திங்கள், 11 ஆகஸ்ட், 2025

தமிழமுது –.94. –தொல் தமிழர்களாகிய நாகர்கள் : இந்தியா -2 :

 

தமிழமுது –.94. –தொல் தமிழர்களாகிய நாகர்கள் : இந்தியா -2 :

 

வரலாறு

இதனையும் பார்க்க: நாகா மக்கள், இந்தியா

நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும்பொ.ஊ. 1228ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாகா மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன.

'நாகா' என்ற சொல்லின் தோற்றம் கூட தெளிவாக இல்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்தாக, இந்தப் பெயர் பர்மிய சொல்லான 'நாக' அல்லது 'நாகா' என்பதிலிருந்து உருவானது, அதாவது காதணிகளைக் கொண்ட மக்கள் என்பது இதன் பொருள். வேறு சிலர் அதை குத்தப்பட்ட மூக்கு என்று பொருள் கூறுகின்றனர்.[6] நாக்கா (naka) மற்றும் நாகா (naga) இரண்டும் பர்மாவில் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகிறது.[7] நாகாலாந்தின் பழங்கால பெயர் 'நாகனச்சி' அல்லது 'நாகன்சி', இது நாகா மொழியிலிருந்து வந்தது.[8]

தெற்காசியாவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் வருகைக்கு முன்னர், நாகா பழங்குடியினர், மீட்டி மக்கள் போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் மீது பர்மியர்களால் பல போர்கள், துன்புறுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படையெடுப்பாளர்கள் "தலையை வெட்டி வேட்டையாடவும்", இந்த பழங்குடி இனத்தவரின் செல்வங்களையும் தேடி வந்தனர். வடக்கு இமயமலையில் வாழும் மக்களைப் பற்றி பர்மிய வழிகாட்டிகளை பிரித்தானியர் கேட்டபோது, அவர்கள் 'நாகா' எனக் கூறினர். இது 'நாக' எனப் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு பயன்படுத்தப்பட்டது.

பிரித்தானிய இந்தியா

நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரித்தானியர் 1832இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன.

பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 1879இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கோகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று. (இணையத் தரவுகள்)

.Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக