புதன், 12 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -76

மெய்ப்பொருள் காண்பது அறிவு -76
சித்தர்கள்
உழைத்து முன்னேறிய மாந்தர் இனம் இயற்கையின் போராட்டங்களை எதிர்க்க வேண்டிய காலத்தில் இயற்கை நேர்வுகட்கும் இயற்கை உயிரிகட்கும் அஞ்சினான் ; அவற்றை வென்றான். அச்சத்தினின்றும் வெற்றியினின்றும் வழிபாடுகள் தோன்றின, சமயங்கள் மலர்ந்தன, மதங்கள் மண்டின.
   காலம் வளர வளர மாந்தனுடைய அறிவு வளர்ந்தது, பகுத்தறிவு இயற்கையில் இருக்கிறது, இயற்கைக்கு அப்பால் ஒன்றுமில்லை என்று உணர்ந்தனர். இயற்கையை வென்று வென்று வீறு கொண்டு எழுந்த மாந்த இனத்தின் பட்டறிவின் கண்டுபிடிப்பே, அன்பும் உண்மையும். இவையே மாந்தர் அனைவரையும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டில் இணைத்தன.”
–த. கோவேந்தன்.
திருமூலர்
“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. குறள்.331.
நிலையில்லாதவற்றையெல்லாம் நிலைத்து நிற்பன என்று எண்ணும்  அற்ப அறிவே இழிவை உண்டாக்கும். புகழைத் தவிர, யாக்கை, செல்வம் இன்னைபிற யாவையும் நிலைத்து நிற்கா.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள். 336.
 நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் உண்மைநிலையே இவ்வுலக வாழ்வு. …..தொடரும்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக