ஞாயிறு, 31 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 313

திருக்குறள் – சிறப்புரை : 313
பகைவர்க்கும் அருள்வாய்..!
 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். – 313
வேண்டாதவர்களாயினும் அவர்கள் ஒரு தீங்கும் செய்யாமலிருக்கும்போது அவர்களுக்குத் தீங்கு செய்தால், உய்வதற்கு வழி இல்லாத அளவு துன்பம் பலவற்றையும் துய்க்க நேரிடும்.

தேடித் துன்பம் இழைத்து ---   துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே.

சனி, 30 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 312

திருக்குறள் – சிறப்புரை : 312
பழிக்குப் பழி - பகையே
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். – 312
வஞ்சக மனத்தன் ஒருவன் தனக்குத் தீங்கு செய்தபோதும் அவனைப் பழிதீர்த்தல் பொருட்டு தானும் அவனுக்குத் தீங்கு  செய்யாமல் இருப்பது  மாசற்ற மனமுடையாரின் கொள்கையாம்.
பழி தீர்க்க எண்ணும் மனம் மாசுடையது. 

வெள்ளி, 29 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 311

திருக்குறள் – சிறப்புரை : 311
32.இன்னா செய்யாமை
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். – 311
எல்லா வகையான சிறப்புகளையும் தரக்கூடிய செல்வளத்தைப் பெற்றிருந்தாலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர்களுடைய கொள்கையாகும்.
செல்வம் – சிறியன சிந்திக்கத் தூண்டும்.     

வியாழன், 28 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 310

திருக்குறள் – சிறப்புரை : 310
இறந்தார் அனையர்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. – 310
 கடுஞ் சினம் கொண்டவர்  இருந்தும் இறந்தாரைப் போன்றவர் ; சினத்தைத் நீக்கினாரே உண்மையில் துறந்தவராவார். கணமேயும் காத்தல் அரிதாகிய வெகுளியை வென்றவரே  சான்றோர்.

புதன், 27 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 309

திருக்குறள் – சிறப்புரை : 309
பதறிய காரியம் சிதறும்
 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். – 309
 ஒருவன், தன்மனத்தில் வெகுளிக்கு இடம் கொடுக்காதிருப்பானாகில் அவன் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நிறைவேறும்.
வெகுளியால் விளைவது தீமையே.    

செவ்வாய், 26 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 308

திருக்குறள் – சிறப்புரை : 308
சினமும் குணமும்
இணரெரி தோய்தலன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. – 308
பல சுடர்களை உடைய பெரும் நெருப்பு, தன்னைத்
தழுவித் தீய்த்தலை ஒத்த துன்பத்தை ஒருவன் செய்யினும் அவனிடத்து இயன்றவரை சினம் கொள்ளாமல் இருப்பது நல்லது.
சினம் என்னும் நெருப்பில் மூழ்காது – குணம் என்னும் குளத்தில் மூழ்கு. 

திங்கள், 25 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 30

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் –  30
பசலை….. 2 ( ஒவ்வாமைத் தோல் அழற்சி )
In addition to irritants and allergens, emotional factors, skin infections, and temperature and climate play a role in atopic dermatitis. Although the disease itself is not caused by emotional factors, it can be made worse by stress, anger, and frustration. Interpersonal problems or major life changes, such as divorce, job changes, or the death of a loved one, can also make the disease worse.

மேற்சுட்டியுள்ள மருத்துவ அறிவியல் காரணிகளோடு, காதல் – காமம் – பிரிவு – மன அழுத்தம் முதலிய காரணிகளோடு பசலை நோய் தோற்றம் குறித்துச் சங்கப்புலவர்தம்  கூற்றை ஆராய்ந்து காண்போம்.
காம நோய்
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கட்நோய்
          -கபிலர் , குறிஞ்சிப். 1 – 3
ஒளி பொருந்திய நெற்றியையும் தழைத்த மெல்லிய கூந்தலையும் பிறர் நிறத்தினை வெல்லும் வெற்றியுடைய நிறத்தினையும் உடைய என் தோழி, தன் மனத்திற்குள், தன் உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவினை மறைத்தாள்; அதனால் அவள் அணிந்திருந்த அணிகள் நெகிழப்பெற்றன. மருந்துகளால் நீக்குதற்கரிய கடிய இந்நோயை நினக்குச் சொல்லுதல் எளிதன்று – வலிமையுடைத்து…..( வீவு அருங் கடு நோய் – போக்குதற்கரிய காம நோய்.)
 காமநோயின் ஆற்றலைத் தாக்குப்பிடிக்கமுடியாத உடலும் உள்ளமும் அடைந்த நிலையைத் தோழியின் கூற்றாகத் தான் அறியமுடிகிறது. இக்கூற்று, குடிப் பெருமையின் பண்பாடு சார்ந்தது, ஒரு பெண்ணின் களவொழுக்கம் நேர்கூற்றாக அமைதல் இயலாததொன்றாகும்.
நோய்க் குறிகள்
                            சுவையறிதலில் ஐம்புலன்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவையை மட்டுமே அறியும் ஆற்றல் உண்டு ; ஐம்புலன்களும் ஒருசேர துய்க்கும் சுவை – இன்பச்சுவை – காம இன்பம் ஒன்றே. அதனால் ‘இன்பத்துட் சிறந்தது காம இன்பம்” என்பர்.
காமக் களிப்பு
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
                               கணக்காயனார், நற். 23 : 8, 9
தெளிந்த நீரில் உள்ள மலர்போன்ற இவள் கண்கள் அழகு இழந்தன ; அவை காமத்தை மறைக்க இயலாது தவிக்கின்றன.
கவலை
உரம் செத்தும் உளெனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே
         உறையூர் முதுகண்ணன் சாத்தன், குறுந். 133: 4, 5
தோழி ! தலைவன், என் பெண்மை நலத்தை நுகர்ந்து, பிரிந்து சென்றுவிட்டான், தனிமையில் தவித்து, என் உடல் வலிமை அழிந்தும் இன்னும் உயிருடன் இருக்கின்றேனே, என்றனள் தலைவி.
வெறுப்பு
கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே
                          கபிலர், குறுந். 187 : 4, 5
 மணம் முடிக்க மனமில்லாத தலைவன், கல்லைவிட வலிய நெஞ்சுரம் உடையவன் எனக் கருதாது, என் மனம் அவனையே நினைத்து வருந்துகின்றதே – தலைவி.
தூக்கமின்மை
கனையிருங் கங்குலும் கண்படை இலெனே
அதனான் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என் அவலம் உறு நெஞ்சே
                                  வெள்ளிவீதியார், நற். 348 : 8 – 10
தலைவனிடம் கொண்ட மிகுந்த அன்பினாலே ஆற்றாமையால் வருந்துகிறேன், தூக்கம் இல்லை, இவ்வுலகம் என்னோடு போரிடுகிறதோ அல்லது இவ்வுலகத்தோடு என் அவல நெஞ்சம் போரிட எழுகின்றதோ..? – தலைவி.
கனவு
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும்பெறல் உயிரே
                    நல்லந்துவனார், கலித். 128 : 24 – 26
தோழி! யான் காணும்படி என் கனவிலே வந்த தலைவன், நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதி, அவன் வரவை எதிர்நோக்கி என் அரிய உயிரும் நீங்காது நின்றது, என்றனள் தலைவி.
தனிமைத் துயர்
குப்பைக் கோழித் தனிப் போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே
                                   குப்பைக் கோழியார், குறுந். 305 : 6 – 8
 தலைவனைக் காணாது வருந்தும் நெஞ்சே !  குப்பைக் கோழிகள் தாமே தனிமையில் நிகழ்த்தும் போர், விலக்குவாரின்றி  அதுவாக முடியுங் காலத்தில் முடியும், அதுபோல நான் உற்ற நோயும் நீக்குவார் ஒருவருமின்றி வருத்துகிறதே  என்று தன் மனத்துள் புலம்பினள்.
அச்சம்
சுடுவாள் போல் நோக்கும்
அடுபால் அன்ன என் பசலை மெய்யே
                  ……………….. நற்.175 : 8,9
தோழி ! சுடுபால் மேல் ஆடை படர்வது போல்,  பசலை படர்ந்த என் மேனியைச் சுடுவது போல் நோக்கினளே அன்னை - தலைவி

பசலை
பாசி அற்றே பசலை காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்தலானே
                      பரணர், குறுந். 399: 3 – 5
பாசி போலும் பசலை, தலைவன் தொடுந்தோறும் நீங்கி, அவன் விட்டு விலகுந்தோறும் உடலெங்கும் பர நிற்கிறதே,
 ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆயிழை மேனிப் பசப்பு
                 கபிலர், கலித். 42 : 31, 32
 தோழி ! தலைவனைக் கண்டதும் என் மேனியில் படர்ந்திருந்த பசலை, ஞாயிற்றின் முன் இருள் போல் மறைந்ததே – என்றாள் தலைவி.
பசலை, பாசிபோலும் பாலாடை போலும் பொன்னிறம் போலும் என்றெல்லாம் மேனியில் படரும் பசலையின் நிறம் குறிக்கப்படுகிறது.
பசலை, தோன்றி மறையும் தோல் நோயாகவும் சுட்டப்படுகின்றது.
பசலை, மன அழுத்தத்தால், கவலையால், தன்னையே வருத்திக்கொள்ளும் பெருந்துயரால், அன்புடன் அணைத்துத் தீர்ப்பாரின்றித் தோறுவதாகச் சுட்டியுள்ளமை ஆராய்தற்குரியது.
 பசலை, பருவமடைந்த, பெற்றோர் அறியாது காதல்கொண்ட பெண்களிடத்தில் காதல் கிளர்ச்சியின் காரணமாகப் பசலை நோய் தோன்றுகிறது ;  வெளியிட இயலாத வேறு காரணங்களாலும்  மன அழுத்தம் காரணமாகவும் எவரிடத்து வேண்டுமானாலும் தோன்றலாம்.
பசலை நோய்க்குக்கு முதன்மைக் காரணி – மன அழுத்தம் ; அதனால் ஏற்படும் கவலை,  செயல் தடுமாற்றம், தூக்கமின்மை, தனிமை,  வெறுப்பு, அச்சம், கனவு, இன்னபிறவற்றால் துன்புறுதல்.
மேற்சுட்டியவற்றை மருத்துவ அறிவியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சங்கப்புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் தெற்றென விளங்கும். 

For More Information

National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases (NIAMS) 
Information Clearinghouse
National Institutes of Health
Email: NIAMSinfo@mail.nih.gov
Website: 
http://www.niams.nih.gov                    ……………………………… முற்றும்
திருக்குறள் – சிறப்புரை..................................... தொடரும் ………………..

ஞாயிறு, 24 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 29

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் –  29
 பசலை
What Is Acute Stress Disorder?
In the weeks after a traumatic event, you may develop an anxiety disorder called acute stress disorder (ASD). ASD typically occurs within one month of a traumatic event. It lasts at least three days and can persist for up to one month. People with ASD have symptoms similar to those seen in post-traumatic stress disorder (PTSD).

Dissociative Symptoms

You’ll have three or more of the following dissociative symptoms if you have ASD:
·         feeling numb, detached, or being emotionally unresponsive
·         a reduced awareness of your surroundings
·         derealization, which occurs when your environment seems strange or unreal to you
·         depersonalization, which occurs when your thoughts or emotions don’t seem real or don’t seem like they belong to you
·         dissociative amnesia, which occurs when you cannot remember one or more important aspects of the traumatic event


Anxiety or Increased Arousal

The symptoms of ASD may include anxiety and increased arousal. The symptoms of anxiety and increased arousal include:
·         having trouble sleeping
·         being irritable
·         having difficulty concentrating
·         being unable to stop moving or sit still
·         being constantly tense or on guard
·         becoming startled too easily or at inappropriate times
                                                                                              ( Healthline Media )
Arousal –  கிளர்ச்சி
Atopic – ஒவ்வாமைத் தோல் அழற்சி
Traumatic – நோய் முதல் அறியா நீடித்த தோல் அழற்சி



சங்க இலக்கிய அகப்பாடல்களில் பிரிவாற்றமை என்னும் துறையில் அமைந்த பாடல்களில் காதல் பிரிவுத் துயர்  விரித்துரைக்கப்படுகின்றது. தலைவியைத் தனித்து விட்டுப் பிரிதலும் தலைவன் குறித்தபருவத்தில் ( கார் காலத் தொடக்கத்தில்) திரும்பி வருவதாகக் கூறிப் பிரிதலும் புனையப்பட்டுள்ளன.
தலைவனைப் பிரிந்த நிலையில் தலைவியின் உடலிலும் உள்ளத்தலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்கள் குறித்த  பிறழ்நிலைகளைச் சங்கப்புலவர்கள் அக இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
இப்பதிவுகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் புனைவின் உண்மைத் தன்மையை அறிதலே இவ்வாய்வின் நோக்கமாகும்.
பசலை

களவுக் காதல் கொண்ட மகளிர், தலைவன் பிரிவால், தலைவனுடன் கொண்ட உறவு, ஊருக்கும் உற்றார்க்கும், பெற்றோர்க்கும் தெரியா வண்ணம் மறைக்க நேரிடும் காலத்துத் தலைவிக்கு ஆழ்ந்த மன அழுத்தம், கவலை, அச்சம், தூக்கமின்மை,  உணவு உண்ணாமை, வெறித்துப் பார்த்தல், திகைத்து நிற்றல் ,பேச்சிலும் செயலிலும் தடுமாற்றங்கள் இத்தகைய மனப் போராட்டங்கள் உடலில் வெளிப்பட்டுத் தோலில் தேமல் போன்ற தோன்றிமறையும் திட்டுக்கள் தோன்றுகின்றன. இப்புறத்தோற்றம் தலைவியைப் பித்துப்பிடித்தவள் போன்ற நிலைக்குத் தள்ளிவிடும்.துன்புறும் மனநிலை – உள நோய் , உடல் நோயாக வெளிப்படுகிறது. 

சனி, 23 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 28

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் –  28

புறவின் குரல்
……………………. செல்வர்
வகையமை நல்லில் அகவிறை உறையும்
வண்ணப் புறவின் செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும் தாழ்குரல் கேட்டொறும்
வண்ணப்புறக் கந்தரத்தனார். நற்.71 : 6-9
செல்வர் கட்டிய பலவேறு வகைகள் அமைந்த நல்ல வீட்டின்; இறைப்
பக்கத்தில் அமைந்த கூட்டில் வாழும் வண்ணப் புறாவினது சிவந்த காலையுடைய ஆண்; தான் காதலிக்கும் பெடைப் புறாவை அழைக்கும் தாழ்ந்த ஓசையுடைய குரலைக் கேட்குந்தோறும்……… புறாவின் தாழ்குரல் என்றது – அதனைக் கேட்குங்கால் கேட்போர் உள்ளத்தில் காதலுனர்ச்சி எழுதலின் கேட்டொறும் என்றார். வண்ணப்புறவின் செங்காற் சேவல் – என்று பாடியதால் கந்தரத்தனார் ; வண்ணப்புறக் கந்தரத்தனார் எனப்பட்டார்.
  • Domestic pigeons mate for life unless separated by death or accident.
Bird sounds
3- The cooooOOOOO-woo-woo-woo call is almost always uttered by the male bird, not the female, and is—wait for it—a wooing call, an enticement to a mate or potential mate.

Read more: 
http://www.birdsandblooms.com/blog/10-surprising-facts-about-mourning-doves/#ixzz4ERpg2e1y
Bird Songs vs. Calls
Most of our familiar backyard birds, from thrushes and jays to orioles and goldfinches, are classified as songbirds. But many of the sounds they make are not considered songs at all. In fact, the sounds you hear regularly are usually considered calls.
Think about songs for a minute so you can compare. Bird songs tend to be more complex and melodious than calls. Typically, only the males sing during nesting season, because they’re trying to establish their territories and attract mates. By comparison, calls are usually short, simple sounds, and the birds use them all season. Flocks of American robins, for example, make a wide variety of clucking, chirping or lisping calls at any time of year. But when a male robin perches in a treetop at dawn in spring and says cheerup cheerily cheerio cheerup for an hour, that’s a song.
Scientists know about another fascinating difference between calls and songs. (Birds & Blooms )
Doves often cease their foraging for food just before their babies are born. This temporary starvation insures a pure formulation of milk (otherwise their offspring could not digest bits of solid food in the milk). That's another confirmation about maternal attributes as well as self-sacrifice for the sake of their progeny. Check out my page on mother-bird symbolism for more inf
                      மேற்சுட்டியுள்ள அறிவியல் ஆய்வுக் குறிப்பின்படி, ஆண் புறா தன் துணையாகிய பெண்புறாவைத் தாழ்ந்த குரலுடன் காதல் அழைப்பினை விடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                      தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும்  தலைவிக்குப் புறாவின் கொஞ்சு மொழி அவள் உள்ளத்தே காதல் உணர்ச்சியை எழுப்பியதாகப் புலவர் பாடியுள்ளார். புலவர் தன் புலமைத் திறத்தால், காதல் பறவைகள் விடுக்கும் அழைப்புக்கும் காதல் மொழிக்கும் வேறுபாடு அறிந்த திறமும் புறாக்களில் ஆண், பெண் வேறுபாடு அறிந்த திறமும் அறிவியல் கண்கொண்டு நோக்குதற்குரியன. 

வெள்ளி, 22 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 27

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 27
காவிரியில் கல்லணை – 4
தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை
                                                    ---- மணிமேகலை. பதிகம் : 24 – 25
வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவிரி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி
                                                        ----- சிலப்பதிகாரம் . கானல்வரி : 27
காவிரிப் புரப்பதற்குக் காரணம் கரிகால்வளவனின் செங்கோலே எனச் சிறப்பித்தார் இளங்கோவடிகள் –      
  “ கரிகால்வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறை பிடித்துக்கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான். ‘முடிகொண்டான்’ ஆறும் இவனால் வெட்டப்பட்டது போலும் ! காவிரிக் கல்லணை கி.பி. 1068இல் வீரராசேந்திரனால் வெட்டப்பட்டதாகத் தெரிகின்றது. “ – பாவாணர்.         
மேற்சுட்டிய சான்றுகளாலும் காவிரியில் கல்லணை இருந்ததென்றும் அதனைக் கட்டியவன் கரிகாலன் என்பதும் தெற்றென விளங்கும்.           

வியாழன், 21 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 26

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 26
காவிரியில் கல்லணை – 3
கரிகாலன் காவிரியின் குறுக்கே அணை கட்டியதற்கான சான்று யாண்டும் காணப்படவில்லை - ஆயின் மேற்சுட்டிய கருத்துக்களைக் கொண்டு பார்க்கும்பொழுது - கடுங்கோடையிலும் நீர் நிலைகள் நிரம்பியிருந்தன விளைநிலங்கள் செழித்திருந்தன -  காவிரி ஆற்றின் வளம் முழுவதையும் கரிகாலனே கொண்டிருந்தான் என்பதால் காவிரியைக் காத்துச்( அணை கட்டி) சோழ நாட்டை வளமாக்கினான் என்பது சொல்லாமலே விளங்குமன்றோ..! 
வற்கடம்
அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப்
பெருவறங் கூர்ந்த வேனிற் காலை
சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது, புறநா. 224:  12, 13.
அருவி நீர்மறுத்து , உலகத்தார் அஞ்சும்பரிசு வெம்மையுற்றுப் பெரிய வற்கடம் (பஞ்சகாலம்) மிக்க வேனிற்காலத்து…
வளவனின் ஆட்சிக்காலத்தில் வற்கடம் நிகழ்ந்த காலத்தை ஆராய்ந்தால்
காவிரியாற்றில் கல்லணை இருந்ததா இல்லையா என்பதை அறியமுடியும்.

வரலாறு[தொகு]

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2][3][4] தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை] மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.[5]
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.[சான்று தேவை] ----  தொடரும்…. 

புதன், 20 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 25

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 25
காவிரியில் கல்லணை – 2
காவிரி யாற்றின் சிறப்பு
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்             
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப்பு யன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
                        -- பட்டினப்பாலை : 1 – 7
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல் வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே ….
காண்க:  வாய்த்தலை – நீரைத் தேக்கும் தலை மதகு (உழவர் வழக்கு)
  --- சிலப்பதிகாரம் : 10 : 102  –  109
 இதன் பொருளாவது – கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனமென்னு மிவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெயரினும் காற்றுப்பொரும் குடகவரையினது உச்சிக்கண்ணே கடிய குரலையுடைய உருமேற்றோடு சூன்முதிர்ந்த பருவப்புயல் தன்பெயலாகிய வளத்தைச் சுரத்தலானே அவ்வரையிற்பிறந்த பல பண்டத்தோடு கடுகிவருதலையுடைய காவிரியினீர், முகத்தைக் குத்தியிடிக்குங் கடல் தன் வளத்தைக் கொண்டு எதிர்தலானே தேங்கி, வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கின்ற அப்புதுப்புன லொலியல்லது ஆம்பி முதலாயின ஒலித்தல் செல்லாவென்க.
“ வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓ இறந்து ஒலிக்கும் – மலைபடு. 474 – 475
 சேயாறு  - ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் .
 தலைவாய் – வாய்த்தலை – மதகு.

கோள்நிலை திரிந்து கோடை நீடினும் …
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்புஇல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்றுஎனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாக
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  236 – 248
சோழ நாட்டில் – கடுங்கோடையில் பயிர்கள் கருகவும் – அருவி நீர் இல்லாது ஒழியவும் - முகில்கள் கடல் நீரை முகத்தலை மறந்தொழியவும் – இவற்றால் பெரிய வற்கடம் (பஞ்சம்) உண்டாகும் . அத்தகைய காலத்தும் நறைக்கொடியும் நரந்தம் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவற்றை நீர்த்துறைதோறும் இட்டு – இளைப்பாறிப் பின் மேலும் நடந்து செல்லும் இயல்புடையது காவிரி – நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரம் பொருந்திய தன் வெள்ள நீர் கரை சூழ்ந்த குளங்களிலும் – பிற நீர்நிலைகளிலும் புகுந்தொறும் – நீர் விளையாடலை விரும்பும் மகளிர் விரைந்து சென்று அவற்றில் குடைந்து விளையாடுவர்- உழத்தியர் தம் உடல் வளைந்து குனிந்து நின்று அரிவாளால் முதிர்ந்து விளைந்த நெற்றாளை அரிந்து – தாள் அரிந்து திரட்டிய சூட்டினைச் சுமையாகக் கட்டிக்கொண்டுபோய் மலையாகப் போராக்கி – நாள்தொறும் கடா விட்டு (பிணையலடித்து) மலையெனக் குவிப்பர் – அள்ள அள்ளத் தொலையாத அந்நெற்பொலி நன்கு தைத்த மூடைகளிலே குதிர் முதலியவற்றில் இடமின்மையால் யாண்டும் கிடக்கின்ற செந்நெல் விளைகின்ற வரம்பு கட்டப்பட்ட  - ஒரு வேலி நிலம் ஆயிரங்கல நெல் விளையும்படி காவிரியாற்றால் வளமாக்கப்படுகின்ற நாடு முழுவதும் தனக்கே உரிமையுடையதாய தன்மையன் கரிகாலன்.
 ( எல்லை – பகல் ; பல்கதிர் பரப்பி – கோடைக் காலம் ; குல்லை -கஞ்சங்குல்லை – கஞ்சா செடி : புரத்தல் – உயிர்களை ஓம்புதல் ;  நறை – நரந்தம் – மணமுடைய கொடி – புல் .) தொடரும் ……. 

செவ்வாய், 19 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 24

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 24
 காவிரியில் கல்லணை - 1
Kallanai Dam / Grand Anicut, India
Kallanai Dam, also known as Grand Anicut, is the fourth oldest dam in the world. It still serves the people of Tamilnadu, India. The dam was constructed by King Karikala Chola of the Chola Dynasty in the 2nd century AD. The dam is located on the River Kaveri, approximately 20km from the city of Tiruchirapalli.
The dam provides water for irrigating 400,000ha of land along the Delta Region. The structure measures 329m in length, 20m in width and 5.4m in height. Improvements were made to the dam in the 19th century by Arthur Cottons, a British general and irrigation engineer.(Water-technology.com)
உலகில் பழமைவாய்ந்த அணைக்கட்டுக்களில் நான்காவது இடத்தில் இருக்கும் கல்லணை, கி.பி. இரண்டாம் நூற்றாணடில் கரிகால் சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, இக்கூற்றுக்கு வலிமையான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
சங்க இலக்கியச் சான்றுகளைக்கொண்டு கரிகால் சோழனின் கல்லணை குறித்த செய்திகளைச் சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம்.
… …. ….    ……. வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற் பிற ரகன்றலை நாடே
சோழன் கரிகால் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது, புறநா. 7 : 10 -13
வளவ! குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை மண் மறுத்தலான் மீனாலடைக்கும் புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடைய மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள்…
குளிர்ந்த நீர் பரந்த,  என்றது – காவிரியாற்றை
உடைப்புகளை மண் மறுத்தல் , என்றது – காவிரியின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை மண் அணைத்துக் கட்டியதும் ஆகும். அதுவும் பயனின்றிப் போனதையும் அறியமுடிகிறது.  மீனால் அடைக்கும்  அளவிறகு நீர் வளம் உடையதென்றார்.    ( மீனா – வயிரமுள்ள மரவகை,நீரோட்டத்தை மறித்து  வாய்க்கால்களில் சிற்றாறுகளில் கவணை ( மாட்டுத் தொழுவத்திலும் கவணை கட்டுவர் ) கட்டுதல் உண்டு ,   உறுதியான மரத் துண்டுகளை கூர்முனை கொண்டதாக்கி வாய்க்காலில் அடித்துஇறக்கி குறுக்கே வைக்கோல் கட்டுகளைப் போட்டு அடைப்பர், இவ்வாறே காவிரியின் கரை உடைப்புகளை கரிகாலன் அடைத்திருப்பான் . அவையும்   பயனின்றிப் போயின. இதனால் உறுதியான அணை கட்டுவதற்கான முயற்சிகளைக் கரிகாலன் மேற்கொண்டிருக்க  வேண்டும் என்றும் பொருள் கொள்ள, இப்பாடல் இடம்தருகிறது.)
கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய  ”பட்டினப்பாலை”  யின் பாட்டுடைத் தலைவனாகிய கரிகால் வளவனின் ஆற்றல்களை..
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான்வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனத்
தான் முன்னிய துறை போகலின் – (271 – 273)
திருமாவளவன், தெய்வத் தன்மை உடையவனாதலின் மலைகளையெல்லாம் அகழ்தலைச் செய்வான் என்றும் கடல்களை எல்லாம் தூர்த்தலைச் செய்வான் என்றும் தேவர் உலகத்தை மண்ணில் விழச் செய்வான் என்றும் காற்றை விலக்குவான் என்றும் உலகத்தார் பாராட்டும்படி, தான் கருதிய துறைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். இவ்வுரை, ஏதோ திருமாவளவனின் ஆற்றல்களைப் புனைந்துரைத்த புகழுரைகள் போலத் தோற்றம் பெற்றுள்ளது. உண்மை இவ்வாறாயின் நன்றாம்……
மலை அகழ்க்குவன் – மலையை உடைத்துக் கல் எடுத்தல்
கடல் தூர்க்குவன் – கடல் போலும் நீர்பரந்த காவிரியாற்றில் அணை எழுப்புதற்குத்  தூர்த்தது.
வான் வீழ்க்குவன் – வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி
வளி மாற்றுவன் – நளியிரு முந்நீர் நாவா யோட்டி , வளிதொழி லாண்ட வுரவோன் மருக.. ( நீர் செறிந்த பெரிய கடலின் கண்ணே மரக்கலத்தை யோட்டிப் போர் செய்தற்குக் காற்றின் நாவாய் ஓடாதாக ஆண்டு வளிச் செல்வனை அழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபினுள்ளானே ) மேலும் பல் பண்டம் பகர்ந்து வீசும் பன்னாட்டுப் புகார் துறைமுகத்தை உடையவன்.
 கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியது,(புறநா. 66: 1, 2) தொடரும்………..

திங்கள், 18 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 23

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 23
குடவோலை - தேர்தல்

Kutavolai

Elections were used as early in history asancient Greece and ancient Rome, and throughout the Medieval period to select rulers such as the Holy Roman Emperor andthe Pope.[1]
In Vedic period of India, the raja (chiefs) of agana (a tribal organization) was apparently elected by the gana. The raja belonged to the noble Kshatriya varna (warrior class), and was typically a son of the previousraja. However, the gana members had the final say in his elections.[4] The Pala kingGopala (ruled c. 750s–770s CE) in early medieval Bengal was elected by a group of feudal chieftains. Such elections were quite common in contemporary societies of the region.[5][6] In Chola Empire, around 920 CE, in Uthiramerur (in present-dayTamil Nadu), palm leaves were used for selecting the village committee members. The leaves, with candidate names written on them, were put inside a mud pot. To select the committee members, a young boy was asked to take out as many leaves as the number of positions available. This was known as the Kudavolai system.[7][8]

 

வரலாறு[தொகு]

தேர்தல்கள் சரித்திரத்தில் மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே அமலுக்கு வந்து விட்டிருந்தன. மத்தியக் கால கட்டத்தில் புனித ரோமானியப் பேரரசர்மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது.[2] அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன "தேர்தல்" முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.[2]
குடவோலை
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்
                                          மருதனிளநாகனார், அகநா. 77: 7,8
கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவையிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல.( ஊராண்மைக் கழகங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின் கட் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குடத்தின்மேலிட்ட இலச்சினையைக்கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென்ன முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்.பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.-நாட்டார்)
                       உத்திரமேரூரில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்தமிழகத்தில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததற்கான சான்று அகநானூற்றில் கிடைத்துள்ளது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதுவே மிகவும் தொன்மைவாய்ந்த தேர்தல் ஆகும்.