புதன், 6 ஆகஸ்ட், 2025

தமிழமுது –.90. – பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் ; புராணமும் வரலாறும். நாகமரபு:

 

தமிழமுது –.90. – பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் ; புராணமும் வரலாறும்.

 நாகமரபு:

புராண மரபில் மறைந்து அல்லது மரைக்கப்பட்டுக் கிடக்கும் இன்னும் சில செய்திகளை இது, நம் நினைவுக்குக்கு கொண்டுவரக்கூடும். இந்தப் பறக்கும் கோட்டைகளுக்கு உரியவர் தமிழ் இனத்தவராலும் ஏனை இனத்தவராலும் நாகர்கள் என்று குறிக்கப்பட்டவரே யாவர் என்று ஊகித்தல் தவறல்ல.

 

தமிழர் பெரு நகரங்களைக் கட்டியவர்கள் என்று தமிழிலக்கியங்களும் பாண்டவர் தலைநகரைக் கட்டியவர்களென்று பாரதமும் புகழ்வது இவ்வினத்தவரையே. அவர்கள் தமிழகத்திலும் தென்னாட்டிலும் மட்டுமின்றி, இலங்கையிலும், வட இந்தியாவிலும் கீழ்கடல் தென்கிழக்காசியக் கடல் தீவுகளிலும் அன்று வாழ்ந்தார்கள். இன்றும் அதே இடங்களில்தான் இவர்கள் வாழ்கிறார்கள். அசாமில்  தம் இனத்துக்கெனத் தனி நாடு கோருமளவு அவர்கள் இன்றும் தனி வாழ்வும் தனிப் பண்பும் உடியவர்களாகவே உள்ளனர்.

 

ஆரியர்க்குச் சமஸ்கிருத எழுத்தை முதன் முதலில் ஆக்கித்தந்தவர்கள் என்றும் நாகரிகம் கற்ப்பித்தவர்கள் என்றும் நாகர்களை ஆராய்ச்சியறிஞர் போற்றியுள்ளனர். உலகில் முதல் கடலுள் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்றும் பாம்புகள் போலவும் எறும்பிகள் போலவும் நிலத்தின் கரு அகழ்ந்து பொன், வெள்ளி முதலிய உலோகங்களைக் கண்டவர்கள் என்றும் அருங்கலை வேலைப்பாட்டில் சிறந்தவர்கள் என்றும் கருதப்படுபவர்கள் அவர்கள். இன்றுங்கூட இத்தொழில்களில் உலகெங்கும் இவ்வினத்தவரோ அல்லது அவர்களுடன் குரிதி கலப்புடையவர்களோ தான் திறம்பட ஈடுபட்டு உழைக்கின்றனர். என்று கேள்விப்படுகிறோம்.

 

உலகெங்கும் பாம்பு வழிபாட்டைப் பரப்பியவர்களும் இந்த நாகர்கள் என்றே கருதப்படுகிறது. இது அவர்கள் முற்காலப் பொதுப் பரப்புக்கு மட்டுமின்றி,  மலையாள நாட்டில் சிறப்பாகப் பரவிய செறிவுக்கும் சான்று ஆகும். பாம்புக்காட்டு நம்பூதிரிகள் என்று கூறப்படும் மலையாள நாட்டுப் பழம் பிராமணர்கள் அல்லது திராவிடப் பழங்குடி மக்கள் உண்மையில் பண்டை நாகரின் பெருங்குடி மரபினரே யாவர்.

 

புத்தர் பிறந்த சாக்கியர் குடி, நாக மரபு சார்ந்ததென்று அவர் பிறப்பிடத்தின் அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன. புத்த நெறி வங்கத்திலும் தென்னாட்டிலும் இலங்கையிலும் பர்மாவிலும் சீனாவிலும் விரைந்து பரவியதற்கு இவ்விடங்களில் உள்ள மக்களில் பெரும் பகுதியினர் நாகமரபினராக இருந்ததே தலையான காரணம் என்று கூறப்படுகிறது.

 இந்த நாகர்கள் யார்..?

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக