சனி, 15 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -79

மெய்ப்பொருள் காண்பது அறிவு -79
 சமணம்
கருத்து முதற்பொருள்
ஆத்மாவில் ஏற்படும் அறிவுக்குப் பொருளாகப் புறத்தே பொருள்கள் இருக்கின்றன என்பதை நுணுகி நோக்கி ஆராயின் அப்பொருள்கள் நம் எண்ணத்தில் மட்டுமே இருக்கின்றன என்பது புலனாகும். இக்கூற்றைக் கருத்து முதல்வாதம் என்பர்.
மெய்ம்மை முதற்பொருள்
இக்கொள்கையைத் தருக்க முறையில் மறுத்து உலகம், பொருள்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை நம் கருத்துகள் அல்ல. அவை யாவும் புறத்தே மெய்யாகவே உள்ளன எனக்கொள்வதே மெய்ம்மை முதற்பொருள் அல்லது எதார்த்த வாதம் என்பர்.
சமணர் நிலை.
கிரேக்கத்தின் பிளாட்டோ, செர்மனியின் காண்ட். கெகல், இந்தியாவில் சங்கரர் ஆகியோர் கருத்து முதல்வாதிகள். சமணர்கள் எதார்த்தவாதிகள் / உலகத் தோற்றத்திற்கு மூலப் பொருள்கள் பல எனக் கொள்ளும் மெய்ம்மையாளர்கள்.
சமணர்கள் கொள்கைப்படி உலகம் தெளிவான இரு பிரிவுகளில் அடங்கும் ; ஒன்று, உயிர் மற்றொன்று உடலும் ஏனைய சடப் பொருள்களும்.அஃதாவது ஒன்று சீவன் மற்றது அசீவன்.
ஆத்மா
உலகாயதர் போல ஆத்மாவே இல்லியெனக் கொள்ளாது, வேதாந்திகள் போல ஒரேயொரு ஆத்மாவே உள்ளது எனவும் கொள்ளாது, ஆத்மாக்கள் உள ; அவை பல எனக்கொள்கின்றனர் சமணர்கள்.
சீவன் அல்லது உயிருக்குப் பருமனும் அளவும் குறிக்கின்றது சமணரது தத்துவம். உயிர் எந்த உடலைத் தனக்கு உறைவிடமாகக் கொள்கின்றதோ அந்த உடலின் பருமனுக்கு ஏற்பத் தன்னைக் கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது என்பர்.
--தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக