எனைத்தானும்
நல்லவை கேட்க ……………..!-1 (குறள்.416)
” யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
……………………………………………………………………………………… புறநானூறு
(192)
2.
3. எழுத்தாளர் 3.3ஆ பதில்களையும் 4.4மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்2 வருடம்
4. முதலில்
பதிலளிக்கப்பட்டது: கணியன்
பூங்குன்றனார் பிறந்த ஊர் மகிபாலன்பட்டி இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது இந்த
ஊரின் சிறப்புகளை பகிர முடியுமா? எல்லோரும்
கருத்துக்கள் முக்கியமானது அல்லவா?
5.
1.மகிபாலன்பட்டியில், சிறிய
குடைவரைக்கோவில்கள் இரண்டு உள்ளன. இக்கோவில்கள் , கி.பி ஒன்பதாம்
நூற்றாண்டில், பாண்டியமன்னர்களால்
உருவாக்கப்பட்டன. ஒன்றின் கருவறையில், சதுரவடிவ யோனியோடு
கூடிய சிவலிங்கச் சிற்பம் காணப்படுகிறது. இதன்மூலம் குடைவறைக்கோவில்களுள்ள இந்திய
நாட்டின் மிகச்சில ஊர்களுள் ஒன்று என்ற பெருமை மகிபாலன்பட்டிக்குக் கிடைத்துள்ளது.
6.
2. சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவரான பண்டிதமணி.
மு.கதிரேசன்செட்டியார் அவர்கள் இந்த ஊரில்தான் பிறந்தார். மாற்றுத்திறனாளி
தமிழ்ப்புலவர்கள் மிகச் சிலருள் இவரும் ஒருவராவார். பள்ளியில் ஓராண்டுகூட பயிலாமலே, தாமே கற்றும், அறிஞரிடம்
பாடங்கேட்டம் பேரறிஞராகி, அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். வடமொழியிலும் வல்லுநரான இவர், பல வடமொழி நூல்களைத், தமிழில்
மொழிபெயர்த்தார். பல சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த சொற்பொழிவாளராகவும்
திகழ்ந்தார்.
7.
3.மகிபாலன்பட்டியின்
பழையபெயர் "பூங்குன்றம்" என்பதாகும். இந்த ஊர், அமைந்திருந்த நாடும்
"பூங்குன்ற நாடு" என்றே அழைக்கப்பட்டது ஆச்சர்யமான விஷயம் . பூங்குன்ற
நாட்டில், 24 கிராமங்கள் இருந்தன. தற்போதும், இதன் தொடர்ச்சியாகவே
மகிபாலன்பட்டியிலுள்ள "ஶ்ரீ பூங்குன்ற நாயகி" அம்மன் கோவில் திருவிழாவை, 24
கிராமமக்களும்
கோலாகலமாக ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
8.
4. ஏழு சிவன்கோவில்கள் மகிபாலன்பட்டியில் இருந்துள்ளன.
தற்போது இவை, சிதிலமடைந்த
நிலையிலும், மறைந்துவிட்ட
நிலையிலும் இருந்தாலும், குறுகிய
நிலப்பரப்பு கொண்ட ஊரில், ஏழு
சிவாலயங்கள் அமையப்பெற்றிருந்த சிறப்பு இந்த ஊருக்கே உரிய தனித்துவங்களுள்
ஒன்றாகும்.
9. 5. சமணமதமும், ஒருகாலத்தில், மகிபாலன்பட்டியில்
தழைத்தோங்கி இருந்தது. இதற்குச் சான்றாக, ஐந்தடி உயர
சமணச்சிற்பம் ஒன்று, இவ்வூரில்
காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக