செவ்வாய், 14 ஜூலை, 2015

குறுந்தொகை - அரிய செய்தி - 30-32

குறுந்தொகை - அரிய செய்தி - 30
340 – தலைவி நெஞ்சம்

353 – இனிதே ; இன்னாதே
பஞ்சி வெந்திரிச் செஞ்சுடர் நல் இல்பஞ்சி வெள்ளிய திரி  உடைய விளக்கு.
                                                    சூடும் குளிரும்
    மன் உயிர் அறியாத் துன்னரும் பொதியில்
    சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
    வேனிலானே தண்ணியள் பனியே
    வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
    அலங்கு வெயிற் பொதிந்த தாமரை
    உள்ளகத் தன்ன சிறுவெம்மையளே
                     படுமரத்து மோசி கொற்றன், குறுந்.376
         தலைவி, கோடைக் காலத்தில் கமழும் தண்ணிய மணம் உடையவள் (சந்தனதைப் போன்றுபனிக்காலத்தில் சிறு வெம்மையள் ( தாமரை மலரைப் போன்று ). மாறுபட்ட இரண்டு இயல்புகள்கேணி நீர், கீற்றுக் கூரை வேய்ந்த வீடு இத்தன்மையன என்பார்ஆய்க.
குறுந்தொகை - அரிய செய்தி - 31
                                               உணவு
 குறிஞ்சி நில உணவு
நெய்கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக ..
                      வேட்ட கண்ணன், குறுந். 389: 1,2
தலைவன் விரும்பும் காடைக்கறியோடு தேனும் கனியும் பெறுவானாக.
 குறும்பூழ்ப் பறவை தொடர்பான செய்திகளை ஆய்க.
குறுந்தொகை - அரிய செய்தி - 32                        
                                               பசலை
மருதம்
பாசி அற்றே பசலை காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்தலானே
               பரணர், குறுந். 399 : 3 – 5
பசலைதலைவன் தொடுந்தோறும் நீங்குவதாகவும்  விட்டு நீங்குந்தோறும் உடலெங்கும் பரவுவதாகவும்….
பசலைதோல் மேல் படரும்கவலையால் இந்நோய் வருமா ? மனத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை  மருத்துவ அறிவியல் கொண்டு ஆய்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக