தன்னேரிலாத
தமிழ்
-113
“உணர உணரும் உணர்வுடையாரைப்
புணரப்புணருமாம் இன்பம் –புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலாதாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.” –நாலடியார்.
நம்மை அறிந்துகொள்ள
அறிந்திருக்கின்ற
அறிவு உள்ளவர்களை
நட்புக்கொண்டால்
இன்பம் உண்டாகும் ; அறிந்துகொள்ளும்
அறிவற்றவர்களை
நட்பாகக்கொண்டால்
அவரைவிட்டு
நீங்கின் துன்பம் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக