தமிழமுது – 62
. திருக்குறள்- கடவுள் வாழ்த்து ;
“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.” தொல்.புறத்.85.
மாற்றாரை வென்று உயர்த்திய
கொடியின் சிறப்பினைப் பாடுவது – கொடிநிலை.
மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக்க்
குறிப்பது –கந்தழி.
வள்ளல் தன்மையைக்குறிப்பது – வள்ளி.
பாட்டுடைத் தலைவனைப் பாடும்போது
கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என்பர்.
கொடிநிலை – மின்னலுக்கு நிலையாகிய மேகம் – வான் சிறப்பு.
கந்தழி – கந்து அழி ; பற்றுக்கோட்டை
அழித்தல் – நீத்தார் பெருமை.
வள்ளி – வள்ளன்மை ; அறத்தன்மை
– அறன் வலியுறுத்தல்.
என்றும் பொருள்கூறிப் பொருத்திக்காட்டுவர்.
திருக்குறள் பதிப்புகள் ;
முதல் பதிப்பு – 1811 ஆம் ஆண்டு அம்பலவாணக் கவிராயர்,
பரிமேலழகர் உரைப்பதிப்பு. 1840 ஆம் ஆண்டு,
இராமானுசக் கவிராயர் 24 அதிகாரங்கள் மட்டும் ஆங்கில
மொழிபெயர்ப்புடன்.
ஒப்பிட்டு உண்மை அறிதல் முதல் பதிப்பு 1812 என்றும் கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக