தமிழ் முழக்கம் 11 - பேராசிரியர் சி. இலக்குவனார்
கி.பி.1969 சனவரித் திங்கள் பதினான்காம்நாள் முதல் (தை முதல் நாள்)
திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டு நிறைவுறுகிறது. ஆதலின் இந்தத்
தை முதல் அடுத்த தை வரை (1969 முழுவதும்) திருவள்ளுவர் நினைவு
ஆண்டாகவே கருதப்பட வேண்டும். உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர்
நினைவாகப் பின்வரும் செயல்களை மேற்கொள்ளுதல்
வேண்டும்.
1. ஆண்
குழந்தைகட்குத் திருவள்ளுவர் என்றும் பெண் குழந்தைகட்குத் தமிழ் மறைச் செல்வி என்றும்
பெயர் இடுதல் வேண்டும்.
2. திருவள்ளுவர்
நினைவாக ஆங்காங்கு நினைவுச் சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்த வேண்டும்.
3. ஒவ்வொருநாளும்
அவரவர் கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பு திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரங்களைப் படித்துவிட்டே
தொடங்கல் வேண்டும்.
4. நாம்
எழுதும் கடிதங்களில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதிவிட்டே கடிதங்களைத் தொடங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக