தமிழமுது –.87. – பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
; புராணமும் வரலாறும்.
தமிழகத்திலே புராண மரபுகளிடையே புராண மரபுகளாகப்
பல வரலாற்று மரபுகள் மயங்கியுள்ளன. அதே சமயம் பல புராணமரபுகள் வரலாற்று மரபுகளாக மதிப்புப்
பெற்றுள்ளன. பழமையின் வான விளிம்புலேயே இவற்றின் மயக்கங்கள மிகுதி.
எடுத்துக்காட்டாகத் தமிழ் மூவேந்தர்களுடைய தலைசிறந்த
முன்னோர்களின் அருஞ்செயல்களே. தமிழர்பெருந் தெய்வங்களின் புகழ் மரபுகளாக உலவுகின்றன.
சிறப்பாகப் பாண்டியர் வாழ்வுடன் சிவபெருமானும், சேரர் வாழ்வுடன் முருகனும் சோழர் வாழ்வுடன்
திருமாலும் இணைகின்றனர்.
மலைய மலைக்குரிய மன்னனாகிய பாண்டியன்
வளர்த்த முத்தமிழ் நங்கையே மூன்று மார்பகங்களையுடைய தடாதகைப் பிராட்டி அல்லது மலைமகளாகவும்
அவளை மணந்த செளந்தரபாண்டியனே சிவபெருமானாகவும் அவர்கள் பிள்ளை உக்கிரபாண்டியனே முருகனாகவும்
திருவிளையாடற்புராணத்திலே காட்சியளிக்கின்றனர். பல ஆராய்ச்சியாளர் செளந்தரபாண்டியனை
நிலத்தரு திருவிற் பாண்டியன் அல்லது தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகவும்
உக்கிரப் பாண்டியனை கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியாகவும் காண்கின்றனர்.
கடன்மா (கடலில் விரைந்து முன்னேறும் மரக்கலம்.)
ஊர்ந்து சென்று கடற் கடம்பரை அழித்த சேரரின் பெருஞ்செயலிலே நாம் முருகன் வீரப்புகழ்
மரபைக் காண்கிறோம். கடல்பிறக்கோட்டிய செல்கெழு குட்டுவனின் இச்செயலை வருணிக்கும் பரணர்
புராண மரபினை உவமையாக க் காட்டத் தவறவில்லை. இக்குட்டுவனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ
முருகனாகவும் ‘கடம்பின் வாயில்’ போரில் அவனால் முறியடிக்கப்பட்ட பெண்கொலை புரிந்த நன்னனோ
அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ சூரபன்மனாகவும் உருவகப்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.
கடவுளராகக் காட்சியளிக்கும் காவலர்:
Pl. donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக