பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல்
- 10
மேனியில் மத நாற்றம்
உறுபகை பேணா திரவின் வந்திவள்
பொறிகிளர் ஆகம் புல்லலின் வெறிகொள
பெருவழுதியார். நற். 55 : 3-4
இரவுப் போதில் குறியிடம்
போந்து ‘ தேமல் பரந்த இவளது மார்பை முயங்குதலால் ; இவள் மேனி மத நாற்றம் கமழ்தலின்…..
(இரவிடைவந்து இவளது திருவிளங்கிய மார்பை முயங்கி மகிழ,
அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே; )
இம்மணம் இவட்குப் புதிது புணர்ந்ததொன்று
என்றும் பண்டெல்லாம் இவ்வாறு நாறுதல் இல்லையென்றும் எண்ணி – அன்னை வினா
எழுப்பினாள்.. மத நாற்றம் என்றது புணர்ச்சியால் உண்டானது. மதநீர் (Musth) என்பது ஆண்
யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும்
நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும்,
இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில்
யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.
(விக்கிபீடியா)
“ This dating site uses body odour to find a match”
DO YOU SMELL LOVE
?
A pair of NewYork artists have created a unique dating
service that relies on body odour to find potential couples. Smell Dating which
calls itself ‘ the first mail odour dating service’ has been created by Tega
Brain and Sam Lavigne of Useless Press an experimental digital art group.
“ Explaining their decision to build a dating service on
unwashed T – Shirts Smell Dating say on their website ‘ Unlike sight and sound
. smell is interpreted first in terms of memory and emotion before being mapped
to language ‘ The site says “ The internet has replaced fleshy experience with
flat apparitions. Avatars……..” TOI_25/2/16
Jun 30, 2011
To: Whomever
The vaginal odor after sex will not go away with a
shower. I found it would only leave by having LONG baths soaking in
the tub. Feel like a pune after, but the smell is gone until my husband gets
frisky again. ( medhelp)
Possible
Causes for Vaginal Odor After Intercourse
1. Bacterial Vaginitis (BV)
Infections like BV
cause an overgrowth of bad bacteria. This results in a grey-colored runny
discharge with an unpleasant odor. If you have BV, the vaginal odor after
intercourse smells even more pungent with the presence of semen. Vaginal
infections are easily treated with antibiotics.
மேற்சுட்டியுள்ள சான்றுகளின்படி உடலுறவுக்குப்பின் பெண்ணின் உடலில்
ஒருவிதமான மணம்… மதநீர் போன்ற.. நாற்றம் வீசும் , மேனியில்
என்றதனால் உடலில் தோன்றிய வியர்வைவழி மணம் கமழ்ந்ததாகக் கொள்க. கலவியால் உண்டான மணம்
மருத்துவ அறிவியல்வழி உண்மையாகிறது.
வெளிவரும் வியர்வையும்
மணம்கமழ்ந்து உடல் நிலையை உணர்த்தும்.
மணமுடித்த ஒருசில நாட்களிலேயே மனைவியை விட்டுப்பிரிந்து சென்று வெளிநாட்டில் வேலை
பார்த்த ஒருவன், மூன்று - நான்கு ஆண்டுகள்
கழித்து ஊருக்குவந்து, தன்மனைவியையும்
குழந்தையையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து… குழந்தை, எனக்குப் பிறந்ததில்லை என்று ஊரறிய
கூச்சலிட்டான், ஊர் கூடியது, உண்மையைக் கண்டறிய ஒரு சோதனை --- தந்தையும் மகனையும் வியர்த்துக்
கொட்டும்வரை ஓடுமாறு ஆணையிட்டார் அவைத்தலைவர்…
. ஓடிக் களைத்துப்போன இருவரையும்
அவைத்தலைவர் அழைத்து அவர்கள் இருவரின் வியர்வையையும் நுகர்ந்து பார்த்து – இந்தப் பையன்
உனக்குப்பிறந்தவன்தான் என்று தீர்ப்பளித்தார் . இது பண்டைய (டி .என் .ஏ) சோதனை முறை
போலும்.
………….. தொடரும் ….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக