தமிழமுது –101. – அபதானி பழங்குடியினர்
தமிழர்களோ….? -2.
இந்தியப் பழங்குடியினராகிய
அபதானி மக்கள் குறித்த மேலதிகச் செய்திகளை டிஸ்கவரி
தமிழ்த் தொலைக்காட்சியில்
9 -1.2010, ஆம் நாள் கண்டேன். அச்செய்திகளைத் தொகுப்புரையாகக் கீழே காணலாம்.
அபதானி மக்கள்
தங்கள் சாதிக்குள் பெண் எடுப்பதில்லை. மாப்பிள்ளைப் பெண்ணுக்குப்
பரிசு கொடுத்தல் ; பெண் வீட்டில் விருந்துண்ணல் ; சீர் செய்தல் முதலிய நிகழ்வுகள் நடைபெறும்.குழந்தை பிறந்த
பின்தான் முறைப்படி திருமணம் நடக்கும்.
இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இல்லை ; புதைத்து
விடுவர். புதை குழியுள் இறந்தவர்க்கு வேண்டிய பொருள்களை போடுவார்கள்.
பச்சை மூங்கிலில் பாடை கட்டி, இருவர் மட்டுமே தூக்கிச்
செல்வர்.
அபதானி
மக்களின் பழக்க வழக்கங்களைப் பார்க்கும்போது அவையாவும் தமிழர்தம் பழக்க வழக்கங்களை
ஒத்திருப்பதைத் தொலைக்காட்சியில் கண்டேன். ஒரு குழுவாக இடம்பெயர்ந்து
வாழ்ந்து வருவதால்அவர்கள் தங்கள் முன்னோர் வழியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இறந்தவர்க்குச் செய்யும் சடங்குகள் பழமை மாறாமல் அப்படியே அவர்கள்
மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குறித்துள்ள
தொலைகாட்சியினரின் கள ஆய்வில் கண்ட செய்திகள் முழுமையாகப் பெற இயலவில்லை. எனினும் மேலும் அபதானி பழங்குடியினரின் மொழி,
திருமனச் சடங்குகள், மகப்பேறு நிகழ்வுகள்,
இன்னபிற அவர்தம் வாழ்வியல் நெறிகளை ஆராய்ந்து அபதானி மக்கள் தமிழ் இனத்தவரே
என்று உறுதி செய்ய வேண்டியுள்ளது.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக