என்
பழைய குறிப்பேடு- பக்கம்: 3
மருத்துவர்கள், நீரிழிவு நோயினால் இதயம், கல்லீரல்,
சிறுநீரகம் இன்னபிற உறுப்புகள் கெட்டழியும் என்கின்றனர். உண்மையில் நோயினால் உறுப்புகள்
கெட்டழிகின்றனவா அல்லது மருத்துவர்கள் பரிந்துரைக்கும்
மாத்திரைகளின் கொடூரத்தாக்குதலால் கெட்டழிகின்றனவா….?
”மருந்தின்
தீமை”
”கோப்பன் ஹேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீட்டர் காட்ஷ் சொல்லும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக
உள்ளது. இதய நோய்க்கும் புர்று நோய்க்கும் அடுத்தபடியாக மரத்துக்குக் காரணமாக இருப்பது
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள்தான் என்பதே அந்த முக்கியத் தகவல்.
பி.எம்.ஜே. என்ற மருத்துவ இதழில் அவர் தந்திருக்கும் தரவுகளின்படி மனாழுத்தத்துக்கும்
மூப்பு மறதி நோய்க்கும் கொடுக்கப்படும் மருந்துகள் உள்பட மனநல மருந்துகளால் 65 வயதுக்கும்
மேற்பட்ட 5 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பது,
ஆய்வு முடிவுகளைத் தவறாக முன்வைப்பது, மருந்துகளால் ஏற்படக்கூடிய தீங்குகளை மறைப்பது போன்றவை இந்த முறைகேடுகளில்
அடங்கும்.ஆனால், இந்தக் குற்றச் செயல்கள் மூலம் தொடர்ந்து லாபம் கிடைக்கும்வரை, அவர்கள்
இவற்றை நிறுத்துக்கொள்ளப் போவதே இல்லை.
நோயையைக் கண்டறிவதில் மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற
வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு
என்ன தேவை என்பதைக் கண்டறிவதில், அதே அளவிலான அளவுகோலை கடைப்பிடிப்பவர்கள் மிகவும்
குறைவு. பெருநிறுவன்ங்களின் பேராசையும் அரசியல் ரீதியிலான தோல்வியும் மருத்துவப் பராமரிப்பையே
இன்றைக்கு நிலைகுலையச் செய்திருக்கின்றன. தவறான மருத்துவ அறிவு கொண்ட மருத்துவர்களும் தவறான மருத்துவத் தகவல்கள்
கிடைக்கப்பெற்ற நோயாளிகளும்தான் இன்று பல்கிப்
பெருகியுள்ளனர். வெளிப்படையான அணுகு முறையையும் பொறுப்பேற்பையும் பின்பற்ற வேண்டிய
காலம் இது. அப்படிச் செய்தால்தான் மருத்துவமனையிலேயே
முக்கியமான நபரான நோயாளிக்குத் தரமிக்க சிகிச்சையை மருத்துவர்கள் செவிலியர்களால் வழங்கமுடியும்.
சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்போருக்கு
அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்துவதுதான், நாட்டில் உள்ள
அனைத்துப் பணக்காரர்களின் செல்வங்களை விடவும் முக்கியமானது. என்றி அமெரிக்காவின் இரண்டாவது
அதிபர் ஜான் ஆடம்ஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே மருந்துகளை அதீதமாகப்
பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது.”-----
தினம் ஒரு தகவல், தினத்தந்தி, 20-03- 23.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக