தன்னேரிலாத
தமிழ்
-110
“நட்புஇடைக் குய்யம் வைத்து எய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் திட்பமாம்
நாள் உலந்தது அன்றே நடுவன்
நடுவு இன்மை
வாளா கிடப்பான் மறந்து.” ---நீதிநெறிவிளக்கம்.
நண்பரிடமே வஞ்சகச்
செயலை மேற்கொண்டு, அவர் அறியாமலேயே அவருக்கு இடையூறு
செய்யத்தக்க காலம்
நோக்கியிருந்து, நண்பரின்
பகைவர் பக்கமாய்ச் சார்ந்து நிற்பவர்களுக்கு விதிக்கப்பட்ட
வாழ்நாள், நட்பு
கொன்ற அன்றே முடிந்ததாகக் கொள்ள வேண்டும் ; இருந்தாலும் எமன்
வஞ்சகனின் நேர்மையற்ற செயலைப் பொருட்படுத்தாது, அவனுடைய
வாழ்நாள் முடியாததினால், அவன்
உயிரைக் குடிக்காமல் வறிதே காலத்தைக் கழிப்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக