ஞாயிறு, 5 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 46--50


புறநானூறு – அரிய செய்தி - 46
                                               குறும்பூழ்ப்  போர்
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம்கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூம்பொருட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட
கலிஆர் வரகின் பறங்குபீள் ஒளிக்கும்
வன்புல வைப்பினதுவே .......
                          உறையூர் மருத்துவன்  தாமோதனார், புறநா.321 : 1-7
குறும்பூழ்ப் பறவை(கெளதாரி / சிவல் / காடை  Indian Partridge) போர்ப் பயிற்சி தந்து பழக்கப்படும் பறவையாகும்.முறத்தில் உலர வைக்கப்பட்டுள்ள வெள்ளிய எள்ளைத் தின்று எலியைப் பற்றுவதற்காக வரகுப் போரில் பதுங்கிக் கொண்டிருக்கும்.
தலைவன் :-
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் அனைத்தல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
 மருதன் இளநாகனார், கலித். 95 :5-7
செறிந்து விளங்குகின்ற பல்லினை உடையாய், யாம் புதிதாக வேறு வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம் ; அதையன்றிப் பிறிது நான் ஏதும் அறிந்ததில்லை ; நீ வேறு ஏதோதோ நினைக்கின்றாயே.
நச்சினார்க்கினியர் உண்மையான குறும்பூழ்ப் போர், பரத்தையாகிய குறும்பூழ்ப் போர் என இரண்டாக்க் கொண்டு இருவகையாக உரைவரைந்தனர்.
சங்ககால மக்கள் பொழுது போக்காகப் பல விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தனர்; குறும்பூழ்ப் போரும் இத்தகைய விளையாட்டுக்களுள் ஒன்று.
மேலும் காண்க :-  1) Hungeree.com, Partridge fighting in Kabul.
2) Beauty  Withuout cruelty.India, Pune- 411 040
புறநானூறு – அரிய செய்தி - 47
                                                     கரும்பாலை
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ..
                                                ஆவூர்கிழார், புறநா. 322: 7, 8
கரும்பைச் சாறு பிழிகின்ற ஆலைகளில் எழும் ஓசை கேட்டு, அருகில் உள்ள பெரிய பிடரியையுடைய வாளை மீன்கள் துள்ளுகின்ற 
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங் கடையே
                                                 ஒளவையார், புறநா.392 : 20, 21
கடற்கு அப்பாலுள்ள தாய்நாட்டில் உள்ள பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டு வந்தவனுடைய பெரிய வழித்தோன்றல்.
( அந்தரத்து = வேற்று நாடு )அதியமான் முன்னோர்கள் கரும்பினைக் கொண்டுவந்த செய்தி.)
மேலும் காண்க ;- ஐங், 55, பெரும்பாணா. 260                                                                         கருப்பை = எலி
புறநானூறு – அரிய செய்தி - 48


                              காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறை
புலிப்பாற்பட்ட ஆமான் குழவிக்குச்
சினம்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
                                      ஆ.பெ. இல்லை, புறநா.323 : 1, 2
புலியினால் தாய்ப் பசு கொல்லப்பட்டமையால், ஆமானின் கன்று தாயின்றித் தவிப்பது அறிந்து, பசு ஒன்று தன் கன்றைப் போல் அக்கன்றிற்குப் பால் ஊட்டி வளர்ப்பதாயிற்று.
புறநானூறு – அரிய செய்தி - 49
325 – முது கண்பாதுகாப்பாளர்
326 – பருத்தி நூற்றல்உடும்பு உணவு
327 – வரகு கடன்பெறல்
331 – பலருக்கும் சோறு அளிக்கும் செல்வர் பலியூட்டு எனப்படும்
338 – மூவேந்தரும் வந்தாலும் வணங்காவிடில் மகள் தரவல்லேன்
           செறுமேட்டுப் பாங்கான வயல் ; நன்செய்பள்ளப்பாங்கான
புறநானூறு – அரிய செய்தி - 50
              சுடுகாடு  *  - வென்றார் உண்டோ ? ஒரு கருத்து ஒரு பாடல்
களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூவும் கூகையொடு பிறழ்பல்
ஈமவிளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று  இம்மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சுஅமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு கடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்
தன்புறம் காண்போர்க் காண்புழி அறியாதே
                                                        தாயங்கண்ணனார், புறநா. 356
காடு படர்ந்து, கள்ளி மிகுந்து, பகல் பொழுதிலும் கூவும் கூகையாலும் பிணஞ்சுடும் தீயின் அழலானும் அகன்ற வாயையுடைய பேய் மகளிரானும் இந்தப் புகை தவழும் சுடுகாடு – காண்பார்க்கு  அச்சம் வரச்செய்வதாயிற்று. உள்ளத்தே அமர்ந்த, விரும்பிய காதலை உடைய மகளிர் அழுதலால் பெருகும் கண்ணீர், எலும்பு கிடக்கும் சுடலையிடத்துள்ள வெண்ணிய சாம்பலை அவித்து நின்றது. இம்முதுகாடு, எல்லோர் முதுகையும் தான்கண்டு, உலகத்து மக்கட்தொகுதிக்கெல்லாம் தானே இருப்பிடமாயிற்று, மன்பதையுள் தன்னைப் புறங்காண வல்லவர்களைக் கண்டறியாதாயிற்று இம்முதுகாடு. மேலும் காண்க. குறுந். 92

பின்புல வருணனைகள் ஏதுமின்றிக் கருத்தை மட்டும் காட்சிப்படுத்தும் பாடல்களைத் தொகுத்து ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக