ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

தமிழமுது –117 – தொல்தமிழர் உணவு –கள்..?மகளிர் நடத்தும் கள்ளுக்கடை

 

தமிழமுது –117 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

 

பத்துப்பாட்டு: பெரும்பாணாற்றுப்படை

 

மகளிர் நடத்தும் கள்ளுக்கடை

 

 கள் விற்கும் இடம் என்பதைக்குறிக்க அடையாளக் கொடி (பச்சைக்கொடி) பறக்கவிடுவதும் ; கள்ளை வீட்டிலேயே பெண்கள் சமைத்தலும் ; ஆண் பன்றிக்கு அரிசி மாவு கொடுத்துக் கொழுக்கச் செய்து தசையை உண்ணுதலும் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம். தோப்பி நெல்லால் சமைத்த கள்.

 

 ”முட்டு இல் …..

பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயில்

செம்பூத் தூஉய செதுக்கடை முன்றில்

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய

வார்ந்தூகு சில்நீர் வழிந்த குழம்பின்

ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்

பல்மயிர் பிணவொடு பாயம் போகாது.” – 337 – 343.

 

 கள்ளுக்கடையில் கள் உண்பதற்காகப் பலர் புகினும் கள், இல்லை என்னாது தட்டுப்பாடில்லாமல் வழங்கும் வாயில், பச்சை நிறக் கொடிகள் அசைகின்ற, செதுக்கி அழகுடன் அமைந்த புல் படர்ந்த செவ்விய மலர்கள் தூவப்பட்ட முற்றத்தினைக் கொண்ட இடம்; கள் உண்ணப் பலரும் புகும் வாயில். கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதனால் வடிந்தநீர் குழம்பி ஈரமாகிய சேற்றினை அளைந்து கொண்டிருக்கும் கரிய பல குட்டிகளையுடைய பெண் பன்றிகள் அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து, நெல்லை இடித்து மாவாக்கி அதை  உணவாக்கிக் கொடுத்துப் பல நாளும் குழியிலே நிறுத்தி வளர்த்த குறிய காலையுடைய ஆண் பன்றியின் கொழுத்த கொழுப்புக் கறியுடன் களிப்பு மிக்க கள்ளையும் முட்டுப்பாடில்லாமல் பெறுவீர்.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக