சனி, 16 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 21

Changing Forget-me-not 600.jpg



பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 21
நிறம் மாறும் பூக்கள்
– செடிகள் மற்றும் மரங்களில் இலைகள் தளிராக இருப்பதிலிருந்து பழுத்து இலையுதிரும் வரை பல்வேறு நிறங்களைப் பெற்றுள்ளன. இந்த நிறமாற்றத்தைப் பூக்களிலும் நாம் காணலாம்.புரூன்பெஸ்சியா தாவரங்களில் இது போன்ற நிறம் மாறும் பூக்களைக் காணலாம். இதில்  பல்வேறு வகைகள் உள்ளன,  காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் நிறத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பைப் பெற்றுள்ளன. ……………..
பிசாசு செடி
இந்தச் செடியின் தண்டுப்பகுதி மெழுகு போன்று இருக்கும், தண்டுப் பகுதியைச் செடியிலிருந்து பிடுங்கிய பிறகு வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாறிவிடும் ஆதலால் இதனைப் ‘பிசாசு செடி’ என்றும் அழைக்கின்றனர். பச்சோந்தி இடத்திற்குத் தகுந்தபடி தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்வது போல இந்தச்செடியின் தண்டும் செடியில் இருக்கும்போது ஒரு நிறமாகவும் செடியைவிட்டுப் பிரிந்த பிறகு மற்றொரு நிறமாகவும் மாறிவிடும் இயல்பைப் பெற்றுள்ளது. ( காயத்ரி, பூண்டிக் கல்லூரி மாணவி)
நிறம் மாறும் பூ
 வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
 நறை நிறம் படுத்த நல் இணர்த்  தெறுழ் வீ
   மதுரை மருதனிள நாகனார். நற். 302 : 4 -5
 பெரிதாகப் பெய்கின்ற மழையை நோக்கிப் பூத்திருக்கின்ற எறுழ மலர்கள் நீலமணி போன்ற நிறம் கொண்டவை. அடர்ந்த புதர்களில் உள்ள நல்ல பூங்கொத்துக்களை உடைய இவை மழைக்காலம் நீங்கியதால் தம் இயல்பான நீல நிறத்தினின்று மாறி வெண்மை நிறமாக மாறியிருக்கின்றன. (தெறுழ்வீ – ஒரு காட்டுக் கொடிவகை . )      ( எறுழ மலர்- செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை….?)

The Boraginaceae, the borage or forget-me-not family, includes a variety of shrubs,trees, and herbs, totaling about 2,000 species in 146 genera found worldwide. [3]

Most members of this family have hairy leaves. The coarse character of the hairs is due to cystoliths of silicon dioxide and calcium carbonate. These hairs can induce an adverse skin reaction, including itching and rash in some individuals, particularly among people who handle the plants regularly, such as gardeners. In some species,anthocyanins cause the flowers to change color from red to blue with age. This is may be a signal to pollinators that a flower is old and depleted of pollen andnectar.[5]
Changing forget-me-not (Myosotis discolor)
Kingdom:
Clade:
Clade:
Clade:
Order:
Family:
Boraginaceae
Juss.[1]

சங்கச் சான்றோர் மதுரை மருதனிளநாகனார், இது, கொடிப் பூ என்று குறித்துள்ளார். இப்பூவின் பூக்கும் பருவம் அறிந்து , நிறம் மாறும் தன்மையையும் கண்டறிந்துள்ளார். இக்கொடியின் அருமை அறிந்து அதனை உற்றுநோக்கி ஓர் அறிவியல் உண்மையைக் கண்டறிந்துள்ளார். தேன் சுரத்தல் நின்று போனதை வண்டுகளுக்கு அறிவிக்க இவ்வகைப் பூக்கள் நிறம் மாறுகின்றன போலும். இஃது தெறுழ் மலர் ஆகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக