வியாழன், 21 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 26

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 26
காவிரியில் கல்லணை – 3
கரிகாலன் காவிரியின் குறுக்கே அணை கட்டியதற்கான சான்று யாண்டும் காணப்படவில்லை - ஆயின் மேற்சுட்டிய கருத்துக்களைக் கொண்டு பார்க்கும்பொழுது - கடுங்கோடையிலும் நீர் நிலைகள் நிரம்பியிருந்தன விளைநிலங்கள் செழித்திருந்தன -  காவிரி ஆற்றின் வளம் முழுவதையும் கரிகாலனே கொண்டிருந்தான் என்பதால் காவிரியைக் காத்துச்( அணை கட்டி) சோழ நாட்டை வளமாக்கினான் என்பது சொல்லாமலே விளங்குமன்றோ..! 
வற்கடம்
அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப்
பெருவறங் கூர்ந்த வேனிற் காலை
சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது, புறநா. 224:  12, 13.
அருவி நீர்மறுத்து , உலகத்தார் அஞ்சும்பரிசு வெம்மையுற்றுப் பெரிய வற்கடம் (பஞ்சகாலம்) மிக்க வேனிற்காலத்து…
வளவனின் ஆட்சிக்காலத்தில் வற்கடம் நிகழ்ந்த காலத்தை ஆராய்ந்தால்
காவிரியாற்றில் கல்லணை இருந்ததா இல்லையா என்பதை அறியமுடியும்.

வரலாறு[தொகு]

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2][3][4] தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை] மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.[5]
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.[சான்று தேவை] ----  தொடரும்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக