தமிழமுது –.95. –தொல் தமிழர்களாகிய நாகர்கள்
: இலங்கை :!.
நாகர்களது குடியிருப்பு
முதன்மைக்
கட்டுரை: நாகர்
(தமிழகம் மற்றும் இலங்கை)
விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும்
அயலிலுள்ள தீவுகளும், திருமலை, வன்னி, மன்னார், மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப்
பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாடும்
அயல்தீவுகளும் ‘நாகதீபம்” என்ற
பெயருக்கேற்றவாறு, கதிரமலையில் தனது தலைநகரைக் கொண்ட,
ஒரு நாகர் அரசின் கீழ் இருந்தன. முதலியார் திரு.செ.இராசநாயகம்,
தமது “யாழ்ப்பாணச் சரித்திரம்” (1933) என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார். “இத்தீவுகளிலும்,
இலங்கையின் மேற்பாகத்திலும், சரித்திர
காலத்துக்கு முந்தியே நாகர் எனும் ஒரு சாதியார் குடியேறியிருந்தனர்.
இத்தீவுகளுக்கு இப்போது கந்தரோடை என்று அழைக்கப்படும் கதிரமலையே
இராசதானியாகவிருந்தது.”
நயினார்தீவும், ஏனைய யாழ்ப்பாணத்
தீவுகளையும் யாழ் குடாநாட்டையும் போன்று, சரித்திர
காலத்துக்கு முன்னர் - அதாவது விசயன் வரவுக்கு முன்னர் - நாகர்களது ஒரு
குடியிருப்பாக இருந்திருக்கலாம். அல்லது, சில நூற்றாண்டுகள்
கழித்து, நாகர்கள் நாகதீபத்தில் (யாழ்.குடாநாட்டில்) இருந்தோ
அல்லது அயல் தீவுகளில் இருந்தோ நயினாதீவில் குடியேறியிருக்கலாம். எங்கிருந்து
அவர்கள் வந்தனர், எப்போது வந்தனர் என்பதைத் திட்டவட்டமாகக்
கூறமுடியாவிடினும். முதன் முதலாக நயினாதீவில் குடியேறிய மக்கள் நாகர்கள் என்பது
சந்தேகமறப் புலப்படுகின்றது. நயினார்தீவு, நாகதீவு, நாகதிவயின, நாகநயினார்தீவு, ஆகிய
நயினாதீவுக்கு வழங்கப்பட்ட தொன்மைவாய்ந்த பெயர்களும் இவ்வுண்மையை மேலும்
உறுதிசெய்கின்றன. (இணையத் தரவுகள்)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக