தமிழமுது –.91. – பன்மொழிப் புலவர் கா.
அப்பாத்துரையார் ; புராணமும் வரலாறும்.
இந்த
நாகர்கள் யார்..?
இந்த நாகர்கள் யார்? எந்த இனத்துடன் நெருங்கிய
தொடர்புடையவர்கள்? இவர்கள் பண்டைப் பெருவாழ்வு அழிந்து உலகெங்கும் இன்று சிறுமையுற்று
நலிவானேன்..?
இன்னும் ஆராய்ச்சி உலகம் தெளிவாக
வரையறுக்க முடியாத கேள்விகள் இவை ! ஆயினும் ஆராய்ச்சிக்கு இங்கே வழிகாட்டல் முடியாததன்று.
நாகர்களுக்கென்று இன்று தனி மொழி எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை. அவர்கள் சில இடங்களில் திராவிட மொழிகளையும் சில இடங்களில் வேற்றின மொழிகளையும்
பேசுகின்றனர். ஆனால் எங்கும் அவர்கள் நாகரிகம் ஒன்றே..! எங்கும் அவர்கள் தம்மை நாகர்கள்
என்றே கூறிக்கொள்கின்றனர்.
பாம்பு என்ற பொருளில் இப்பெயர் தமிழுக்கும்
சஸ்கிருதத்துக்கும் பொதுவான பெயரேயாகும்.ஆனால் நாகமரபினரின் கிளையினத்தவரான வில்லியர்
முதலிய பெயர்கள் தென்னாட்டிலிம் வடைந்தியாவிலும் ஒருங்கே “வில்” எனற தமிழ்ச் சொல்லடிப்படையான
தமிழ்ப் பெயராகவே காணப்படுகின்றன. உலகில் நாக இனத்தவர் பரவி வாழும் அல்லது வாழ்ந்திருந்த
பெரும் பரப்பை நோக்கினால் அவர்கள் தமிழகத்தையே மையமாகக் கொண்டு தமிழ் மொழியையே மூலமொழித்
தளமாகப் பெற்று கடல் வழியாகவே உலகில் படர்ந்த ஓர் உலகக் கடலோடி இனத்தவர் ஆவர்.என்று
காணலாம்.
நாகர் தமிழ் இனத்தவரே..!
நாகர்கள் உண்மையில் தமிழகத்தின்
நாற்புரமும் செந்தமிழ் அல்லது திருந்திய தமிழ் பரவாத இடங்களீல் உள்ள தமிழினத்தவர்களே. செந்தமிழ் பரவாத
இடத்திலேயே ஆரிய முதலிய பிற இனத் தாக்குதல்கள் எளிதாகத் தமிழினத்துடன் கலக்கவும் முடியவில்லை. இக்காரணத்தால் அவர்கள் மதிப்பில் குறைந்து
அடிமைப்பட்டனரேயன்றி, பண்பாட்டில் எளிதில் மாறவில்லை. தமிழகம் சூழ்ந்த திராவிட இனத்தவர்கள்
மட்டுமின்றி சிங்களர், வங்காளர், பர்மியர், மலாய்மக்கள், திபெத்தியர், நேபாள காசுமீர
மக்கள் ஆகிய பலரும் இந்நாக மரபினரேயாவர். இந்தியா
முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள், கோயில் குருக்களாகவும், மருத்துவ, மந்திர சோதிட
வாணர்களாகவும் உள்ள வகுப்பினர் நாகர்களே என்று கருத இடமுண்டு.
நாகர் தமிழ் இனத்தவரே ..2.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக