வெள்ளி, 31 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 117

தன்னேரிலாத தமிழ் – 117

மாறிக்கொண்டு இருப்பது மாளா இயற்கைதன்

   மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை

ஏறிக் கொண்டு இருந்திடும் காலப் படியில்மனிதன்

     எத்தனை புதுமைகள் செய்தான் முடிவில். 5.


திங்கள், 27 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 116


தன்னேரிலாத தமிழ் – 116

நில்லாமையே நிலையிற்று….”.குறுந்தொகை.143

இவ்வுலகில் நிலையாமையே நிலைத்திருப்பது.

மாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது”. –காரல் மார்க்சு.

தகுதி உள்ளவையே வாழும்.....சி.ஆர். டார்வின்.

 தகுதியின் மிகுதியே வெல்லும் வெல்லும்இந்தத்
      தங்கவேல் லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஓடும்நாளை
     மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும். 28.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 115


தன்னேரிலாத தமிழ் – 115

தாய்மொழி

 தாய்மொழி பேணார் நாட்டினை நினையார்
   தம்கிளை நண்பருக்கு இரங்கார்
தூயநல் அன்பால் உயிர்க்கு எல்லாம் நெகிழார்
   துடிப்புறும் ஏழையர்க்கு அருளார்
போய் மலை ஏறி வெறுங் கருகற்கே
பொன்முடி முத்தணி புனைவார்
ஏய்ந்த புன் மடமை  இதுகொலோ சமயம்
   ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே.
 தடங்கண் சித்தர். 8

சனி, 25 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 114


தன்னேரிலாத தமிழ் – 114

ரோமானியர்கள் யூதர்களை இசுரேலிலிருந்து வெளியேற்றியபின் அவர்கள் (Rabbis)  உயிர்ரொலி மொழியின் ஒலிப்புமுறை ஒழுங்குபடுத்துவதன் அவசியத்தை உணர்ந்தார்கள்.

எனவே அவர்கள் புள்ளி (Dots) சிறுகோடுகள் Dashes உருவாக்கினர். இதற்கு  (Nikkudim (Points) புள்ளிகள் என்று பெயர். புள்ளி / சிறுகோடு எழுத்தின் மேலே / கீழே இட்டு எழுதத் தொடங்கினர். இக்குறியீடுகளில் பெரும்பாலானவை உயிர் எழுத்துக்களுக்கு உரியவை ஆகும். எபிரேய முதல் எழுத்து Alef ( ) இறுதி எழுத்து (Tav) டவ் (அவ்) நெடுங்கணக்கில் .......!.

வெள்ளி, 24 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -113


தன்னேரிலாத தமிழ் -113

உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரப்புணருமாம் இன்பம்புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.”நாலடியார்.

நம்மை அறிந்துகொள்ள அறிந்திருக்கின்ற அறிவு உள்ளவர்களை நட்புக்கொண்டால் இன்பம் உண்டாகும் ; அறிந்துகொள்ளும் அறிவற்றவர்களை நட்பாகக்கொண்டால் அவரைவிட்டு நீங்கின் துன்பம் நீங்கும்.

வியாழன், 16 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -112

பெருகுவது போல் தோன்றி வைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் --- அருகெல்லாம்
சந்தன நீள் சோலைச் சாரல் மலை நாட
பந்தம் இலாளர் தொடர்பு.நாலடியார்.

பக்கங்களிலெல்லாம் சந்தன மரங்களுடைய பெரிய தோப்புகளோடு கூடிய சாரல் மலைகள் உடைய நாட்டிற்கு அரசனே..! மனத்தால் ஒன்றாதவருடைய நட்பு வைக்கோல் போரில் பற்றிய நெருப்பைப்போல வளர்வது போலத் தோன்றி ஒரு பயனுமின்றிக் கெடும்.

வெள்ளி, 10 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -111


தன்னேரிலாத தமிழ் -111

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதேதீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதேஅவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.வாக்குண்டாம்.

 தீய குணம் உடையவர்களைக் காண்பதும் ; அவர்களுடைய தீமை தரும் சொற்களைக் கேட்பதும் ; அவர்தம் தீமையான குணங்களை எடுத்துக் கூறுவதும் ; அவர்களோடு நட்புக் கொள்வதும் துன்பம் தரும்.

வியாழன், 9 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் -110


தன்னேரிலாத தமிழ் -110

நட்புஇடைக் குய்யம் வைத்து எய்யா வினைசூழ்ந்து                           
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் திட்பமாம்
நாள் உலந்தது அன்றே நடுவன் நடுவு இன்மை
வாளா கிடப்பான் மறந்து.” ---நீதிநெறிவிளக்கம்.

நண்பரிடமே வஞ்சகச் செயலை மேற்கொண்டு, அவர் அறியாமலேயே அவருக்கு இடையூறு செய்யத்தக்க காலம் நோக்கியிருந்து, நண்பரின் பகைவர் பக்கமாய்ச் சார்ந்து நிற்பவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், நட்பு கொன்ற  அன்றே முடிந்ததாகக் கொள்ள வேண்டும் ; இருந்தாலும் எமன் வஞ்சகனின் நேர்மையற்ற செயலைப் பொருட்படுத்தாது, அவனுடைய வாழ்நாள் முடியாததினால், அவன் உயிரைக் குடிக்காமல் வறிதே காலத்தைக் கழிப்பான்.