தமிழமுது –.89. – பன்மொழிப் புலவர் கா.
அப்பாத்துரையார் ; புராணமும் வரலாறும்.
கனவேயாயினும் வியத்தகு கனவே ..!
இருபதாம் நூற்றாண்டில் நாம்
வானூர்திகளையும் பறக்கும் கோட்டைகளையும் பற்றிக்
கண்டும் கேட்டும் வருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்தம் நாளிலும்
பழஞ்செய்திகளாக இவற்றைக்கூறும்போது, அவை தமிழன் கண்ட கனவுகளாய் இருந்தால் கூட வியத்தகு
கனவுகளேயாகும் என்பதில் ஐயமில்லை. தமிழன் கனவில் கண்ட இந்த வாகனப் போர்க்காட்சி அவனது
அரை வரலாறு, அரைப் புராண மரபில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளாகவும் காட்சி தருகின்றது.
இதிலும்
விந்தையென்னவென்றால் கனவில் கூடத் தமிழ் அரசனோ, தமிழ்த் தெய்வமோ பறந்த்தாகத் தமிழன்
கற்பனை செய்யவில்லை. அந்த அரசன் எதிரிகளும் அந்தத் தெய்வத்தின் எதிரிகளும்தாம் பறக்கும்
கோட்டை அல்லது பறக்கும் நகரங்களை ஆண்டனர். வாகனப் போரின் புகழை அவ்வரக்க எதிர்களுக்கே
தந்துவிட்டு, தன் அரசனுக்கும் தெய்வத்துக்குள் தமிழன் வெற்றிப் புகழை மட்டுமே தந்தான்.
தமிழரசர், தமிழ்த்தெய்வங்கள் பறக்கும் வித்தையைக் கற்றுக் கொள்ளா விட்டாலும், அதைக்
கற்றவரை அழிக்கக் கற்றுக்கொண்டிருந்தனர் போலும்.
வாழ்விலே கண்டதன்றிக் கனவிலே எதுவும் தோன்றுவதில்லை என்பர்.
கண்ட்தைக் கனவு மிகைப்படுத்தலாம் திரிக்கலாம் ஆனால் குறைந்த அளவு கண்டதை அல்லது காண
அவாவியதை அல்லது கண்டஞ்சியதைத்தான் அது உருவகப் படுத்தமுடியும். அப்படியானால் இக்கனவின்
மூலம் தமிழர் பழமையில் வருங்கால ஆராய்ச்சி ஒருபடி முன்னேற வழி காணக்கூடும் எனலாம்.
நாகமரபு:
Pl. donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக