திங்கள், 17 ஏப்ரல், 2023

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 4 - ஆய்வுக்குரிய செய்தி- கரிகாலன்

 

என் பழைய குறிப்பேடு- பக்கம்: 4

ஆய்வுக்குரிய செய்தி- கரிகாலன்

”கரிகால்வளவன்: இப்பெயர் வடமொழியில் ‘கரிகால’ என்று வழங்கியதாகத் தெரிகிறது. ‘கரிகால” என்பது ‘யானை’ அல்லது யானைச் சேனைகளுக்கு நமன் என்று பொருள்படும்; கால் கருத்திருந்ததனால் இவன் கரிகால்வளவன் என்று பெயர் பெற்றானென்று சிலர் கூறுவர். (வளவன் _சோழன்) சோழ ராஜாக்களில் கரிகாலன் என்று பெயர்பெற்றவரிருவர்; முதல்வன் ‘பட்டினப்பாலை’ கொண்டவன் ; இரண்டாங் கரிகாலன் சிறு பிராயத்தில் வீரபாண்டியனோடு போர் செய்தவன் ; இவன் தஞ்சைக் கோயில் எடுப்பித்த ராஜராஜ சோழனுடைய தமையன் ; பொருநராற்றுப்படையில் ‘ தாய் வயிற்றிலிருந்து தாயமெய்திப் பிறந்து’ என்று கரிகால்வளவனை முடத்தாமக்கண்ணியார் சிறப்பித்திருக்கிறார். இதே விஷயம் (பெரிய புராணத்தில் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்திற் சொல்லப்பட்டிருக்கிறது. _ராவ்பகதூர் வி. வெங்கையரவர்கள். எழுதியது”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக