அமிழ்ந்தும் அமிழாதும் இருந்த சதுப்பு நிலங்களே ஆகும்.
“அழிந்துபோன
இலெமூரியா” என்ற ஆங்கில நூலின் ஆசிரியர்.”
இந்நாளில் இலெமூரியர் அக்கண்டங்களைச் சுற்றிப் பார்த்து அவற்றின் படங்கள் வரைந்து வைத்துள்ளனர்.”
என்றும் அவை இன்றும் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.” ஆனால் அந்நாடுகளுள் ஒன்றும்
அன்று விளைவதில்லை; அன்றி மனித வாழ்க்கைக்கோ உயிர் வாழ்க்கைக்கோ ஏற்றதாக இருக்கவுமில்லை.
ஆகவே, மனித வாழ்க்கைக்கும்
உயிர் வாழ்க்கைக்கும் முதல் பிறப்பிடம் இந்த இலெமூரியாவே ஆகும். மனித நாகரிகத்தின்
தொடக்கமும் இங்கேதான் ஏற்பட்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட நூறாயிரம் ஆண்டுகளாக மனித
வகுப்பு தவழ்ந்து வளர்ந்த தொட்டில் இவ் இலெமூரியாக் கண்டமே எனலாம்.
இலெமூரியாக்
கண்டம் 2,00,000 ஆண்டுகட்கு முன் முதல் 50,000 ஆண்டுகட்குமுன் வரை இருந்ததென்றும்
50,000 ஆண்டுகட்கு முன் பெரும்பாலும் அழிந்ததென்றும் கூறினோம். அதில் மீதியாகித் தமிழ்நாட்டுடன்
ஒட்டிக்கிடந்த பகுதியே குமரி நாடாயிருக்க வேண்டும். இலெமூரியாவை விழுங்கிச் சுவைகண்ட
கடல் இதனையும் சிறிது சிறிதாக விழுங்கி வந்திருக்க வேண்டும்.
ஐயா அவர்களின் இலெமூரியாக் கண்டத்தின் ஆய்வு மிகவும்
பரந்து விரிந்த ஆய்வாகும். ஈண்டு அவ்வாய்வின் சுருக்கம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும் …………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக