தமிழமுது –.82 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.
ஆடவர், பெண்டிர் - பாலியல் மொழிகள்.
பருவம் வந்துற்ற உயிர்கள் அனைத்தும்
இன்பவிழைவு கொள்வதென்பது இயற்கையான நிகழ்வே
– தொல்காப்பியர் மிகத்தெளிவாக
“எல்லா உயிர்க்கும்
இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம்
மேவற்றாகும்.”
இன்பம் விழைவு என்பது உலக உயிர்கள்
அனைத்திற்கும் மனம் பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும் என்றார்.
ஆடவரும் பெண்டிரும் பாலுணர்வின் தூண்டுதலால்
தனக்குரிய துணையைத் தேடுதலில் பல்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். பாலியல் உணர்வுகளைப் பலரும் அறிய வெளிப்படையாக
வெளிப்படுத்த முடியாது. சமுக அமைப்பின்படி இலைமறை காயாக ஒருவருக்கொருவர் உடல் மொழிக் குறிப்புகளால்,சிறு சிறு ஒலிக் குறிப்புகளால் பரிமாறிக்கொள்வர். உடலைத் தீண்டும் வெறியின்றி உள்ளம்
விரும்பி இசைவது, இது களவுக் காதலாகும். களவுக் காதல் திருமணத்தில் முடிவதும்
உண்டு ; மனம் மாறி வேற்று மணம் கொள்வதும் நிகழும். உள்ளம்
கவர்ந்த காதல் நிறைவேறாமல் தற்கொலையில் முடிவதும் நிகழும்.
ஆடவர் பாலியல் மொழி :
எந்த ஒரு காரணமும் இன்றி ஆணும் பெண்ணும்
காதல் கொள்வது உயர்வானது. ஒரு
காரணம் பற்றி அவன் அழகானவன் அதனால் காதல் கொண்டேன்
என்றால் அது உண்மையான காதல் இல்லை.
ஆடவர் தங்களுடைய கவர்ச்சியைக்
காட்டிப் பெண்களை ஈர்க்க முயல்பவர்களும் உண்டு. குறிப்பாக இளைஞர்கள் இளைஞிகளை ஈர்ப்பதற்கு அழகிய தோற்றம்
கொண்டு ஈர்ப்பது. மேலும் சண்டியர் போலக் காட்டி ஈர்ப்பவர்களே
அதிகம் ஓடும் பேருந்தில் ஏறி இறங்குவது ; ஓடும் தொடர்வண்டியில்
வித்தைக்களைக்காட்டுவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது. இவை போன்று திரையில் நடிகர்கள் செய்யும்
ஆரவார சண்டைக் காட்சிகள் பெண்களைக் கவர்வதற்கு ஓர் உத்தியாக் கடைப்பிடித்து வென்றவர்களும்
உண்டு.
உண்மையில்
ஆடவரின்
உடல் அழகையே பெண்டிர் பெருதும் விரும்புவர். சல்லிக் கட்டு என்னும் ஏறுதழுவல் போட்டியில் காளையை அடக்கி வென்றவனுக்குத்
தன் மகளைத் திருமனம் செய்துவைக்கும் காலம் ஒன்று இருந்தது. காலப்போக்கில்
செல்வச் செழிப்பு, படிப்பு, பதவி,
இன்னபிறவும் ஆடவரின் திருமணத் தகுதிக்குரியனவாகப் பெற்றோர் முடிவு செய்தனர்.
பெண்டிரும் தன் கணவன் ஆண்மையுள்ளவனாக
உடல் வலிமை கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புவர்.
“ ஆண் வயதைக் குறைத்துக்
காட்ட முகச் சவரம் செய்து கொள்வது. நடனம் கூட வலுவான உடல் அழகை,
அசைவைக் காட்டும் இவையும் ஒரு
பாலினக் குறியீடு. இசை, நடனம் நாட்டிற்கு
நாடு வேறுபடலாம் ஆயினும் குறிக்கோள் ஒன்றுதான்; பாலுணர்வு பாற்பட்டது.
Pl. donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
.………………………தொடரும்
------------------------------