தமிழமுது –102. – தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
பழமொழி எத்தனை ஆயிரம்
ஆண்டுகள் பழமையானதோ? பழமொழிகள் பாமரர்கள் உருவாக்கும் அரிய பெரிய இலக்கியமாகும் ; உண்மைகளைக் காலங்கள் மாறினாலும் கருத்து மாறாமல் மக்களுக்கு உணர்த்திக்கொண்டே
இருக்கின்றன.
அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமே நஞ்சாகும் ; உணவாயினும் உடற்பயிற்சியாயினும் எதுவாயினும்
அளவோடு துய்த்தல் வேண்டும். உடலியக்கம்கூடச் சீராக இருத்தல் நன்று
; ” மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்றார்
வள்ளுவர்.
கள்:
கள் எனும் சொல் – நற, நறா, நறவு, தேறல் எனும் பெயர்களில் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.
கள், ஓர் இயற்கை நீர்மம் தென்னங்கள்,
பனங்கள் ஈச்சங்கள், இவைதவிர,அரிசி கொண்டு
சமைத்துண்ணும் கள்ளும் உண்டு.
.
திருவள்ளுவர் மருந்து என்றோர் அதிகாரம் படைத்து
உணவே மருந்து என்று கூறியுள்ளார். அவரே கள் உண்ணாமை என்றோர் அதிகாரம் படைத்து ”உண்ணற்க
கள்ளை” என்று கட்டளையிடுகின்றார். கள்ளை நஞ்சுக்கு ஒப்பாக ”நஞ்சுண்பார் கள் உண்பவர்” என்றும் கூறியுள்ளார்.
எனவே எவ்வகையானும் கள் உணவாகாது என்றே அறிக.
தொல்தமிழர் வாழ்வில் கள்
களிப்பு மிகுதிக்கு உரமாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. விழாக் களத்திலும் வெற்றிக் கொண்டாட்டங்களிலும்
கள் குடித்து மகிழ்ந்துள்ளனர். கள் குறித்துக்கூறும் சங்கஇலக்கியக் கருத்துகளைக் காண்போம்.
நற்றிணை:
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக