ஞாயிறு, 23 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-7

 

தாய்மொழி வழிக் கல்வி-7

ஆங்கிலக் கல்வியால் பெருகும் அறியாமையை நினைந்து ......

மகாகவி பாரதியார் (1882 – 1921)

“சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லட்சக்கணக்கான கோடிக் கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி இருக்கிறார்களா..?

இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய் தேறினவர்களிடம் மனசாட்சிப் படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்கிதை மிகமிகக் குறைவாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால்  சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை அனுசரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை.

கல்வி போதிப்பதற்கு ஒருவனது தாய் பாஷை மட்டுமே இயற்கையானதும் மனிதப் பண்பிற்கு ஏற்றதுமான போதனா பாஷையாகும் என்பதே நமது முக்கிய வாதமாகும்……….. தமிழ் தேசத்தைப் பொறுத்த மட்டில் அன்னிய பாஷையைப் பாட போதனைக்கு ப் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கக்  கூடியதாகும்.ஏனெனில் சரியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சொல்வதற்குத் தமிழ் பாஷை இங்கிலீஷ் பாஷையை விடப் பலமடங்கு உயர்ந்ததாகும்…..”  . (இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

ஆங்கிலக் கல்வியால் பெருகும் அறியாமையை நினைந்து ......

மகாகவி பாரதியார் (1882 – 1921)

“சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லட்சக்கணக்கான கோடிக் கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி இருக்கிறார்களா..?

இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களுக்குப் போய் தேறினவர்களிடம் மனசாட்சிப் படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்கிதை மிகமிகக் குறைவாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால்  சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை அனுசரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை.

கல்வி போதிப்பதற்கு ஒருவனது தாய் பாஷை மட்டுமே இயற்கையானதும் மனிதப் பண்பிற்கு ஏற்றதுமான போதனா பாஷையாகும் என்பதே நமது முக்கிய வாதமாகும்……….. தமிழ் தேசத்தைப் பொறுத்த மட்டில் அன்னிய பாஷையைப் பாட போதனைக்கு ப் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கக்  கூடியதாகும்.ஏனெனில் சரியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் சொல்வதற்குத் தமிழ் பாஷை இங்கிலீஷ் பாஷையை விடப் பலமடங்கு உயர்ந்ததாகும்…..”  . (இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

சனி, 22 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-6

 

தாய்மொழி வழிக் கல்வி-6

ஆங்கிலக் கல்விமுறை நாட்டிற்குப் பெருந்தீங்கானது ……

சுவாமி விவேகானந்தர் (1863 – 1902)

 கல்வி மனிதனுக்குள்ளே அடங்கிக்கிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது விவேகானந்தரின் கருத்து. “ மூளையில் பல விஷயங்களைத் திணித்தல் கல்வியாகாது. கற்கும் கருத்துகள் உள்ளத்தோடொன்றி அதன் மயமாகிப் புத்துயிரூட்டி மனிதத் தன்மையை மலரச் செய்து ஒழுக்கத்தைத் திருத்தி அமைப்பனவாய் இருத்தல் வேண்டும். அதாவது கசடறக் கற்றலும் கற்றபின் அதற்குத்தக நிற்றலும் வேண்டும். இதுவே போதனா முறையின் இலட்சியமாதல் வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் கல்விச்சாலைகளும் இந்த இலட்சியத்திற்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும். ஊரெங்கும் நாடெங்கும் ஆண்களும் பெண்களும் கல்வியறிவு பெற்று உலக வாழ்க்கையை வளம்பெற நடத்தும் ஆற்றல்பெற வேண்டும். குருகுல முறையிலே தாய்மொழி வாயிலாக உலகியற் கல்வியையும் ஞான வாழ்விற்குரிய கல்வியையும் ஒருங்கே போதித்தல் வேண்டும்.” என்கிறார் சுவாமி விவேகானந்தர். (இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

வெள்ளி, 21 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-5 அயர்லாந்து

 

தாய்மொழி வழிக் கல்வி-5

அயர்லாந்து

“ 1918 இல் அயர்லாந்திலிருந்து ஆங்கிலேயர் விரட்டப்பட்டதுமே

”ஆங்கில மொழியின்  ஆதிக்கம்  முடிவுக்கு வந்துவிட்டது  இப்போது  அயர்லாந்து மக்களின் வாழ்வில் எங்கும் எதிலும் ஐரிசு  மொழியே தலமை பெற்றுவிட்டது.”-ம.பொ.சி.

முதல் மற்றும் இரண்டாவது உலகப் பெரும் போருக்குப்பின் பல நாடுகளில் ஆங்கிலேயர் வெளியேற்றப்பட்டனர்; ஆங்கிலமும் வெளியேற்றப்பட்டது. விடுதலை அடைந்த நாடுகள் பலவும் இச்சாதனையைச் செய்து முடித்துள்ளன.

இந்தியா இன்னும் ஆங்கில ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபடவில்லை.

தேசியக்கல்விக் கொள்ளகையில் தெளிவும் தீர்வும் கிடையாது.1835 இல் மெக்காலே வகுத்தளித்த ஆங்கிலக் கல்வித் திட்டம்தான்இன்றும் நடைமுறையில் இருந்துவருகிறது. இக்கல்வித் திட்டத்தின் வழி இன்றும் ‘கருப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள்”  உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆங்கிலக் கல்விமுறை நாட்டிற்குப் பெருந்தீங்கானது என்பதை……..

(இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

வியாழன், 20 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-4 இலங்கை

 

தாய்மொழி வழிக் கல்வி-4

இலங்கை

…….” 1943 ஆண்டு வெளியிட்ட விசேடக் கல்விக்குழுவினரின் அறிக்கை, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தாய்மொழியே இயற்கையான சிறந்த போதனா மொழி என்பதையும் ஏற்றுக்கொண்டது.  மேலும் இக்குழு ‘தேசிய நோக்கில் ஆங்கிலம் போதனா மொழியாக அமைவது ஒரு தவறான தெரிவு என்றும் தாய்மொழிக்கு நாம் அளிக்கும் பெரும் முக்கியத்துவத்தை ஒரு சிறுபான்மையினருக்காகக் கைவிட ஆயத்தமாயில்லை. என்றும் கூறியது.

1947 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததும் புதிய யுகமொன்று ஆரம்பமாயிற்று ஒரு சுதரந்திரமடைந்த சனநாயக நாடு அந்நிய மொழியைப் பயன்படுத்துவது மக்கள் பெற்றுக்கொண்ட புதிய அந்தஸ்துக்கு முரண்பட்டதாக இருந்தது. தேசிய நிறுவனங்களுக்கும் தேசிய மொழிகளுக்கும் புத்துயிர் அளிக்கவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுப்பெற்றது. பிள்ளைகள் கல்விபெறச் சிறந்த போதனா மொழி தாய்மொழியே என்ற கல்வித் தத்துவ உளவியல் ஆதாரங்களுடன் கூடிய உண்மை 1945 ஆம் ஆண்டிலேயே உணரப்பட்டது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலே கல்வி வளர்ச்சி அடைந்த நாடாக இலங்கை விளங்குகிறது. சுமார் 87 சதவீத மக்கள் இங்கு எழுத்தறிவு உடையவர்கள்.”   .”-(சோ. சந்திரசேகரன், மா. கருணாநிதி)

புதன், 19 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-3

 

தாய்மொழி வழிக் கல்வி-3

இலங்கை

“ இந்தியாவைப் போன்று அதே காலக்கட்டத்தில் இலங்கையும் வெள்ளையர்

 ஆதிக்கத்திலிருந்து விடுதலை  அடைந்த பின்பு இலங்கையின் தேசியக் கல்விக் கொள்கை தெளிவாக வரையறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வளர்ச்சியுற்ற ஆங்கிலக் கல்விமுறை இரத்தத்திலும் நிறத்திலும் இலங்கையர்களாகவும் கருத்திலும் சுவையிலும் அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள புதிய ஒரு வகுப்பினரை உருவாக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கைக்கு ஒப்ப அமைந்தது.

சுயமொழிக் கல்வி வளர்ச்சியிற் கூடிய அக்கறை செலுத்தப்படாமையால் மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து காணப்பட்ட பழக்க வழக்கங்களும் பண்பாட்டு அம்சங்களும் சீர்கேட்டை அடையத் தொடங்கின.”-(சோ. சந்திரசேகரன், மா. கருணாநிதி)…தொடரும்…

செவ்வாய், 18 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-2

 

தாய்மொழி வழிக் கல்வி-2

தாய்மொழி வழிக் கல்வி கற்பது மக்களின் உரிமை; அதற்கு 

ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. சமுக, பொருளாதார 

விடுதலையின்றி வெறும் அரசியல் விடுதலை மட்டுமே 

சுதந்திரமாகாது. அடிமை விலங்கொடித்து விடுதலை பெற்ற 

நாடுகள் பலவும் கல்விப் புரட்சியின் வழியே சமுக, 

பொருளாதார மாற்றங்களக் கண்டு முன்னேறியுள்ளன. 

விடுதலை அடைந்த பின்பு  புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க 

முனைந்த தலைவர்கள் தாய்மொழிக் கல்வி வாயிலாக 

அச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். சிந்தனைக்கும் 

செயல்பாட்டிற்கும் உதவாத வெறும் ஏட்டுக்கல்வியைப் 

புறந்தள்ளிவிட்டுத் தாய்மொழிக் கல்வியால் புதிய சமுதாயத்தை 

உருவாக்கினர்…..  .  தொடரும்…….(இரெ.குமரன்

உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

திங்கள், 17 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-1

 

தாய்மொழி வழிக் கல்வி-1

“மொழி என்பது மனிதகுல மெய்யறிவின் பொக்கிசங்களைப் பாதுகாத்து மரபுவழியாக அளித்துச் செழுமைப்படுத்த வல்ல மதிப்புமிக்க சாதனமாகும்” –மாமேதை வி.இ. லெனின்.

மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், சிந்திக்கும் திறன் தாய்மொழி வழியேதான் நிகழ்கிறது. எனவேதான் தாய்மொழி வழிக் கல்வி பெற வேண்டுவது இனியமையாததாகின்றது.

“ குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது மனிதனின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழி. குழந்தை தனது முதல் பாடத்தைக் கற்பது தாயிடமிருந்துதானே! ஆகவே, குழந்தையின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியன்றி வேறொரு மொழியை அவர்கள் மீது திணிப்பது தாய்நாட்டிற்குச்  செய்யும் மிகப்பெரிய பாவம் என்றே நான் நினைக்கிறேன்.” –மகாத்மா காந்தியடிகள்.  தொடரும்…….(இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

தாய்மொழி வழி மருத்துவக் கல்வி

 

தாய்மொழி வழி மருத்துவக் கல்வி

எந்தக் கல்வியையும் தமிழில்- தாய்மொழியில் கற்பிக்க முடியும். தனக்குத் தெரிந்ததைச்

 சொல்பவன் ஓர் ஆசிரியனாக இருக்க முடியாது. தனக்குத் தெரிந்ததைத் தன் 

தாய்மொழியில் சொல்ல வல்லவனே  நல்ல ஆசிரியனாக இருக்க முடியும், மாணவர்கள் 

மனம் கொள்ளத்தக்க வகையில் சொல்லும் வழியும் தாய்மொழியால்தான் இயலும். 

ஈண்டு இரண்டு உண்மைகளைக்  காண்போம்.


1847இல் மருத்துவர் சாமுவேல் ஃபிஷ்கிரீன் (1822-1884) எனும் அமெரிக்க 

மருத்துவர் இலங்கை வந்தார். ஆங்கில மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் 

இலங்கைவாழ் தமிழர்கள் 33 பேருக்குத் தமிழ்வழி ஆங்கில மருத்துவத்தைக் 

கற்பித்தார். மேலும் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ நூல்களைத் தமிழில் 

மொழிபெயர்த்தார். இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே  தனி ஒரு மனிதன் 

அதுவும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் தமிழில் மருத்துவக் 

கல்வி அளிக்க முடிந்தது……… (மேலும் காண்க: உயிருக்குநேர், கட்டுரை எண்-2.)

வெள்ளி, 14 அக்டோபர், 2022

 

தமிழ் முழக்கம் 22- பேராசிரியர் சி. இலக்குவனார்

 

மதுரையில் பல்கலைக் கழகம்

“தமிழ்வழி கற்றலே தரும்நற் பயனை

இமிழ்சீர் அளித்திடும் என்றும்.

தென்தமிழ் நாட்டுத் தீந்தமிழ் மதுரையில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் அமைந்து தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழை வளப்படுத்துதற்கு முதற்படியாகப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும். அங்ஙனமின்றி ஆங்கிலமே அதன் ஆட்சிமொழியாக இருக்குமானால் இப்பல்கலைக் கழகம் தோன்றுவதனால் பயனொன்றும் இராது. எண்ணிக்கையில் வேறாக இருக்குமேயன்றிப்  பயனில் புதியன காணல் இயலாது. ஆதலின் சென்னைப் பல்கலைக் கழகம் ஒன்றே போதுமானதாகும்.இதை அமைப்பதில் செலவிடும்  பொருளை வேறு வகையில் பயன்படுத்தலாம்.”  …தொடரும்…------இலக்குவனார் இதழுரைகள். (1965) 

வியாழன், 13 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 21- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 21- பேராசிரியர் சி. இலக்குவனார்

 

“……நாட்டுக்கு நல்லன புதியன செய்வதில்  தணியா ஆர்வமும் விரைந்து திட்டங்களைத்  தீட்டிச் செயற்படுத்தும் திறனும் எல்லாராலும் போற்றப்படும் இனிய பண்பும் மிக்க நம் தமிழ் மாநில க் கல்வித்துறை இயக்குநர், அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பின்னர் உயர்நிலைக்கல்விக் கூடங்க

ளில் நடைபெறும் தேர்வுமுறைகளை மாற்ற முன்வந்திருப்பது பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கது. அனைவரும் ஒத்துழைத்து விரைவில் வெற்றிப் பெறச் செய்தல் வேண்டும்.இத்திட்டத்தை கல்லூரிகட்கும் உடனே கொண்டுவந்து செயல்படுத்துதல் வேண்டும் என விரும்புகின்றோம்.

 

மதுரை மாவட்டத்தின் முந்நூறு கல்விக்கூடங்களில்


 மட்டும்தான் முதலில் இத்திட்டம்  கொண்டுவரப்படும்  என்று 

அறிகின்றோம். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு 

முடியத்தான் இத்தேர்வுத்  திட்டத்தால் மாணவர்கள் பயன் 

பெறுவர் என்று தெரிய வருகின்றது.  நல்ல திட்டமாய  இதனை 

நாடெங்கும் எல்லாக் கல்வி நிலையங்களிலும் கல்லூரிகளிலும் 

உடனே செயல்முறைக்குக் கொண்டு வருதலே நன்று. நல்லதை 

இன்றே செய்தல் வேண்டும், செய்யத்தக்க செய்யாமையானும் 

கெடும் (1964 ஆம் ஆண்டு உரை)   இலக்குவனார் 

இதழுரைகள். (1964)  -

புதன், 12 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 20 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 20 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 

“……..ஆகவே, தேர்வுக்காக ஆயத்தம் செய்வதே கல்வி நிலையங்களின்  கடமை என்பது மாறுதல் வேண்டும். வாழ்க்கைக்காக ஆயத்தம் செய்வதே கல்வி நிலையங்கலின் கடமை என்பதைக் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும், அங்ஙனமாயின் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் தேர்வுகளை மட்டும் கொண்டு மாணவர்களின் புலமைகளை அளந்தறிதல் கூடாது, மாணவர்கள் ஆண்டு முழுவதும் வகுப்புகளிலும் வகுப்புக்கு வெளியிலும்  நடந்து கொள்ளும் முறை, நாள்தோறும் பாடங்களில் காட்டி வரும் ஆர்வம், வாரத் தேர்வு, திங்கள் தேர்வுகளில் பெறும் மதிப்பு எண்கள், ஆசிரியர்களுடனும் ஏனைய மாணவர்களுடனும் நடந்துகொள்ளும் முறை. கலைத்துறை, விளையாட்டுத்துறை,பொதுநலத் தொண்டுத்துறை முதலியவற்றில் மாணவர்கள் பெற்றிருக்கும் ஈடுபாடு முதலானவற்றை ஆராய்ந்து, ஆண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களையும் உளத்தில் கொண்டு மாணவர் தகுதி நிலையை ஆராய்ந்து பட்டம் அல்லது சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்யின்  மாணவர்கள் வருங்காலப் பெருமக்களாகச் சிறந்து விளங்குதற்குரிய முறையில் கல்விப் பயிற்சி பெறுதல் கூடும். கல்வி நிலையங்களில் இப்பொழுது ஆங்காங்குத் தோன்றும் ஒழுங்கு முறை குறைபாடும் மறைந்து ஒழியும்…..”   தொடரும்…. 

செவ்வாய், 11 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 19 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 19 - பேராசிரியர் சி. இலக்குவனார்

,தேர்வு முறையில் மாற்றம்


”கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களின் புலமைச் சிறப்பை அளந்து அறிவதற்கு இன்று நடத்தப்படும் தேர்வுகள் பலவகைகளில் குறைபாடுடையன என்பதில் ஐயமில்லை. புலமையை அறிவதற்குத் தேர்வுகள் என்ற நிலை மாறித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குப் புலமை பெறுதல் என்று உண்டாகிவிட்டது. ஆதலின் தேர்வுகளில் முதன்மையாக வெற்றி பெறுவோர்களில் பலர் புலமைக் குறைபாடுடையவர்களாக உள்ளனர். அன்றியும் தேர்வுக்கென ஆயத்தம் செய்வதே கல்வித் திட்டத்தின் குறிக்கோள் என்று ஏற்பட்டுவிட்டதனால் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் உள்ள உறவும் ஒழுங்கு கட்டுப்பாடு முதலியவற்றில் உறுதிப்பாடும் விரும்பத்தக்கனவாய் இல்லை”…..தொடரும்.   இலக்குவனார் இதழுரைகள். (1964) 

திங்கள், 10 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 18 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 18 - பேராசிரியர் சி. இலக்குவனார்

”நம் மாநில அரசு கல்வித்துறையை மையக் கூட்டரசுக்கு விட அசைந்திலது என்பது போற்றத்தக்கதாகும். தம் கொள்கையில் உறுதியாக நின்று, மைய அரசுக்குத் தன் உரிமையை விட்டுவிடாத செயலில் வெற்றிபெற மாநில மக்கள் அரசுக்குத் துணை நிற்க வேண்டும். ஆங்காங்குக் கூட்டங்கள் போட்டுக் கல்வி மாநில அரசுக்கே என முழங்குதல் வேண்டும். முடிவுகள் நிறைவேற்றி மாநில அரசுக்கும் மையக் கூட்டரசுக்கும் விடுத்தல் வேண்டும். ஒற்றையாட்சி கொடுங்கோன்மை உருவாக ஒரு நாளும் இடங்கொடுத்தல் ஆகாது.”  இலக்குவனார் இதழுரைகள். (1964)  

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 17 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 17 - பேராசிரியர் சி. இலக்குவனார்

இந்தி மொழியே இந்தியாவின் மொழியெனக் கொண்டுவிட்டனர்.ஆங்காங்குள்ள மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்திலர். ஏனைய மாநில மொழிகளை அடிமை நிலைக்கு ஆளாக்கிக் கொண்டு வருகின்றனர். இதனை முற்றுப்பெறச் செய்வதற்கே கல்வித்துறையை மையக் கூட்டரசுக்கும் உரித்தாக்க விரும்புகின்றனர் போலும் என எண்ணுவதில் குற்றமின்று.

நாட்டு மக்கள் நலத்தினும் இந்தி மொழி வளர்ச்சியில்தான் மைய அரசு நாட்டங்கொண்டுள்ளது. மைய கூட்டரசுக்கும் கல்வித்துறை உரியதெனின் கல்வி பயிலும் மொழியாக இந்தியை எளிதில் ஆக்கிவிடலாமன்றோ?”  ---இலக்குவனார் இதழுரைகள்

சனி, 8 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 16 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 16 - பேராசிரியர் சி. இலக்குவனார்

” ஆதலின் மாநில அரசுகளின் உரிமைகளைச் சிறிது சிறிதாகக் கவர்ந்துகொண்டு கூட்டரசு முறையை மாற்றி ஒற்றையாட்சியாக அமைத்துக்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றனர் என்று கருதுவதில் தவறன்று. இவ்வாறு செய்து பரதகண்டம் முழுவதும்  ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பல மொழிகளையும், இனங்களையும் இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.” .---இலக்குவனார் இதழுரைகள்

வெள்ளி, 7 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 15 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 15 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 

மையக் கூட்டரசுக் கல்வியைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள விரும்புவது எற்றுக்கு? மக்களிடையே கல்வியைப் பரப்பும் நன்னோக்கத்தில் என்று கூற இயலாது.அதற்குத் தன் பொறுப்பில் கொண்டுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பரப்பும் வழிமுறைகளை மாநில அரசுக்குச் சுட்டிக் காட்டினால் போதுமானது. ஆகவே கல்வியைத் தன் பொறுப்பினும் விடவேண்டும் என்பதற்கு வேறு காரணம் இருத்தல் வேண்டும். மாநில அரசுகள் இன்று மாவட்டங்களின்நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டன என்பதைத் தொடர்புடையோர் பலர் அவ்வப்போது மேடைகள்தோறும் கூறிக்கொண்டுதான் வருகின்றனர்.” –தொடரும்…  .---இலக்குவனார் இதழுரைகள்

வியாழன், 6 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 14 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 14 - பேராசிரியர் சி. இலக்குவனார்

கல்விப் பொறுப்பு யாருடையது….?

 

மாநிலங்கள் இணைந்துள்ள கூட்டரசில் மாநிலங்களின் பொறுப்புகள் மிகுதியாகவும் கூட்டரசின் பொறுப்புகள் குறைவாகவும் இருத்தல் வேண்டும். பரதக்கண்டத்திலும் அவ்வாறே நாட்டுக்காவல், அயல்நாட்டுத் தொடர்பு, அஞ்சல் துறை முதலியன மட்டும் கூட்டரசு பொறுப்பிலும் ஏனையெல்லாம் மாநில அரசுகள் பொறுப்பிலும் இருத்தல் வேண்டும். பொறுப்புகளைக் கூட்டரசுக்குரியன, மாநில அரசுக்குரியன, இரண்டுக்கும் உரியன என மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். இப்பொழுது கல்வித்துறை மாநில அரசுக்குரியதாக ( 1964) உள்ளது. இதனை இரண்டிற்குமுரிய (கூட்டரசுக்கும் மாநில அரசுக்கும்) பொருளாக மாற்ற முயற்சி நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உரியது என்பது பெயரளவில் ஆகிச் செயலளவில் மையக் கூட்டரசுக்கே உரியதாகிவிடும் என்பதில் ஐயமில்லை”…….தொடரும்.

.  ---இலக்குவனார் இதழுரைகள்

புதன், 5 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 13 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 13 - பேராசிரியர் சி. இலக்குவனார்

பயிற்சிப் பள்ளிக்கூடங்கள் பெரும் பொருளீட்டும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படுதல் நாடு அறிந்த ஒன்றாகும். ஆதலின் அதனையும் தனியாரிடமிருந்து எடுத்து அரசே நடத்துதல் வேண்டும். இவற்றுக்கு  அரசே பொருட்கொடை நல்கி இவற்றை ஏற்று நடத்துவதனால் மிகு பொருட் செலவு ஏற்படாது. மக்களாட்சி மாண்புறவும் நல்ல குடிமக்கள் தோன்றவும் துணை புரிய வல்லது கல்வியாய் இருத்தலின் கல்விக்குச் செல்விடுவதைப் பற்றிக் கவலை கொள்ளல் நல்லரசுக்கு ஏற்றதன்று.”

.  ---இலக்குவனார் இதழுரைகள்

செவ்வாய், 4 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 12 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 12 - பேராசிரியர் சி. இலக்குவனார்

1.  திருக்குறளில் கூறியுள்ளவாறே வாழ்வோம் என்று நாள்தோறும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு வள்ளுவர் நெறியில் வாழ்தல் வேண்டும்.

2.  எந்த நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் கல்வி நிலையங்களிலும் பொதுவிடங்களிலும் வள்ளுவருக்கு வணக்கம் கூறி வள்ளுவர் நெறியில் வாழ்வோம் என்று உறுதி கூறித் தொடங்குதல் வேண்டும்.

3.  திருவள்ளுவர் பெயரால் அறப்பணிக்குழு ஒன்றை அமைத்து வையகமெங்கும் தமிழர் நெறியைப் பரப்ப தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்.

4.  திருக்குறளில் புலமை பெற்றுள்ள அறிஞர்கட்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்குதல் வேண்டும்.

5.  தமிழ்க் கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆய்வதற்கும் பரப்புவதற்கும் திருவள்ளுவர் பெயரால் பல்கலைக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.

6.  வள்ளுவர் நெறியை வையகமெங்கும் பரப்பத்தக்க தமிழக அறிஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர் பெயரால் தமிழ் ஆறாய்ச்சித் துறைகள் அமைக்க வேண்டும்.

7.  திரைப்படங்கள் தொடக்கத்தில் திருவள்ளுவர் படத்தையும் சில் குறட்பாக்களையும் காண்பித்தல் வேண்டும். கதை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பரப்புதல் வேண்டும்.


இவ்வாறு திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடி மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த பசி, பிணி, பகை நீங்கி எல்லாரும் இன்புற்றிருக்கும் நிலையைத் தோற்றுவிப்போமாக.  ---இலக்குவனார் இதழுரைகள்.----

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 11 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 11 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 

கி.பி.1969 சனவரித் திங்கள் பதினான்காம்நாள் முதல் (தை முதல் நாள்

திருவள்ளுவர் தோன்றி  இரண்டாயிரம் ஆண்டு நிறைவுறுகிறது. ஆதலின் இந்தத் 

தை முதல் அடுத்த தை வரை (1969 முழுவதும்) திருவள்ளுவர் நினைவு 

ஆண்டாகவே கருதப்பட வேண்டும். உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் 

நினைவாகப் பின்வரும் செயல்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.

1.  ஆண் குழந்தைகட்குத் திருவள்ளுவர் என்றும் பெண் குழந்தைகட்குத் தமிழ் மறைச் செல்வி என்றும் பெயர் இடுதல் வேண்டும்.

2.  திருவள்ளுவர் நினைவாக ஆங்காங்கு நினைவுச் சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்த வேண்டும்.

3.  ஒவ்வொருநாளும் அவரவர் கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பு திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரங்களைப் படித்துவிட்டே தொடங்கல் வேண்டும்.

4.  நாம் எழுதும் கடிதங்களில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதிவிட்டே கடிதங்களைத் தொடங்க வேண்டும்.

நாம் பிறரைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்கும் போது வள்ளுவர் வணக்கம் என்று கூற வேண்டும்……---இலக்குவனார் இதழுரைகள்.தொடரும்