சனி, 1 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -69

மெய்ப்பொருள் காண்பது அறிவு -69
சோதிடத்தின் மகத்துவம்
சோதிடம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சோதிடத்தின் துணஒயின்றி அன்றாட அலுவல்களைச் செய்யமுடியாத மன ஊனமுற்றோர் பலர். இவர்களுடைய எதிர்பார்ப்புகள் மிகவு சிக்கலானவை….! அவையாவன…
இவர்கள் இன்றோ நாளையோ இறந்து விடக்கூடாது.
உழைக்காமல் பொருள் வர வேண்டும்.
பிறருக்குக் கொடுக்காமல் புகழ் பெறவேண்டும்.
பூமியில் கிடைத்த சுகங்கள் யாவும் ‘மோட்சத்திலும்’ கிடைக்க வேண்டும். அவ்வளவுதான்.
சோதிடத்தின் மகத்துவத்திற்கு அடிப்படையாக அமைவது எதிர்காலத்தைப்பற்றிய கற்பனையான அணுகுமுறையே.
 “ ஜோசியங்கள் உண்மைபோலவே தோற்றம் அளிக்கின்றன. அவற்றில் பெரும்பாலான கூறுகள் மழுப்பலானவை ; பொதுப்படையானவை. எல்லாக் கால்களுக்கும் பொருந்தும் நைலான் காலுறைகளைப் போல இழுத்த இழுப்புக்கு வருகிறவை.ஆனால் அவை தமக்கு மட்டுமே உரியவையாகக் கண்டுபிடிக்கப்பட்டவை என்ற பிரமையை வாடிக்கையாளர்களுக்கு உண்டாக்குவதுதான் “ஜோசியரின்” சாமர்த்தியம். இந்தப் பிரமைக்கு உளவியலார் பார்னம் உத்தி (Barnum Effect) என்று பெயரிட்டுள்ளனர்.”  –இரெ. குமரன்.... தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக