வெள்ளி, 31 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 15 முதல் பதிப்பு – 1909

அரிய நூல்கள் வரிசை –1: 15  முதல் பதிப்பு – 1909
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு
பெரியபுராணச் செய்யுட்டிரட்டு
மூலமும்
மகாவித்வான்
கா. இராமஸ்வாமி நாயுடு அவர்கள்
இயற்றிய
உரையும்
---**********-----
சென்னை
மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
-------********--------
1909

விலை – அணா 12

வியாழன், 30 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 14 இரண்டாம் பதிப்பு – 1902

அரிய நூல்கள் வரிசை –1: 14 இரண்டாம் பதிப்பு – 1902
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
ஒம்
“ ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி “
                                         ******************************************
வேதாந்தபோதினி
அல்லது
நாலு சிஷ்யர்களின் கதை
******************************
இஃது
ஓர் அந்தணரால் எழுதப்பட்டு
சென்னை – தமிழ் உபாத்தியாயர்
பெ . திருவேங்கிடாசாரியார்
அவர்களால்
-------------------------------

இரண்டாம் பதிப்பு
சென்னை
மநோன்மணிவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1902
இதன் விலை—அணா. 8

அரிய நூல்கள் வரிசை –1: 13 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை

அரிய நூல்கள் வரிசை –1: 13 முதல் பதிப்பு – ஆண்டு இல்லை
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
உலகம் போற்றும் உத்தமர்
மகாத்மா காந்திஜியின்
மரணப் பாட்டு
வெண்பா
கலியுகம் திகிலோங்க காந்திமகான் மரணத்தாலே
நதிபோல ஓடுதையா நாடுங்கண்ணீர்—பதிதனிலே
சதிகார கொலைஞனவன் சண்டாளன் – இந்நாட்டில்
அழிந்திடுவான் வேரோட ஒழிந்திடுவான்
*******************************************
ஜெகமெங்கும் டேப்புடன் பாடிவரும்
கும்பகோணம் பாணாத்துரை பத்துகட்டு வீதி
தங்கமெடல் பரிசுபெற்ற வித்வான்
K.. குருசாமிதாஸ் அவர்கள்
இயற்றியது

விலை- 2 அணா

செவ்வாய், 28 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 12 முதல் பதிப்பு – சருவஜித்து வருஷம் கார்த்திகை மாதம்

அரிய நூல்கள் வரிசை –1: 12  முதல் பதிப்பு – சருவஜித்து வருஷம் கார்த்திகை மாதம்
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
சிவமயம்
ஸ்ரீ. தாண்டவராய சுவாமிகள்
திருவாய்மலர்ந்தருளிய
கைவல்ய நவநீதம்
மூலமும்
ஸ்ரீ. கோயிலூர்
பொன்னம்பல சுவாமிகள்
இயற்றிய
தத்துவார்த்த தீபமென்னும்
உரையும்
-------**********-------
இவை
திருப்பாதிரிப்புலியூர்
க.ரா. சிவசிதம்பர முதலியாரால்
மொழித்திறமுட்டறவாராயப்பட்டு
-----------------*********-----------------------
மேற்படி – சுவாமிகளின் மாணாக்கர்களாகிய
சிதம்பரம் – செல்லப்பசுவாமி. சீ. இராமாநுஜமுதலியார்
இவர்களால்
கி. துரைசாமிபிள்ளையவர்களது
தஞ்சை “நாஷனல் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டன
-----------------*********------------
சருவஜித்து (வரு.) கார்த்திகை (மா.)

இதன் விலை – ரூ-உ

திங்கள், 27 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 11 முதல் பதிப்பு – 1931

அரிய நூல்கள் வரிசை –1: 11  முதல் பதிப்பு – 1931
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
அன்புமயம்
ஞானக் களஞ்சியம்
ஆசிரியர்
ஸ்ரீகுரு கருணையானந்த ஞானபூபதிகள்
திருவாரூர் -  விஜயபுரம்
எம்.ஏ. நாவலர் & சன்ஸ் வெளியீடு
1931

( ஆசிரியரின் பிள்ளைத் திருநாமம் “ முஹம்மது இபுறாஹீம்”)

சனி, 25 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 10 முதல் பதிப்பு – 1938

அரிய நூல்கள் வரிசை –1: 10  முதல் பதிப்பு – 1938
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     
கிறிஸ்தவமும் தமிழும்
கிறிஸ்தவரால் தமிழுக்கு உண்டான
நன்மைகளைக் கூறும் நூல்

மயிலை. சீனி. வேங்கடசாமி
இயற்றியது

பதிப்பாளர்:
கா.ஏ. வள்ளிநாதன்
மயிலாப்பூர். சென்னை

1938

அரிய நூல்கள் வரிசை –1: 9 முதல் பதிப்பு – 1953

அரிய நூல்கள் வரிசை –1: 9  முதல் பதிப்பு – 1953
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)      ENGLISH
RUSKIN’S
UNTO THIS LAST
Edited with
Notes and Essays by
P.K. VENKATA RAO
Professor of English St. Joseph’s College
Bangalore
----------**************-------------
SELECT PUBLISHING HOUSE

46-THIRD ROAD- BASAVANGUDI – BANGALORE_4

வியாழன், 23 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 8 முதல் பதிப்பு – 1944

அரிய நூல்கள் வரிசை –1: 8  முதல் பதிப்பு – 1944
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)     தொனி விளக்கு – தமிழ் நூல்

TONIVILAKKU
( TRANSLATION OF SANSKRIT DHVANYALOKA)
By
Vidyaratna P.S. SUBRAHMANYA SASTRI M.A Ph.D
Professor of Sanskrit. Annamalai University
& formerly
Professor of Oriental Studies Bishop Heber College. Trichy
Asst. Editor Tamil Lexicon University of Madras
And Principal Raja’s college of Sanskrit
& Tamil Studies Tiruvadi
*******
Published under the kind Patronage of
His Holiness Kasivasi Arulnandi Tambiran Swamigal
Head of the Tiruppanandal Mutt
********
TRICHINOPOLY

1944                                                            (Price: Rs. 3

அரிய நூல்கள் வரிசை –1: 7 முதல் பதிப்பு – 1887

அரிய நூல்கள் வரிசை –1: 7   முதல் பதிப்பு – 1887
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
ஸ்ரீ
ஸ்ரீராமஜெயம்
கருடபுராணமென்று வழங்குகிற
ஸ்ரீ கருடபுராண வசனம்
----------*******----------------
இஃது
லெத்தகிராப் சித்திர படங்கள் அயிதீகப்படி
நூதனமாக செய்து
கவித்தலம்
ஸ்ரீமாந் துரைசாமி மூப்பனாரவர்
மொழிபெயர்க்கப்பட்டபிரதிக்கிணங்க
-------**********-----------
பில்லரம்பாக்கம்
இரங்கசாமிமுதலியாரால்
திருத்தணிகை
சித்தைய ரவர்களது
-------*******-----------
வாணீவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
----------------

1887

செவ்வாய், 21 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 6 முதல் பதிப்பு – 1903

அரிய நூல்கள் வரிசை –1: 6   முதல் பதிப்பு – 1903
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)

கடவுள் துணை
-----------------------
முத்துக்குமாரசுவாமிபேரில்
சுப்பராமையர் பதம்
இஃது
சிதம்பரம்
கருணானந்தசுவாமிகளால்
முன்பார்வையிடப்பட்டப்பிரதிக்கிணங்க
சிந்தாதிரிப்பேட்டை
நாராயணசாமி முதலியார்
அண்டு சன் அவர்களது
பிரபாகர அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது

1903

திங்கள், 20 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 5

அரிய நூல்கள் வரிசை –1: 5   நான்காம் பதிப்பு – பராபவ வருஷம்
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
கந்தபுராணம்
-------------------*********--------------
சுப்பிரமணியசுவாமி வரப்பிரசாதியாயும்
குமரக்கோட்டத்தருச்சகராயும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருந்த
கச்சியப்பசிவாசாரியசுவாமிகள்
அருளிச் செய்தது
_____*********_____
இஃது
யாழ்பாணத்து நல்லூர்
ஆறுமுகநாவலரவர்களால்
பலபிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்து
மேற்படியூர்
சதாசிவப்பிள்ளையால்
சென்னபட்டணம்
வித்தியாநுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது


நான்காம் பதிப்பு
பராபவ வருஷம்  ஐப்பசி மாதம்

அரிய நூல்கள் வரிசை –1: 4 முதல் பதிப்பு – 1908

அரிய நூல்கள் வரிசை –1: 4   முதல் பதிப்பு – 1908
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
சிவமயம்
சர்வசமயசமரசக்
கீர்த்தனைகள்
---------------------*********------------
இஃது
மாயூரம் மாஜி முன்சீப்
ச. வேதநாயகம்பிள்ளை
அவர்களாலியற்றிய கீர்த்தனைகள்
முழுமையும் பதிப்பியாமலிருந்ததையும்
சில அச்சுக்கூடத்தாரால் பதிப்பித்ததையும்
அருட்கவி கி. ஊ. பா.
கங்காதர நாவலரவர்களால்
பரிசோதிக்கலுற்ற
பிரதிக்கிணங்க
சென்னை – இட்டா
பார்த்தசாரதி நாயுடு
அவர்களாற்றமது
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
-------------------********------------------
1908
சென்னை – ஆச்சாரப்பன் தெரு. நெ.84

ஞாயிறு, 19 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை –1: 3 முதல் பதிப்பு – 1921

அரிய நூல்கள் வரிசை –1: 3   முதல் பதிப்பு – 1921
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
குருவே துணை
சைவசமயமும் தமிழ்ப்பாடையும்
________*********________
இஃது
கருப்புக்களர்
திருவருள் சுப்பைய சுவாமிகள்
மாணாக்கர்களிலொருவருனாகிய
திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்
எழுதியது
_______*********----------
மேற்படி சுவாமிகள்
மாணாக்கர்களிலொருவராகிய
திருக்கோட்டூர்
மு. சீனிவாச தேவர் அவர்களால்
மன்னார்குடி
பாரதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது
கலி ரு0உஉ )            1921              (விருச்சிக ஞாயிறு

சனி, 18 ஜூலை, 2015

அரிய நூல்கள் வரிசை – 1: 2 முதல் பதிப்பு – 1880

அரிய நூல்கள் வரிசை – 1: 2   முதல் பதிப்பு – 1880
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
----------------------------------------------------------------------------------------------------
கடவுள் துணை
அதிவீரராமபாண்டியர்
திருவாய்மலர்ந்தருளிய
நைடத மூலமும்
--------------------******* -----------------
திருத்தணிகை கந்தப்பையாகுமாரர்
சரவணப்பெருமாளையராலும்
இவர் – குமாரர்
கந்தசாமி ஐயராலும்
செய்யப்பட்டபதவுரையும்
------- ****** -------
களத்தூர் – தமிழ்ப்புலவர்
வேதகிரி முதலியாரால்
செய்யப்பட்டகருத்துரையும்
பலவிலக்கண மேற்கோளுமாகிய
-------********---------
இஃது
சிதம்பரம்
கருணானந்தசுவாமிகளவர்களால்
பரிசோதித்துச்
சிந்தாத்திரிப்பேட்டை
நாராயணசாமிமுதலியாரவர்களாற்றமது
பிரபாகர
அச்சுக்கூடத்திற்பதிப்பிக்கப்பட்டது
க அ அ ய ------- ஆகஸ்டு  (1880)


வெள்ளி, 17 ஜூலை, 2015

அரிய நூல் வரிசை – 1

அரிய நூல் வரிசை – 1
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)

கடவுள் துணை
கருப்ப சாஸ்திரம்
இஃது
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும்
மேரி அரசி கலாசாலைத் தமிழ்ப் பண்டிதரும் ஆகிய
திருவாளர் கா. நமச்சிவாயமுதலியாரவர்கள்
மாணாக்கரும்
தமிழ்ப் பண்டிதரு நேடிவ் டாக்டருமாகிய
வீ. ஏ. முனிசாமிப்பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது.
-------------******---------
ஸ்ரீ மஹான் – சாது – சை. இரத்தின சற்குரு
அவர்களின் பாதசேகரரும்
பஞ்சபத மஹா வாக்கிய ரஹஸ்ய முதலிய நூல்களைப்
புதிய முறையில் அமைத்துக் கொடுத்தவரும் ஆகிய
திருவாளர் அ மஹாதேவசெட்டியாரவர்களால்
இந்நூல்
நூதன முறையில் அமைக்கப்பெற்று
மேற்படியாராலேயே பார்வையிடப்பெற்றது
-------------------******** ----------------------
பெ. ஆதிமூலமுதலியாரவர்களால்
தமது
ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ்ஸில்
பதிப்பிக்கப்பெற்றது
----------------- ********* -----------------
1927

விலை ருபா.                                               1-8-0

களப்பாள்----- kalappal: அன்புடையீர் வணக்கம்

களப்பாள்----- kalappal: அன்புடையீர் வணக்கம்: அன்புடையீர் வணக்கம் - குறுந்தொகை -அரிய செய்தி; முற்றும்- அடுத்து வருவது- நற்றிணை -அரிய செய்தி.

வியாழன், 16 ஜூலை, 2015

அன்புடையீர் வணக்கம்

அன்புடையீர் வணக்கம் - குறுந்தொகை -அரிய செய்தி; முற்றும்- அடுத்து வருவது- நற்றிணை -அரிய செய்தி.

செவ்வாய், 14 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 30-32

குறுந்தொகை - அரிய செய்தி - 30
340 – தலைவி நெஞ்சம்

353 – இனிதே ; இன்னாதே
பஞ்சி வெந்திரிச் செஞ்சுடர் நல் இல்பஞ்சி வெள்ளிய திரி  உடைய விளக்கு.
                                                    சூடும் குளிரும்
    மன் உயிர் அறியாத் துன்னரும் பொதியில்
    சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
    வேனிலானே தண்ணியள் பனியே
    வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
    அலங்கு வெயிற் பொதிந்த தாமரை
    உள்ளகத் தன்ன சிறுவெம்மையளே
                     படுமரத்து மோசி கொற்றன், குறுந்.376
         தலைவி, கோடைக் காலத்தில் கமழும் தண்ணிய மணம் உடையவள் (சந்தனதைப் போன்றுபனிக்காலத்தில் சிறு வெம்மையள் ( தாமரை மலரைப் போன்று ). மாறுபட்ட இரண்டு இயல்புகள்கேணி நீர், கீற்றுக் கூரை வேய்ந்த வீடு இத்தன்மையன என்பார்ஆய்க.
குறுந்தொகை - அரிய செய்தி - 31
                                               உணவு
 குறிஞ்சி நில உணவு
நெய்கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக ..
                      வேட்ட கண்ணன், குறுந். 389: 1,2
தலைவன் விரும்பும் காடைக்கறியோடு தேனும் கனியும் பெறுவானாக.
 குறும்பூழ்ப் பறவை தொடர்பான செய்திகளை ஆய்க.
குறுந்தொகை - அரிய செய்தி - 32                        
                                               பசலை
மருதம்
பாசி அற்றே பசலை காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்தலானே
               பரணர், குறுந். 399 : 3 – 5
பசலைதலைவன் தொடுந்தோறும் நீங்குவதாகவும்  விட்டு நீங்குந்தோறும் உடலெங்கும் பரவுவதாகவும்….
பசலைதோல் மேல் படரும்கவலையால் இந்நோய் வருமா ? மனத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை  மருத்துவ அறிவியல் கொண்டு ஆய்க.திங்கள், 13 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 27-29

குறுந்தொகை - அரிய செய்தி - 27
                                                                            வெறியாடுதல்
மறிக்குரல் அறுத்துத் திணைப் பிரப்பு இரீஇ
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
                       பெருஞ்சாத்தன், குறுந். 263 : 1 – 3
வெள்யாட்டிக் குட்டியின் கழுத்தை அறுத்து, தினை அரிசி ந்ரம்பிய பிரம்பின் கூடையை வைத்து வெறியாடற்குச் செல்கின்ற ஆற்றின் நடுவில் அமைந்த மணல் திட்டில் பல இசைக் கருவிகள் ஒலிக்க வேலன் முதலியோரை ஆவேசித்துத் தோன்றுதல் .....
குறிஞ்சி நிலச் சடங்கு -  இஃது இல்லச் சடங்கா ?
மேலும் காண்க : திருமுருகா. 239- 242, அகநா. 292. குறுந்.362
குறுந்தொகை - அரிய செய்தி - 28
                                                          சேமச்செப்புஎன்சிபிஎச்உரையில் குழப்பம்
       அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
        சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே
                                                   ஓரிற்பிச்சையார், குறுந். 277 : 4, 5
  பனிக்காலத்திற்கு ஏற்ற விரும்பத்தக்க வெப்பத்தோடு கூடிய மெல்லிய நீரை, மூடியுடன் கூடிய காப்பினையுடைய கலத்தில் பெறுவாயாக.

                      சேமச் செப்பு என்பது ஒருவகை வெப்பம் காக்கும் தன்மையுடைய கலம் ஆகலாம். இஃது இன்றைய குடுவை போன்றதாகலாம். இதனைப் பயணக் குடுக்கை எனலாம். இயற்கைப் பொருளால் ஆன இக்குடுக்கை குறித்து ஆய்க.    
குறுந்தொகை - அரிய செய்தி - 29
                                                           குற்றமும் தண்டனையும்
  மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
                     பரணர், குறுந். 292 : 1 - 5
 கோசர் வரலாறுபெண்கொலை புரிந்த நன்னன்புனல் தரு பசுங்காய் தின்ற பெண்
 கோசர் குலப் பெண் என்பர். – பகைமுக ஊர்கோசர் / நன்னன்வரலாறுஆய்க