ஞாயிறு, 3 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 8

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 8
ஐந்தறிவும் ஆறறிவும்
தொல்காப்பியர் - அரிசுடாட்டில்
அறிவியல் அறிஞர்கள் உயிர்களை வகைதொகைப் படுத்துவதில் பன்னெடுங்காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மிகத் தொன்மைக்காலத்தே கிரேக்க அறிஞர்களும் தமிழ்ச் சான்றோர்களும் இவ்வாய்விற்குப் பெரும் பங்களித்துள்ளனர் என்பது ஈண்டு அறிந்து இன்புறுதற்குரியதாகும். அறிவியல் புலமை என்பது தமிழ்ச் சான்றோர்களுக்குப் புதியதன்று, இயற்கையோடியைந்த வாழ்வில்  அவர்தம் கண்ணில் பட்டவையெல்லாம் இயற்கையின் அற்புத ஆற்றலை உணர்த்தியதேயன்றிக் கண்ணுக்குப் புலப்படாத கடவுள் படைப்பாக அவர்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்பதை அவர்தம் படைப்புகளின் வழி அறிய முடிகிறது.
Perception –  (அறியும் ஆற்றல்)
The famous philosopher Aristotle was the first to assign humans with five traditional senses: sight, hearing, touch, taste and smell. However, if he was categorizing animals, his list of senses might have been longer. Several animals possess additional perceptive abilities that allow them to experience the world in ways we can barely imagine. Here's our list of 11 animals that have a sixth sense.
.

 ‘அறிவியலின் தந்தை ‘ அரிசுடாட்டில்( கி.மு.384  322) ஐம்புல அறிதிறன் குறித்துக் கூறும்போது,  கண், காது,  மெய்,(தொடு உணர்வு)  நாக்கு (சுவை) மூக்கு ( நுகர்வு)  என்று வரையறுத்துள்ளார் .
திருவள்ளுவர்
சுவைஒளிஊறு ஓசை நாற்றம் என்றஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு . (27)
என்று நாக்கு,(சுவை), கண் (ஒளி) மெய் (தொடு உணர்வு),  காது (ஓசை)  மூக்கு ( நாற்றம்) என்றும்
பொறிவாயில் ஐந்தவித்தான்….(6) எனப் பொறிவாயில்களாக, மெய். வாய், கண், மூக்கு, செவி என்றவாறு வகைப்படுத்துவார்.
ஐந்தவித்தான் ஆற்றல்…..(25) என்று ஐம்பொறிகளால் நுகரப்படும் உணர்ச்சிகளை ஐம்புலன்களையும் அடக்கியாளுதல் குறித்துப்பேசுகின்றார்.
இவ்விரு பேரறிஞர்களும் மனித உயிரின் இயங்கு பொறிகள் குறித்து ஆராய்ந்து அறிந்த திறம் அறிவியல் அடிப்படையில் அமைந்ததே என்பதை அறிதல் வேண்டும்.
இவ்வைந்து புலன்களோடு ஆறாவதாக மனம் இடம் பெறுகிறது.
‘ஆறறி வதுவே அவற்றொடு மனனே –( 3:9: 26) என்பார் தொல்காப்பியர்.
புலன்களை வெறும் பொறிகளாகக் கொள்ளாது அவற்றை அறிவு எனக் கொண்டு ஆறாவது அறிவாக மனம், உயிரிகள் அனைத்தினும்  மேம்பட்ட ஆற்றல் வாய்ந்ததாக மனித உயிர் விளங்க அடிப்படையானது என்ற அறிவியல்  உண்மையைப் பதிவு செய்கிறார் தொல்காப்பியர்.
அடுத்து, அரிசுடாட்டில், தொல்காப்பியர் கூறியுள்ளதைப்போல விலங்கினத்தில் ஆறறிவு உடையவையாக பதினொரு விலங்குகளைக் குறிப்பிடுகின்றார், அவற்றுள் நீர் வாழ்வனவும் நிலவாழ்வனவும் அடங்கும். ஆறறிவுடையனவாக புறா, வெளவால், கடல் ஆமை ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
தொல்காப்பியர், மக்களை ஆறறிவுயிர் என்றி சுட்டி, பிறவும் உளவே… என்று கூற, இளம்பூரணர்  யானை, குரங்கு, கிளி முதலியன என்று  அறிவியலுக்குப் பொருந்துமாறு தொல்காப்பியர் உள்ளக்கிடக்கையை விரித்துரைப்பார். மேற்சுட்டிய மூன்றும் அரிசுடாட்டில் பட்டியலில் இல்லை என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

Ancient human ancestor had a sixth sense

New research shows that humans and many land animals may have descended from a creature that had an enhanced electroreceptive sense.

Humans are traditionally understood to possess only five senses, but now new research into our evolutionary past suggests that there may have been a time when our distant ancestors had an enhanced 'sixth sense' which we have since lost,according to a Cornell University press release.

No, this doesn't mean that our ancestors could see dead people. But it does mean that they could likely detect weak electrical fields much in the same way that sharks, paddlefishes and certain other aquatic vertebrates still do today……
ஆயினும் மேலைநாட்டு அறிவியல் அறிஞர்கள் ( மின்அதிர்வு அலைகள் ) ”வருமுன் அறியும் அறிவு “ என்பதை ஆறாவது அறிவு எனக்கொள்கின்றனர். இதனடிப்படையில் நிகழ்த்திய ஆய்வில்  இயற்கைப் பேரிடர்களை ஆறாவது அறிவாகிய, வருமுன் உணரும் அறிவாற்றலை  நீர்வாழ் விலங்குகள் பெற்றிருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்  மனிதன் உள்ளிட்ட நில வாழ் உயிரினங்கள் அவ்வறிவாற்றலை இழந்துவிட்டன என்றும் கூறுகின்றனர். நீரிலும் நிலத்திலும் வாழும் தகவமைப்பைக் கொண்ட உயிரினங்களை ஆராய்ச்சி செய்து ஆறாவது அறிவை மெய்ப்பிக்கின்றனர்..
தொல்காப்பியர் கருதியவாறு நிலவாழ் உயிரிங்களுள் யானை, கிளி, குரங்கு முதலாயினவும் இயற்கைப் பேரிடர்களை முன் உணர்ந்து இடம் பெயர்ந்து சென்று விடுகின்றன என்பதை நில நடுக்கம், கடற்கோள் நிகழ்ந்தகாலங்களில் நாம் கண்டுணர்ந்தோம்.

ஐம்புலன்களால் நுகரும் – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்துடன் ஆறாவது அறிவாகிய மனம் இயற்கையில் எழும் மின் அதிர்வு அலைகளை உணரும் அறிவை மனிதைனம் இழந்து விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அரிசுடாட்டில், பல நீர்வாழ் உயிரினங்களை ஆறறிவுப் பட்டியலில் குறித்துள்ளார்.. 4/7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக