ஞாயிறு, 5 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 41--45

புறநானூறு – அரிய செய்தி - 41
297 – சாடிஜாடி
                                         பூப்பு
பூப்பால் மாத விலக்குண்ட மகளிர்கலம் தொடார்  - தீட்டு
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம்  தொடா மகளிரின் .....
                                                              பொன்முடியார்,புறம்.299: 6,7
பூப்புக் காலம் கூட்டத்துக்கு ஆகாதென்பது பற்றி பூபுற்ற மகளிர் மனைகளில் கலம் தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர் மரபு. பூப்புத் தோன்றக்கண்ட மகளிர் அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கு அஞ்சி நீங்குவது போல் .. ஒளவை உரை.
புறநா.299.
புறநானூறு – அரிய செய்தி - 42
                                குமரியின் கூந்தல்பிறரால் தீண்டப்படாத
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலி
                                                   ஆவூர் மூலங்கிழார், புறநா.301 : 2, 3
மணம் செய்யப்பெறாத பெண்ணின் கூந்தலைப் போல ஒருவராலும் தீண்டப்பெறாத இயல்புடைத்தாய் போர்குறித்து இடப்பட்ட இடுமுள் வேலி.
புறநானூறு – அரிய செய்தி - 43
                                  தூது செல்வார் இலக்கணம்
 வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்தி பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணி களைந்தனவே
                                                மதுரை வேளாசான், புறநா. 305
போரைத் தவிர்த்த செய்தி , பார்ப்பான் தோற்றம்,தூது போவான் இலக்கணம் யாது ? உரை விளக்கம் : அந்தணன் தூதாகச் சென்றமையும் அத்தூதின் பயனும் உணர்த்தப்பட்டுள்ளன, அந்தணன் உண்டி குறைதலால் மெலிந்த தோற்றம் உடையவனாகவும், சிற்றுயிர்க்கு அஞ்சும் தண்ணளியுடைமையால் தளர்ந்த நடையுடையவனாகவும் குறிக்கப்பட்டுள்ளான். ( ஆய்க)
புறநானூறு – அரிய செய்தி - 44
                                  வண்ணான் துணி வெளுத்தல்களர் நிலம்
களர்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
                                         ஒளவையார், புறநா.311: 1-3
உவர் நிலத்தில் கிணறு தோண்டி நாள்தோறும் ஆடையை வெளுப்பவளால் தூய்மை செய்யப்பட்ட மிக வெள்ளிய ஆடை, எருப்பொடிகளை உடைய வீதியில், அழுக்குப் படும்படியாக இருந்தது.                                                                                                           
புறநானூறு – அரிய செய்தி - 45
                                                  தீக்கடை கோல்
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல
                                                                ஒளவையார், புறநா. 315 : 4
தீக்கடை கோல் பயன்படுத்தபடாத காலங்களில் வீட்டின் இறப்பில்  செருகிவைக்கும் வழக்கம் சுட்டப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக