செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

சங்க இலக்கியச் செய்திகள்

தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறையாக யாம் சில
அரிசி வேண்டினோமாக தான்பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே
                              ஒளவையார்,புறம்.140
உரை:செந்நாப் புலவீர், பலா மரங்கள் மிகுந்த நாஞ்சில் மலைக்கு வேந்தன் ஆகிய நாஞ்சில் வள்ளுவன் அறிவு மெல்லியன் (அறியாமை உடையன்) போலும். வளையணிந்த கையராகிய விறலியர், மனைப் பக்கத்தில் பறித்துச் சமைத்த இலையின் மேல் தூவும் பொருட்டு யாம் சில அரிசி (துவரை) வேண்டினேம். அவன் பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிந்தவன்; ஆதலால் எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி ,சுரம் சூழ்ந்த மலை போன்றதொரு யானையை அளித்தான்; இவ்வாறு தெளியாது கொடுக்கும் கொடையும் உலகில் உளதோ? பெரியோர் தாம் செய்யும் கடனை முறையறிந்து செய்யாரோ?
விளக்கம்::ஒளவையார்,அரசனைக் குறை கூறுவதுபோல அவனது கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக