தமிழமுது –109. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
பரிபாடல் :
கள்ளின் களிப்பும்
; காமக் களிப்பும்.
”காமம் கணைந்து எழ கண்ணின் களி எழ
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
கள்ளின் களி எழக் காத்தாங்கு…” 10: 63 – 65.
நெஞ்சத்திலே காமம் மிக்கு எழ, அதனானே தம் கண்களிலே அக்காமக் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படும்படி
தோன்றும் , அதனை அறிந்து ஊரில் உள்ளார் அலர் தூற்றுவாரோ என்று அஞ்சி காமக் களிப்பினைப்
பிறர் அறியாதபடி மறைக்க முயல்வார் நிலைமை கள் உண்டவர் தம்பால் கள்ளின் களிப்புப் புறத்தார்க்குப்
புலப்படத் தோன்றி நிற்க , தம் மனம் துன்புறும்படி ஊரவர் பழிப்பாரோ என்று அஞ்சி, அதனைப்
பிறர் அறியாமல் மறைக்க முயலும் முயற்சியே – கள் உண்ட களிப்பினை யாவரும் அறியும்படி,
தாமே பரப்பிப் பின் உலகம் பழி தூற்றலைக்கேட்டு உள்ளம் நடுங்குவர்.
தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பினை மறைப்பவருடைய நிலைமை கள்ளுண்டு
அதனால் உண்டாகிய களிப்பை மறைப்பவருடைய நிலைமையை ஒக்கும்.
(கணைந்து – மிகுந்து ; மன்னுமஞ்சி – மிகவும் அஞ்சி
; உளை – துன்பம் . )
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக