புதன், 29 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் -வடக்கிருத்தல்

ஆற்றின் நடுவே உள்ள தீவில் (ஆற்றிடைக்குறை, துருத்தி என்றும் கூறுவர்) உண்ணா நோன்பு மேற்கொண்டு மழை, வெயில், பனி, காற்று முதலியவற்றிற்குச் சிறிதும் நெஞ்சுடையாது நிலைபெயராதிருந்து உயிர் நீப்பது.வடக்கிருத்தலாகும்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள் - அரசாள்வோர் பார்வைக்கு

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே
    தொண்டைமான் இளந்திரையன்,புறம்.185
உரை:வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்  வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்.

சங்க இலக்கியச் செய்திகள்

தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறையாக யாம் சில
அரிசி வேண்டினோமாக தான்பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே
                              ஒளவையார்,புறம்.140
உரை:செந்நாப் புலவீர், பலா மரங்கள் மிகுந்த நாஞ்சில் மலைக்கு வேந்தன் ஆகிய நாஞ்சில் வள்ளுவன் அறிவு மெல்லியன் (அறியாமை உடையன்) போலும். வளையணிந்த கையராகிய விறலியர், மனைப் பக்கத்தில் பறித்துச் சமைத்த இலையின் மேல் தூவும் பொருட்டு யாம் சில அரிசி (துவரை) வேண்டினேம். அவன் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிந்தவன்; ஆதலால் எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி ,சுரம் சூழ்ந்த மலை போன்றதொரு யானையை அளித்தான்; இவ்வாறு தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ? பெரியோர் தாம் செய்யும் கடனை முறையறிந்து செய்யாரோ?
விளக்கம்::ஒளவையார்,அரசனைக் குறை கூறுவதுபோல அவனது கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடியது.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

THAMIZHI


Brahmi script found at Edakkal
       Kochi: Noted historian and archaeologist M.R.Raghava Varier has confirmed the presence of Brahmi script at the the ancient Edakkal caves in a remote part of wayanad district. The latest discovery makes it plausible that the cultural diffusion of the Indus Valley civilization was more widespread then usually thought. Varier said it was the Dravidian from of Brahmi script that was seen at the Edakkal caves.
            “The Brahmi script I found can be read as sree vazhumi which is believed to be the Tamil equivalent of Lord Brahma It has been found close to the carving of a human figure with an outsized phallus. The practice of providing an inscription beneath a carving or etching is very much part of Indian tradition. This indicates that Edakkal caves were also a fertility cult site” he explained.  
For more information- The Times Of India,10-02-12

திங்கள், 6 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள்

வறுமையும் புலமையும்
பசி தினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண
              குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது, புறம்.159: 21-25
உரை:உயர்ந்த கொம்பை உடைய கொல் யானையைப் பெற்றாலும் முகம் மாறித் தரும் பரிசினை ஏற்க மாட்டேன். என் தாய், மனைவி ஆகிய இருவருடைய நெஞ்சமும் விருப்பமுறும்படி, பசி தின்பதால் வருத்தமுற்ற எனது சுற்றமும் மகிழும்படி மலர்ந்த முகத்துடன் நீ, யான் இன்புற விரைவில் பரிசில் தந்து விடுவையாயின், சிறிதாகிய குன்றி என்னும் அளவையுடைய பொருளாயினும் அதனை ஏற்றுக்கொள்வேன்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

வணக்கம்

சங்க இலக்கியச் செய்திகள் தொடர் விரைவில் தொடரும்
நன்றியுடன் - இரெ.குமரன்