புதன், 13 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 18

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 18

MUSIC THAT  HEALS – 10-02-14,Times of India.

“……..On the scope of music therapy in the country.” An interview with Prof. Michael Thorne,  By Anisha Sahijwala………………….”
It was very interesting to me, when I read your article. I would like to suggest some more information’s to support   your article. Music Therapy is not a new one to Indians especially for Tamils. In ancient Tamil literature gives us a reference about Music Therapy.
PuRanaanuRu,  281, Arisilkizaar, in his poem,  clearly narrates, the heroes who have got severe injuries in the battlefield, they have  treated in their homes. 1.  House cleaned. 2. Herbals inserted  in veranda . 3 with musical instruments  singing  Kaanci PaN …… Music that heals …sure.. Music must  touch one’s MIND; It is possible only through their mother tongue.
மருத்துவம்
 போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு . (உரை வேந்தர்-)
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
                 ………… அரிசில்கிழார்.புறநா.281: 1 – 6
இனிய கனிகளைத்தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி ; யாழுடன் பல இசைக கருவிகள் ஒலிக்க; கையில் மையாகிய மெருகினை இட்டு; வெண் சிறு கடுகினைத் தூவி ; ஆம்பல் குழலை ஊதி ; மணியோசையை எழுப்பி ; காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து... இரவமொடு வேம்பு மனைச் செருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன.

 ( தீங்கனி இரவம் – இரவம் தழை ; இரவ மரம்பற்றி அறிந்தவர்- கூறுக.)
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்புஎன
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
      பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 302 – 304
தம் கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் பட்ட நெடிய, பிளந்து காணப்படும் புண்ணை ஆற்றுவதற்குக் காவலெனக் கருதி, அறல் போன்ற, கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாட்டால் எழும் ஓசையும்… (கொடுவரி – புலி ; வசி – பிளவு.)


 வேப்பந் தழை செருகுதல்
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லாமனையும் கல்லென்றவ்வே
                                          வெள்ளைமாளர், புறநா.296 : 1 - 3
போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு .ஒளவைசு.து. -உரை
புண்பட்டோரைப் பேய்கள் அணுகாதிருத்தற் பொருட்டு வேப்பந்தழையை வீட்டின் முன் இறப்பிற் செருகுதலும் காஞ்சிப் பண்ணைப் பாடுதலும் ஐயவியைப் புகைத்தலும் மரபு. (உ.வே.சா, உரை)     
                        இன்றுங்கூட நாட்டுப்புற வழக்கில் அம்மை நோய் கண்டாரைத் தனித்திருக்கச் செய்வதும் வீட்டில் வேப்பிலைச் செருகுதலும் வீட்டில் தூய்மையைப் பாதுகாத்தலும்  அவர் அருகில் இருந்து மாரியம்மன் தாலாட்டுப் பாடல் பாடுவதும் தமிழர்தம் வழக்கமாகும்.    
அறுவை மருத்துவம்
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கி
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடுவசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர்
பரணர். பதிற். 42 : 2 - 5

மீனை ஆராயும் சுழற்சியால் குளிர்ந்த குளத்தில் மூழ்கி  - மீன் கொத்திப் பறவை மேலே எழுந்தாற் போல – அம்பு தைத்த உடம்பினை உடையோர்…நெடிய வெள்ளிய ஊசியின் நீண்ட கூர்மை தைத்ததனால் பரவிய தழும்பு ஆழ்ந்த மார்பினையும் ( நெடுவசி – ஊசித் தழும்பு )

அறுவை மருத்துவம் – அறிவியல் நோக்கு

Origins[edit]

The first surgical techniques were developed to treat injuries and traumas. A combination of archaeological and anthropological studies offer insight into man's early techniques for suturing lacerations, amputating unsalvageable limbs, and draining and cauterizing open wounds. Many examples exist: some Asian tribes used a mix of saltpeter and sulfur that was placed onto wounds and lit on fire to cauterize wounds; the Dakota people used the quill of a feather attached to an animal bladder to suck out purulent material; the discovery of needles from the stone age seem to suggest they were used in the suturing of cuts (the Maasai used needles of acacia for the same purpose); and tribes in India and South America developed an ingenious method of sealing minor injuries by applying termites or scarabs who ate around the edges of the wound and then twisted the insects' neck, leaving their heads rigidly attached like staples.[1]

India[edit]

Archaeologists made the discovery that the people of Indus Valley Civilization, even from the early Harappan periods (c.3300 BCE), had knowledge of medicine and dentistry. The physical anthropologist that carried out the examinations, Professor Andrea Cucina from the University of Missouri-Columbia, made the discovery when he was cleaning the teeth from one of the men. Later research in the same area found evidence of teeth having been drilled, dating back 9,000 years to 7000 BCE.[20]
Sushruta (c. 600 BCE)[21] is dubbed as the "founding father of surgery". His period is usually placed between the period of 1200 BC - 600 BC.[22] One of the earliest known mention of the name is from the Bower Manuscript where Sushruta is listed as one of the ten sages residing in the Himalayas.[23][23] Texts also suggest that he learned surgery at Kasi from LordDhanvantari, the god of medicine in Hindu mythology.[24] He was an early innovator of plastic surgery who taught and practiced surgery on the banks of the Ganges in the area that corresponds to the present day city of Varanasi in Northern India. Much of what is known about Sushruta is in Sanskrit contained in a series of volumes he authored, which are collectively known as the Sushruta Samhita. It is one of the oldest known surgical texts and it describes in detail the examination, diagnosis, treatment, and prognosis of numerous ailments, as well as procedures on performing various forms of cosmetic surgery, plastic surgery and rhinoplasty.[25]
                              சிந்துவெளி அகழ்வாராய்ச்சில் கிடைத்துள்ள சான்றுகளின்படி, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை மருத்துவத்திலும் பல் மருத்துவத்திலும் சிறந்துவிளங்கியமை அறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பல் மருத்துவத்தில் பல்துளையிடல் முறையினை தொல்லியல்அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்நிகழ்வின் காலப்பகுதி கி.மு. 9000 – 7000  என்றும் கணக்கிட்டுள்ளனர்.
                   இந்தியாவில் அறுவை மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சுஸ்ருதர் (கி.மு. 600) இமாலயத்தில் வாழ்ந்தவர். இவர் காசியில் மருத்துவர் தன்வந்திரியிடம் அறுவை மருத்தும் பயின்றவர். ’ சுஸ்ருத சம்கிதா” நூல் இவருடைய மருத்து தொகுப்பாகும்.  தற்கால அறுவை மருத்துவ முன்னோடியாக இவர் போற்றப்படுகிறார்.
                  தமிழுலகில் பதிணென் சித்தர்கள் மருத்துவத்திற்கு ஆற்றிய அரும்பெருந்தொண்டுகளை புதிய கண்டுபிடிப்புகளை இன்றும் உலகம் வியந்து போற்றுதலை நாம் அறிவோம்..
                 இன்றைய மருத்துவ அறிவியலோடு சித்தர் மருத்தும் வளர்ந்து வருதலே இம்மருத்துவமுறைக்குக் கிடைத்த அறிவியல் ஒப்புதலாகும். சித்தர்கள் உடலியல் உளவியல் நோயியல் என்றவாறு அறிவியல் நோக்கில் ஆராய்ந்து மருத்துவம் செய்தனர் ‘நோய்நாடி நோய் முதல்நாடி…’  ’ வளி முதலா எண்ணிய மூன்றும்’ – ( மருந்து.- 95) ஆராய்தறிந்த உண்மையை வள்ளுவத்தில் காணலாம்.
                மேற்சுட்டிய சங்கஇலக்கியப் பதிவில் அறுவை மருத்துவத்தில் வெள்ளிய ஊசி பயன்படுத்தியிருக்கிறார்கள். தொல்தமிழ்ப் பழங்குடியினர் கருவேல மர முள்ளைப் பயன்படுத்தி அறுவை மருத்துவம் செய்துள்ளனர் . முள்ளை முள்ளால் எடுத்தல் என்னும் பழமொழியை நோக்குக. 14 / 7/ 16


1 கருத்து:

  1. சங்கஇலக்கியத்தோடு தற்போதைய நிகழ்வினையும் பகிர்ந்து நம்மவர்களின் பெருமையை உணரவைத்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு