ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 16. ஆய்தம் –எழுத்தாய்வு – 6.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 16.

ஆய்தம்எழுத்தாய்வு – 6.

ஆய்தம் – முப்பாற் புள்ளியா…ஒரு புள்ளியா..?

ஆய்தப்புள்ளி என்ற எழுவாய்க்கு மிசைத்து என்ற ஒன்றன்பால் வினைமுற்று இருத்தலின் புள்ளி ஒன்றே என்பதும் குறியதன் முன்னரும் ஆறன் மிசைத்தும் என்பதனால் நடுவே இடப்பக்கத்து அடுத்து நிற்கும் என்பதும் போதரும். காண்க : எ.கு, க.சு, அ.து, தத்தமிசைகள் ஒத்தன என நூன் மரபிலும் வகாரமிசையும் எனப் புள்ளி மயங்கியலிலும் அத்தும் ஆன்மிசை என அவ்வியலிலும் இடப்பக்கத்து அடுத்து என்ற பொருள்பட வருதலையும் உணரலாம்.

இம்மூன்றும் சார்ந்துவரும் ஒலிநிலையில் மட்டும் ஓரினம் அல்ல. புள்ளிபெறும் வடிவிலும் ஓரினப்படும் என்று உடன் தெரிவிக்கவே முப்பாற்புள்ளி என்றார். எனவே ஒவ்வொன்றும் புள்ளிபெறும் என்பது தெளிவு. குற்றியலிகரம் குற்றியலுகரம் உரிய இகர உகர வடிவின் மேல் ஒரு புள்ளிபெறும்.  மியா0, நாடு0 எனவரும் முதலெழுத்து வடிவினவே இவற்றின் வடிவன். புள்ளிமேலேபெறுவது சார்பு காட்டுவதாகும்.

எனவே ஆய்தம் ஒரு புள்ளியே பெறும் என்பதாம். எ . கு,  அ .           றிணை,        வெ . கு  எனவரும்”  என்பார் அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

முடிவுரை

கணக்கியலில் சமன்பாடுகள் (குறியீட்டில்) ஃ ( ) என்று குறிக்கப்படுகிறது.

சுருக்கெழுத்திலும் கணக்கிலும் பயன்படும் இந்த முப்பாற்புள்ளி  விளக்கத்தையும் விடையையும் இணைக்கும் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீடு ஜான் ரன் என்பவரால் 1659 இல்  முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தமிழில்  உள்ள ஃ  ஆய்தம் ஆங்கிலத்தில் ஒரு சிறப்புக்குறியீடாக  அமைகிறது ..ஆய்க.

முற்றும்.

சனி, 29 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 15. ஆய்தம் –எழுத்தாய்வு – 5.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 15.

ஆய்தம்எழுத்தாய்வு – 5.

பிராமி-ஆய்தம்

தமிழ் வட்டெழுத்து வடிவுடைய அசோகரின் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் (Ashoka’s 6 th. Pillar edict, 3rd century BC.) புள்ளியுடைய எழுத்துக்களும் ஆய்தமும் இடம் பெற்றுள்ளன. ஆய்தம்ஃ0 இன்றைய ஆய்தக்குறி போலின்றி மேலும் கீழும் சுழிபெற்று வலது பக்கம் ஒரு புள்ளியுடையதாய் இருந்தது.

ஆய்தப்புள்ளி கி.மு. 300இல் இகரம் இன்றுள்ளதைப் போலவே ஃ முப்பாற்புள்ளியாகப் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அசோகர் காலத்தில் கி.மு. 265 – 232 இல் இம்முப்பாற் வடிவம் 0ஃ மேலும் கீழும் புள்ளியுடன் இடது பக்கம் புள்ளியுடன் மாற்றம் பெற்றுள்ளது என்பார் அறிஞர் இரா. மதிவாணன்.

 

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 14. ஆய்தம் –எழுத்தாய்வு – 4.

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 14.

ஆய்தம்எழுத்தாய்வு – 4.

”அவற்றுள்

மெய் ஈறுஎல்லாம் புள்ளியொடு நிலையல்” -104.

”குற்றியலுகரமும் அற்றென மொழிப” -105.

” குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.” – 38.

மெய் எழுத்துகள் புள்ளி எழுத்துக்கள் எனப்பட்டன. மெய் எழுத்துக்களுள் ஒன்றெனக் கூறப்படாத ஆய்தம் தனியான ஒரு புள்ளியாலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஆரியப்பட்டருடைய காலத்திலே அளவையிற் குறையும் இடங்களிலே அவ்வாறு குறையும் இலக்கத்தின் அல்லது வடிவத்தின் மேலே புள்ளியிடும் வழக்கம் இருந்து வந்தது, இவ்வழக்கம் பிற்காலத்திலே கல்வெட்டெழுதுவோராற் பின்பற்றப்பட்டது. கற்களிலே எழுத்துக்களைப் பொறிக்குமிடத்து, தேவையற்ற ஒன்று அல்லது பல எழுத்துக்களை நீக்கி வாசகர்கள் வாசிப்பதற்காக அவ்வாறு நீக்கப்படவேண்டிய எழுத்துக்களுக்கு மேலே புள்ளியிடுதல் வழக்கமாகும். அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 13 ஆய்தம் –எழுத்தாய்வு - 3

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 13

ஆய்தம்எழுத்தாய்வு - 3


ஆய்தம் –

“சிந்துவெளி நாகரிக காலமாகிய இரண்டாம் தமிழ்க் கழகக் காலதில் இல்லாதிருந்த ஆய்த எழுத்து மூன்றாம் தமிழ்க் கழகக் காலத்தில் மக்களிடையே பேச்சு வழக்கில் இடம் பெற்றது. –இரா. மதிவாணன்.

” ஆய்தம், அடுப்பு முக்கூட்டுபோல் முப்பாற்புள்ளியா? ஆய்தம் ஒற்றைப் புள்ளி என்பார். இருசிறகெழுப்பும் உடலது போல  இதன் இயக்கம் ஒரு புள்ளியா..? மூன்று புள்ளியா..? தமிழ்க் கல்வெட்டில் இவ்வெழுத்து சற்றே திரும்பி இகரமாக இருக்கிறது. ‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி என்பதனால் அதன் உரு என்பதும் புள்ளி மிசைய என்னாமல் மிசைத்து என்ற ஒருமைப் பயனிலையால் அப்புள்ளி ஒன்றுதான் என்பதும் முன்னர் மிசைத்தே என்பதனால் நிற்குமிடம் இடை / நடுவு என்பதும் தெற்றென விளங்கும்.” அறிஞர் வ.சுப. மாணிக்கம்.

புதன், 26 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 12 ஆய்தம் –எழுத்தாய்வு - 2

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 12

ஆய்தம் எழுத்தாய்வு - 2

புள்ளி

”ஒன்றை நீக்குவதற்கு அளவின் குறைவினைக் காட்டுதற்குப் புள்ளியிடும் வழக்கம் இருந்துவந்துள்ள தென்பதை உணருகிறோம். தொல்காப்பியர் புள்ளி பற்றிக்கூறிய சூத்திரங்களயெல்லாம் நோக்குமிடத்து  மாத்திரையில் குறைவுற்ற நிலையினை எடுத்துக்காட்டவே  புள்ளி பயன்பட்டிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது. இவ்வாறமைந்த புள்ளிகளெல்லாம் சில வரிவடிவங்களுடனேயே அமைகின்றன. ஆனால் ஆய்தம் மட்டும் எந்த வரிவடிவத்துடனும் தொடர்புறாது தனிப் புள்ளியாகவே அமைந்துள்ளது. இது பொருள் வேறுபடுத்தும் ஒலியனைப்போல ஓர் எழுத்து நீக்கிவிட்டு அவ்விடத்திலே  நின்று இசைக்கும் புள்ளியாகவே இருந்திருக்க வேண்டும்.

அது என்பதன் பண்டைய வடிவம் அஃது ஆகும். இது அவ்+ து என்பதன் விளைவு எனக்கூறுவர். ஆனால் அவ்+து புணரின் அத்து எனவே வரவேண்டும். இதுபோலவே அல்+திணை அற்றிணை எனவும் முள்+தீது முட்டீது எனவும் புணர வேண்டும். இவ்வாறு அமையின் அவை வேறு பொருளையும் பயக்கலாம் என்பதற்காக அத்து, அற்றிணை, முட்டீது என்னும் சொற்களிலே முறையே த், ற், ட், ஆகிய ஒலிகள் நீக்கப்பட்டு, அவற்றின் நீக்கத்தைக் குறிக்கப் புள்ளிகள் இடப்பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு அமையும் புள்ளி வெறும் பூஜ்ஜியமாகவன்றி பொருள் வேறுபடுத்தும் ஒலியனாக அமைந்துவிடுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் –ஒலியன்கள். மூன்றுக்கும் தனித்தனி வரிவடிவங்கள் என்பதே தொல்காப்பியர் கருத்தாகும்.”

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 11. ஆய்தம் –எழுத்தாய்வு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 11.

ஆய்தம் –எழுத்தாய்வு

”குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே -38

ஆய்தமாகிய புள்ளி குற்றெழுத்தின் முன்னர் உயிரொடு புணர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலது. இளம்பூரணர்.

அஃதாவது, குற்றெழுத்தின் பின்வரும் ஆய்தப்புள்ளி ஆறு வல்லெழுத்துக்களின் மேல் உயிரெழுத்தோடு வரும். எஃகு, கஃசு, அஃது என்றவாறு.

ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் என்றார். –நச்சினார்க்கினியர்.

குற்றிய லிகரம் குற்றிய லுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன”- -எழுத்.2.

ஈண்டு முப்பாற் புள்ளி என்பது ஆய்தத்தை மட்டும் குறியாது மூன்றையும் குறிக்கும். குற்றியலிகரம், குற்றியலுகரமும் போல அதுவும் ஒன்று என்பார் வ.சுப. மாணிக்கம்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 10. பன்னூல் திரட்டு- பாண்டித்துரைத்தேவர்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 10.

 

பன்னூல் திரட்டு- பாண்டித்துரைத்தேவர்

”இந்நூல் 1898 இல் வெளிவந்தது.

தமிழில் உள்ள 1,33,961 செய்யுட்களிலிருந்து ஆராய்ந்து தொகுக்கப்பட்ட 2132 செய்யுட்களைக் கொண்டது.

முதல் பதிப்பில் 1647 செய்யுட்கள் இருந்தன தேவர் கூடுதலாக 51 நூல்களிலிருந்து தொகுத்த 485 செய்யுட்களைச் சேர்த்து 2132 செய்யுட்களை உடையதாக 2ஆம் பதிப்பை 1906 இல் வெளியிட்டார்.”

சனி, 22 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 9 குமரிக்கண்டம் -- தொல்காப்பியம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 9

குமரிக்கண்டம் -- தொல்காப்பியம்

”வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து – தொல்.பாயிரம்.

வேங்கட மலையின் வடபகுதி வரையிலும் குமரி மலையின் தென்பகுதி வரையும் தமிழக எல்லைக்கு உட்பட்டன.

இன்று காண்பதுபோல் தெற்கும் குமரிக் கடலாக இருந்திருப்பின் வடதிசைப் பகுதிக்கே எல்லை கூறியிருப்பார். தென்குமரியென்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின் தொல்காப்பியர் காலத்து நீண்ட நிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு. தெற்கே பஃறுளி யாறும்  குமரி மலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம்".- வ.சுப. மாணிக்கம், தொல்.எழுத்து, மாணிக்க உரை.

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 8 - திருக்குறள் – முப்பொருள்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 8


-   

   திருக்குறள் – முப்பொருள்

-   

   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

-      மெய்ப்பொருள் காண்பது அறிவு -423. மெய்யியல்


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.—355. அறிவியல்.


மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். –457. உளவியல்.


வியாழன், 20 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 7- சொற்பொருள்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 7.

சொற்பொருள்

 ஞாயிறு ;- கோளரசு –சூரியக் குடும்பம்.

திங்கள் :- தேய்ந்து வளர்வது, மாதம் ,கிழமை

செவ்வாய் :-  சிவந்தது

புதன் :-  காண்பதரிது,  சூரிய ஒளியில் புதைந்துகிடப்பது,  மிகச்சிறியது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.

வியாழன் :- வியன், மிகப்பெரிய கோள்

வெல்ளி : ஒளிர்வதால் , சூரியனை ஒரு தடவை சுற்றிவரும் காலம் 12 ஆண்டுகள்.

சனி:- கரியது,  நிழல் கோள், சூரிய ஒளியில் 10% மட்டுமே பெறும், மைம்மீன்.

புதன், 19 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 6 - சொற்பொருள்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 6

சொற்பொருள்

எழுத்து :- ஓவியம், சித்திரம்

எழுத்துடை நடுகல் :-  இறந்த வீரனின் செய்தி பொறிக்கப்பெற்ற நடுகல்.

எழுத்து நிலை மண்டபம் :- சித்திரச்சாலை.

எழுத்து :- ஓவியமாக இருந்த நிலையா..? தொல்தமிழரின் கருத்துப்பதிவு வடிவமா…? சித்திர எழுத்தா…?

தமிழில் பட எழுத்து இருந்ததாக யாப்பருங்கல விருத்தி கூறுகிறது.

   ஊழ்  = விதி…? – ஊழ் மலர் = முற்றிய மலர்.

அறம் = தர்மம் ..? தர்மம் = குலவொழுக்கம், வடவர் கருத்து.

குற்றம் = பாவம் :-  குற்றம் தண்டனைக்குரியது –தமிழர் வழக்கு. பாவம் = பரிகாரம் செய்து கழிப்பது வடவர் வழக்கு.

 சொற்பொருள் மாற்றம்

ஏமாந்து  = இன்புற்று

ஏய்க்கும் = ஒக்கும்

ஏய்த்தல் = ஒத்தல்

ஒத்தன் = ஒருவன்

ஒத்தி = ஒருத்தி

ஒருவன் = ஒப்பற்றவன், தலைவன்.

ஒருத்தி = ஒப்பில்லாதவள்.

ஒரு = உயர்வைக்குறிக்கிறது..

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 5 தமிழ் கி.மு. 6ஆம் நுற்றாண்டு

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 5

தமிழ் கி.மு. 6ஆம் நுற்றாண்டு

”ஹெரொடட்டஸ் _ கி.மு.49

டிசியன் _ கி.மு. 400

மெகஸ்தனிஸ் _ கி.மு.300

ஸ்டிராபோ _ கி.பி. 20

பிளினி _ கி.பி. 77

பெரிப்ளூஸ் _ கி.பி. 85.

தாலமி _ கி.பி. 130

மேற்குறித்துள்ள காலப்பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் கூற்றின்படி, தமிழ் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு  முற்பட்டதென்பது தெளிவு.”

திங்கள், 17 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 4 - ஆய்வுக்குரிய செய்தி- கரிகாலன்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 4

ஆய்வுக்குரிய செய்தி- கரிகாலன்

”கரிகால்வளவன்: இப்பெயர் வடமொழியில் ‘கரிகால’ என்று வழங்கியதாகத் தெரிகிறது. ‘கரிகால” என்பது ‘யானை’ அல்லது யானைச் சேனைகளுக்கு நமன் என்று பொருள்படும்; கால் கருத்திருந்ததனால் இவன் கரிகால்வளவன் என்று பெயர் பெற்றானென்று சிலர் கூறுவர். (வளவன் _சோழன்) சோழ ராஜாக்களில் கரிகாலன் என்று பெயர்பெற்றவரிருவர்; முதல்வன் ‘பட்டினப்பாலை’ கொண்டவன் ; இரண்டாங் கரிகாலன் சிறு பிராயத்தில் வீரபாண்டியனோடு போர் செய்தவன் ; இவன் தஞ்சைக் கோயில் எடுப்பித்த ராஜராஜ சோழனுடைய தமையன் ; பொருநராற்றுப்படையில் ‘ தாய் வயிற்றிலிருந்து தாயமெய்திப் பிறந்து’ என்று கரிகால்வளவனை முடத்தாமக்கண்ணியார் சிறப்பித்திருக்கிறார். இதே விஷயம் (பெரிய புராணத்தில் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்திற் சொல்லப்பட்டிருக்கிறது. _ராவ்பகதூர் வி. வெங்கையரவர்கள். எழுதியது”.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 3 மருத்துவர்கள், நீரிழிவு நோயினால்......

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 3

 மருத்துவர்கள், நீரிழிவு நோயினால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் இன்னபிற உறுப்புகள் கெட்டழியும் என்கின்றனர். உண்மையில் நோயினால் உறுப்புகள் கெட்டழிகின்றனவா அல்லது  மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளின் கொடூரத்தாக்குதலால் கெட்டழிகின்றனவா….?

”மருந்தின் தீமை”

”கோப்பன் ஹேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீட்டர் காட்ஷ் சொல்லும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதய நோய்க்கும் புர்று நோய்க்கும் அடுத்தபடியாக மரத்துக்குக் காரணமாக இருப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள்தான் என்பதே அந்த முக்கியத் தகவல். பி.எம்.ஜே. என்ற மருத்துவ இதழில் அவர் தந்திருக்கும் தரவுகளின்படி மனாழுத்தத்துக்கும் மூப்பு மறதி நோய்க்கும் கொடுக்கப்படும் மருந்துகள் உள்பட மனநல மருந்துகளால் 65 வயதுக்கும் மேற்பட்ட 5 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பது, ஆய்வு முடிவுகளைத் தவறாக முன்வைப்பது, மருந்துகளால் ஏற்படக்கூடிய  தீங்குகளை மறைப்பது போன்றவை இந்த முறைகேடுகளில் அடங்கும்.ஆனால், இந்தக் குற்றச் செயல்கள் மூலம் தொடர்ந்து லாபம் கிடைக்கும்வரை, அவர்கள் இவற்றை  நிறுத்துக்கொள்ளப் போவதே இல்லை.

 நோயையைக் கண்டறிவதில் மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவதில், அதே அளவிலான அளவுகோலை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு. பெருநிறுவன்ங்களின் பேராசையும் அரசியல் ரீதியிலான தோல்வியும் மருத்துவப் பராமரிப்பையே இன்றைக்கு நிலைகுலையச் செய்திருக்கின்றன. தவறான மருத்துவ அறிவு  கொண்ட மருத்துவர்களும் தவறான மருத்துவத் தகவல்கள் கிடைக்கப்பெற்ற நோயாளிகளும்தான்  இன்று பல்கிப் பெருகியுள்ளனர். வெளிப்படையான அணுகு முறையையும் பொறுப்பேற்பையும் பின்பற்ற வேண்டிய காலம் இது. அப்படிச் செய்தால்தான்  மருத்துவமனையிலேயே முக்கியமான நபரான நோயாளிக்குத் தரமிக்க சிகிச்சையை மருத்துவர்கள் செவிலியர்களால் வழங்கமுடியும்.

சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்போருக்கு அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்துவதுதான், நாட்டில் உள்ள அனைத்துப் பணக்காரர்களின் செல்வங்களை விடவும் முக்கியமானது. என்றி அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே மருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது.”----- தினம் ஒரு தகவல், தினத்தந்தி, 20-03- 23.

சனி, 15 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 2 அறிவியலுக்கு அடிப்படை கற்பனையே!

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 2

அறிவியலுக்கு அடிப்படை கற்பனையே!

உங்கள் அறிவியலைக் கொண்டுபோய் குப்பையில் கொட்டுங்கள் .நிலம், நீர், வான், வளி என அனைத்தையும் குப்பை மேடாக்கி மக்கள் வாழ்வதற்கே தகுதியற்றதாக்கும் அறிவியல் அட்டூழியங்கள் அறிவாளிகளின் ஆக்கங்களா..! உக்ரைன் போரில் உங்கள் அறிவியலின் கேடுகள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.. மரணவியாபாரி என்று பட்டம் பெற்ற நோபல் என்ன செய்தார் என்று படித்துப்பாருங்கள்.எச். ஜி. வெலஸ் 1866-1921 இவர் எழுதிய நாவலில் கூறிய கற்பனைகள் பின்னாளில் மெய்பபிக்கப்பட்டன.பாரதியார்-1882-1921: சந்திரமண்டிலம் கண்டு தெளிவோம் என்றார் 1961 இல் இரசியா மெய்ப்பித்து உங்களுக்குத் தெரியுமா? மிகச்சிறந்த இத்தாலிய ஓவியர் லியானார் டாவின்சி -1452-1519 வரைந்தவை பின்னாளில் உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாயின. மேலும் பல சான்றுகளைக் காண பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் எனும் என்னூலைப் படித்துப்பாருங்கள் . மிகச் சிறந்த விஞ்ஞானிகள் உழவர்கள் மீனவர்கள் இவர்கள் ஆக்கவியல் விஞ்ஞானிகள். கொரானா நோய்க்கு மருந்தில்லை அறிவியல் என்ன கிழித்தது?  ஆண்டின் தொடக்கம்  அறுவடைத் திங்களே !

 “Land tillers knew that summer, the harvest time, occurred regularly. They counted time by period s from one harvest to the next. That was how time began to be counted by years,” -F.Korovkin: History of the ancient world, p.30.

உங்களுக்குத் தெரியுமா நண்பரே அறிவியலில் பழைய கண்டுபிடிப்புகள் புதிய கண்டுபிடிப்புகளிடம் மன்னிப்புக்கோரி நிற்கின்றன. ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாத அகஅறிவியலைப் படைத்த பண்டிதர்கள் முட்டாள்களா..? ஒரு பதிவைக்கண்டு இப்பதிவையிட்டுள்ளேன்.!

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 1 அயலூர் சென்று பணி புரிவது குற்றம்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 1

அயலூர் சென்று பணி புரிவது குற்றம்

“ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே” – பொன்முடியார்,புறம்.312

தாய் உடலையும் தந்தை உடலகத்து நிலவும் உயிரறிவையும் ஓம்பும் கடப்பாட்டினராதலால், ‘புறந் தருதல்’ தாய்க்குக் கடனாதலும் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாதலும் எடுத்தோதப்பட்டன. அவ்வவ்வூரிலிருக்கும் கொல்லர் முதலியோர் அவ்வவ்வூரவர்க்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும் அயலூர் சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோதுங்க சோழன் காலத்து ஒரு கட்டுப்பாடிருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (A.R.No.205 of 1919) கூறுவது பொன்முடியார் இப்பாட்டின்கட் கடனாக வகுக்கும் கொள்கையை வற்புறுத்துகிறது. ஈன்றாள் முதலியோர்க்கு முறையே புறந்தருதல் முதலாகவுள்ள தொழிற் பண்புகளைக் கடனாகக் கூறியது அவற்றை நன்குணர்ந்து வழுவாது  ஆற்றல் வேண்டும் என்றற்கெனவறிக”  - உரை வேந்தர்.

புதன், 12 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.30.

 

களப்பிரர் _ களப்பாள் :  கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.30.

1946- சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு, அன்றுதான்…..

அடக்குமுறையால் அழுத்தப்பட்டுக் கிடந்த அடிமைச் சமுதாயம் சினந்து…..கனன்று கிடந்த எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. அதற்குப் பெயர்தான்களப்பாள் கலவரம்.’.

ஏழைகள் எரிமலை என்பதை அறியாது எருமை மாடுகள் என்று எண்ணி ஏறி விளையாடிய பண்ணை முதலாளிகள், எரிமலையின் மீது விழுந்த பஞ்சுப் பொதிகளாயினர்.

 மண்ணுக்குத் தெரியும் தனக்குச் சொந்தக்காரன் யாரென்று! மண்ணோடு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து உறவு கொண்டவன் பண்ணைகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கண்ணால் அல்ல, காலால் அடி அடியாக அளந்து உழுதுகளைத்தவன் இன்றும் அந்த மண்ணிலே! அந்த மண்ணைக் காலால் அல்ல, கன்ணால் கூட அளக்காதவர்கள் சொந்தம் கொண்டாடி இன்று எங்கோ தொலைந்து  போனார்கள். அவர்கள் வாழ்ந்து மறைந்த வழியில் புழுதி படிந்த அந்தத் தடத்தின் பழைய வரலாறு….!

இந்த வரலாறு ஓர் உண்மையை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. இனி….. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியாது எரிமலையைத்தான் காணமுடியும்.

 உலகம் முழுவதும் அழுது புலம்பிய ஆயிரமாயிரம் ஏழைகளின் கண்ணீரைத் தன் ஒர்றை விரலால் துடைத்தெறிந்த அந்த மேதை அன்றே சொன்னான், “முதலாலீத்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்கிறதுஎன்று! இந்த உண்மை வரலாற்றில் காலந்தோறும் மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதற்கு இன்னுமொரு சான்று  களப்பாள்தான்.

 

உலகத் தமிழ் ஆர்வலர்களுக்கு வணக்கம்.

இந்த வரலாற்றுக் கட்டுரை இன்னும் முழுமை பெறவில்லை.

களப்பிரர், களப்பாள், களந்தை, களப்பாளன், கள்வர், களப்ப குலம்,கூற்றுவாநாயனார், ஆதித்தசோழன் முதலிய தலைப்புகள் குறித்துத் திரட்டிய சான்றுகளோடு மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் தேவைப்படுகின்றன. சான்றுகளுக்கான தரவுகளைத் திரட்டிக் கட்டுரையை மறுசீரமைப்புச் செய்து மீண்டும் உங்கள் முன் படைப்பேன். நன்றி, வணக்கம்.

 

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.29.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.29.

சின்ன பண்ணை, பெரிய பண்ணை, நடுப்பண்ணை, ஐயர் பண்ணை, செட்டியார் பண்ணை இப்படிப் பல பண்ணைகள். ஒவ்வொரு பண்ணைக்கும் ஐம்பது அறுபது வேலி விளைநிலங்களும் ஒவ்வொரு ஊரும்(கிராமம்) சொந்தமாக இருக்கும்.ஊரில் உள்ள மக்களுள் 90% மக்கள் வேளாண் தொழிலாளிகளே. ஏழை எளிய இம்மக்கள் பண்ணைகளுக்கு அடிமைகளே! எவ்வித உரிமையும் கிடையாது. எல்லாத்தேவைகளுக்கும் பண்ணைகளிடம் கையேந்தி நிற்க வேண்டும். தீண்டதகாத உழவர்குடி மக்களுக்குச் சாட்டை அடி, சாணிப்பால் தண்டனை வழங்கப்படும். ஏன் என்று கேட்பாரில்லை.இந்தத் தண்டனைகளை மணியம், விசாரிப்பு வேலை பார்க்கும் குடியானவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்கள் பண்ணைவீட்டுத் தெருக்களில் செருப்போ, துண்டோ, சட்டையோ போட்டுக்கொண்டு நடக்கமுடியாது. ஐயாவைக் கண்டால் குடியானவர்கள் தள்ளி நிற்பார்கள்; ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளிகள் வேலிக்குள் ஒடுங்கி மறைந்து கொள்வார்கள்

குடியானவர்கள் பண்ணை வீடு சார்ந்த பணியாளர்கள் ; பண்ணை நிலம் சார்ந்த உழைப்பாளர்கள் அடிமைகள் போலக் கட்டுண்டுகிடப்பார்கள்; பண்ணைக்கு அன்றாடக் கூலிகளாகப் பாடுபவர்கள்கொடுத்ததுதான் கூலி வாய்பேச வழியற்றவர்கள். பண்ணையாளர்களுக்கு வியர்வை வெளியே வராது. பண்ணை ஆட்கள் வியர்வை செந்நீராய் நிலத்தில் வீழும். அந்ந வியர்வையில்தான் பண்ணயார்கள் குளிப்பார்கள்.

……………………………..தொடரும்………………………

திங்கள், 10 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.28.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.28.

 

களப்பாள் ஒன்றா இரண்டா..? ஏழு களப்பாள்கள், கூற்றங்களாகக் கொண்டு ஆண்ட  கூற்றுவன் (நாயனார்), மூவேந்தரை வென்றவன் இவ்வூரினன் என்பர்.

 ஏழு களப்பாளைச் சுற்றி வடக்கே அக்கரைக் கோட்டம், பன்னியூர்,கரம்பக்குடி, பனையூர், கோட்டூர்; மேற்கே வங்கத்தான்குடி, வேதபுரம், மானங்காத்தான் கோட்டம், பெருக வாழ்ந்தான்; தெற்கே குலமாணிக்கம், எடையூர், முத்துப்பேட்டை; கிழக்கே மீனவநல்லூர், எழிலூர், ஆட்டூர், மடப்புரம், திருத்துறைப்பூண்டி. (ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்குரியன).

 

                       பாமணி ஆற்றின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பழம்பெரும் பூமி, வெண்ணாற்றின் கிளை ஆறுகளால் வளங்கொழிக்கும்  நெல் வயல்களைக் கொண்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் எனப் பச்சைப் பட்டு போர்த்திருக்கும். வயலில் நீர் பாய்ச்ச,  காலால் மடையை மிதித்தால் காவிரி வெள்ளம் பாயும்.

காலச் சுழலில் களப்பாள்

நெல்லைத்தவிர வேறு விளைபொருள் இல்லை ; விவசாயம் தவிர வேறு தொழிலும் இல்லை. ஆடி முதல் தைவரை சேற்றோடுதான் போராட்டம். மாசியும் பங்குனியும் மத்தளக் கொட்டு; சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு என்பதே நிலத்தின் பழமொழி. சேற்றோடு போராடியவன் சோற்றோடு போராடும காலம். இயலாமை எங்குமே இல்லை; இல்லாமை எங்கும் இருந்தது. இந்நிலை ஏன்…..எப்படி வந்தது….?

 விளைநிலங்கள் அனைத்தும் பண்ணைகளுக்கே சொந்தம்; பண்ணை ஆட்களும் அடிமைகளாகப் பண்ணைக்குச் சொந்தம். ஆண்டான் அடிமைச் சமுதாயம் மலையும் மடுவுமாக தோற்றம் பெற்றது. பண்ணை முதலாளிகள் முதலியார்,ஐயர், மடாதிபதிகள். பண்ணை வீடுகள் சார்ந்த தொழிலாளிகள் பரிகாரி, பூசாரி, குருக்கள்,குடியானவர்கள். குடியானவர்கள் பண்ணை முதலாளியை ஐயா என்றும் அவர்தம் மனைவியை அண்ணி என்றும்  அவர்தம் குழந்தைகளைத் தம்பி என்றும் அழைப்பர். தாழ்த்தப்பட்டவர்கள், குடியானவரை ஐயா என்றும் அவர்தம் மனைவியை ஆச்சி என்றும் அவர்தம் குழந்தைகளை  ஐயா என்றும் அழைப்பர். பண்ணையார்க்குக் குடியானவர்கள் தீண்டத்தக்கதவர்கள்;  பண்ணையார்க்கும் குடியானவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் . இத்தகைய பண்ணை ஆட்சிமுறையில் முதல் நிலை-பண்ணையார்கள்; இடைநிலை குடியானவர்கள் ; கடைநிலை தாழ்தப்பட்டவர்கள் இவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் ஊரில் ஓர் இறுக்கமான சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

…………………………….தொடரும்……………………

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.27.

களப்பாளில் இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர், என்று முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.

களப்பாளில் பிறந்து வளர்ந்தவன் ஆகையால், அவ்வூரைப்பற்றிச் சில சொல்ல விழைகிறேன்.

கூழாங்கல் கற்கண்டானாலும் மூங்கில் கரும்பானாலும் மணல் சர்க்கரையானாலும் கழுதை உழவுக்கு வந்தாலும்  களப்பாளன் மட்டும் எதுக்கும் ஒத்துவர மாட்டான் என்று ஊரார் கூறுவதைக் கேட்டுள்ளேன்.

களப்பாள் ஒரு பெரிய ஆய்வுக்குரிய வரலாற்றோடு தொடர்புடைய ஓர் ஊர். சேர சோழ பாண்டியர்களை வென்று அவ்வரசர்கள் இருந்த இடம் தெரியாமல், வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் செய்து, ஆண்ட களப்பிரர் இவ்வூரோடு தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இடிந்து கிடக்கும் கைலாசநாதர் கோயிலும் சிதறிக் கிடக்கும் லிங்கத்தடி திடலும் அரண்மனைக்குளமும், ராஜபாளையத்தெருவும் வாழைக் குளத்து அடியில் மறைந்து கிடக்கும் சுரங்கப் பாதையும் அண்மையில் கண்டுபிடித்த முதுமக்கள் தாழியும் இராதித்தன் சிவன் கோயிலும்  அதில் கேட்பாறற்றுக் காணாமல் ஒழிந்த கல்வெட்டுகளும் இன்னும் பல சான்றுகளும் மன்னர்களோடு தொடர்புடைய ஊராகவே இவ்வூர் காணப்படுகிறது. தமிழகத்தை மட்டுமின்றிக் கடல் கடந்த நாடுகள் சிலவற்றையும் கட்டி ஆண்ட களப்பிரர் இவ்வூரினரா அல்லது வேற்றுப் புலத்தவரா..?

…………………………….தொடரும்……………………

சனி, 8 ஏப்ரல், 2023

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.26.

விடை தேடும் வினாக்கள்

களப்பிரர் எவ்வினத்தவர் ?

அச்சுதக் களப்பாளன் யார்? ; கூற்றுவ நாயனார் யார்? களந்தைக்கோன்  யார்? களந்தை தான் களப்பாளா? களப்பாளர்தான் களப்பிரரா?

உண்மையில் விடைகள் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன. அண்மையில்  நறுவழிக்களப்பாள் வயல் வெளியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தடயம் என்றே கருதவேண்டியுள்ளது.

…………………………….தொடரும்……………………

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.25.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.25.

முத்தரையர் -களப்பிரர்

ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் சமண பெளத்த மதங்களை ஆதரித்து வளர்த்தனர் என்றாலும் நாட்டின் நிலை எப்படி இருந்தது என்று அறிதற்குப் போதிய சான்றுகள் இல்லை. 


பாண்டியன் கடுங்கோனும் பல்லவ சிம்மவிஷ்ணுவும் ஏறத்தாழ கி.பி. 575இல் களப்பிரரை வெற்றி கொண்டனர். வீழ்ச்சி அடைந்த களப்பிரர் சிற்றரசர்களாக தஞ்சாவூர், செந்தலை ஆகிய ஊர்களில் தங்கிவிட்டனர். பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றனர். சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்ற பொருளுடைய சொல்லாக இது இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்


.செந்தலைத் தூண், சாசன்ங்கள்வழி முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று அறிய முடிகிறது. நான்கு தூண்களிலும் பெரும்பிடுகு முத்தரையனுடைய சிறப்புப் பெயர்களில் ‘ஸ்ரீ கள்வர கள்வன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் களவர கள்வரும் களப்பிரரும் ஒருவரே என்று கருதுகின்றனர். மேலும் ‘வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்” எனத் திருக்காட்டுப்பள்ளி நியமம் கல்வெட்டு கூறுகிறது. வல்லத்தரசன், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டப்பெயர்கள் கள்ளர் வகுப்பினர்க்கு உரியதாதலால் பெரும்பிடுகு முத்தரையனும் கள்வர் (கள்ளர்) மரபினர் என்பர். எனவே இவரும் களப்பிரராகிறார்.

……………………தொடரும்……………………………….. 

வியாழன், 6 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.24.

                                                                         

களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.24.

 


                                                                        களப்பாள்

என்னும்

திருக்களந்தை ஆதித்தேச்சுர வைபவம்-7-1-1941.

திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்

காப்பு

அத்தி முகனடி நித்த நினைப்பவர்

சித்தி திருவொடு முத்தி பெறுவரே.”

---------------------

 இராசாத்தித்தன் வழிபாடு

அநாதி மலமுத்தராய், நித்தியராய், வியாபகராய், எல்லாவறிவும் எல்லா முதன்மையும் எல்லாவநுக்கிரகமும் உடையராய் விளங்கும் எண்குணக்கடவுளாகிய நமது பரமேசுவரன் தமது அடியார்களுடைய பக்குவாபக்குவத்துக்குத் தக்கபடிசாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியபதங்களை யளித்தாள்வதற்கான திருவுருவுடனெழுந்தருளியிருக்கின்ற சிவதலங்கள் பலவற்றுள்ளுஞ் சிறந்தோங்கிய இத்தலம்இராசாதித்தன்என்னும் அரசன் உண்டுபண்ணி வழிபட்டது. ( கற்பக்கிரகம் பின்புறத்தில் இராசாதித்தேச்சுரம் என்றிருந்த சிலாசாதனம் மறைந்துபோயிற்று.)

கூற்றுவநாயனார் திருத்தொண்டு

இத்தலத்தை இராசதானியாகக்கொண்டு, புறங்கரம்பை நாட்டையாண்ட, குறுநில மன்னனாகியகூற்றுவனாயனார்சிவ திரு நாமமாகிய ஐந்தெழுத்தின் பலத்தினால்சோழ, சேர, பாண்டியர்களைப் போரில் வென்று, சபாநாயகப்பெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டப்பெற்று, சபாநாயகப் பெருமானுடைய திருவுருவத்தைப் பிரபலமாக இத்திருக்கோயிலில் அமைத்து வைத்துத் திருப்பணிசெய்து, சிவபதமெய்தினர்,(கூற்றுவநாயனார் புராணம்,12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் பெரியபுராணத்துளிருக்கின்றது.)

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக் கோனடியேன்(திருத்தொண்டத் தொகை)

ஓதந்தழுவிய ஞாலமெல்லா மொரு கோலின் வைத்தான்

கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே”- ( திருத்தொண்டர் திருவந்தாதி)

குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு…” என, உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருத்தொண்டர் புராண சாரத்தினுள் கூறுதலும்.

“விறற் களந்தைக் கூற்றுவனார் ..” என, சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவையுள் “ கூறியுள்ளதாலும்

கூற்றுவ நாயனார் என்பவர் சோழ வளநாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களப்பாளன் என்னும் திருநாமம் பெற்றவர்.. களந்தையைத் தன்பெயரால் ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவன் என்னும் பெயர் பெற்றார்.

……………………..தொடரும்…………………….

புதன், 5 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.23.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.23.

 

இப்பொழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. 

இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா

நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.

……………………..தொடரும்……………………

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன்.22.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.22.

இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது

இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.

சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

……………………..தொடரும்……………………

திங்கள், 3 ஏப்ரல், 2023

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.21.

 

ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.

……………………..தொடரும்…………………….

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

 


களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.20.


ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.

அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை, பள்ளிப்படைஎன்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றிப் பல செய்திகளை அறிகிறோம்.

……………………..தொடரும்…………………….2/4-23