தமிழமுது –.64 . தமிழர் இயற்கை வழிபாடு.
வளமை வழிபாடு.
“உலகிலேயே குறைவான மூடநம்பிக்கைகளைக்
கொண்டவர் தமிழர்கள் .” அறிஞர் கால்டுவெல்.
எத்தியோபியா மொழியில் தமிழ் = அறிவு / பகுத்தறிவு.
தமிழரின் தொன்மை வழிபாடு:
1. வளமை வழிபாடு
2.
வீர வழிபாடு
3. அறிவு வழிபாடு.
வளமை வழிபாடு ( Fertility Cult) – தாய்த் தெய்வ
வழிபாடு ; கொற்றவை.
பயிர்கள் செழிப்பு வளம் – பெண்ணக உருவகப்படுத்தல்
. நிலமகள், நிலநங்கை.
இனக்குழு அடையாளத்தில்
வளத்தின் குறியீடாக –மரம்.
சேரன் –பனை
சோழன் – ஆத்தி
பாண்டியன் – வேம்பு.
மன்னர்களின் காவல் மரங்கள் (போரில் பகைமன்னர் தோற்கடிக்கப்பட்டபின்
வென்ற மன்னன் பகைமன்னனி காவல் மரத்தை வெட்டி வீழ்த்தித் தன் வெற்றியைக் கொண்டாடுவான்.)
காவல் மரங்கள், பின்னாளில் கோயில் (தல விருட்சங்கள்) மரங்களாயின..
மரம் காய்,கனிகள் தருவதுபோல் பெண், பிள்ளைகளைத்
தருதல் – வளக்குறியீடு.
மர வழிபாடு மனிதகுலம் முழுமையும்
உண்டு.
பெளத்தம் – அரச மரம்
சமணம் – அசோசக மரம்.
சைவம் – ஆலமரம்.
மழை வளம் - பெண்தெய்வம் –மாரி – குறியீடு.
மாரியம்மன் –அம்மன் வழிபாடு. வானமிழ்தம் –விளைவு.
அறுவடைத் திருநாள்;
அறுவடை செல்வச் செழிப்புக்கு அடையாளம்.
“ஊர் விளைந்தால் ஓட்டிற்குப்
பிச்சை.” –பழமொழி.
குமரி – வளமை வழிபாடு.
குறியீடு – கரகம்.ஒளவை
நோன்பு – வளமை வழிபாடு.
பெண் தலைமை : தொல்காலம்:
வளமை வழிபாடு – பெண் தெய்வ வழிபாடு.
தமிழில் தாய்த் தெய்வ வழிபாடு போரோடு
தொடர்புடையது. கொற்றவை வழிபாடு
– கரந்தைத் திணை.
“மறங்கடை கூட்டிய
துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப்
புறனே.” –தொல்காப்பியம்.
போருக்கு முன் வேந்தன் கொற்றவை
வழிபாடு நிகழ்த்துவான்.
கொற்றவை வழிபாடோடு இணைந்த்தே
பேய் வழிபாடு.
பேச்சியம்மன் , இயக்கியம்மன். (இசக்கியம்மன்.)
…………………………..தொடரும்……………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக