தாய்மொழி வழிக் கல்வி-4
இலங்கை
…….” 1943 ஆண்டு வெளியிட்ட விசேடக் கல்விக்குழுவினரின்
அறிக்கை, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தாய்மொழியே இயற்கையான சிறந்த போதனா மொழி
என்பதையும் ஏற்றுக்கொண்டது. மேலும் இக்குழு
‘தேசிய நோக்கில் ஆங்கிலம் போதனா மொழியாக அமைவது ஒரு தவறான தெரிவு என்றும் தாய்மொழிக்கு
நாம் அளிக்கும் பெரும் முக்கியத்துவத்தை ஒரு சிறுபான்மையினருக்காகக் கைவிட ஆயத்தமாயில்லை.
என்றும் கூறியது.
1947 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததும் புதிய
யுகமொன்று ஆரம்பமாயிற்று ஒரு சுதரந்திரமடைந்த சனநாயக நாடு அந்நிய மொழியைப் பயன்படுத்துவது
மக்கள் பெற்றுக்கொண்ட புதிய அந்தஸ்துக்கு முரண்பட்டதாக இருந்தது. தேசிய நிறுவனங்களுக்கும்
தேசிய மொழிகளுக்கும் புத்துயிர் அளிக்கவேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுப்பெற்றது.
பிள்ளைகள் கல்விபெறச் சிறந்த போதனா மொழி தாய்மொழியே என்ற கல்வித் தத்துவ உளவியல் ஆதாரங்களுடன்
கூடிய உண்மை 1945 ஆம் ஆண்டிலேயே உணரப்பட்டது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலே கல்வி வளர்ச்சி
அடைந்த நாடாக இலங்கை விளங்குகிறது. சுமார் 87 சதவீத மக்கள் இங்கு எழுத்தறிவு உடையவர்கள்.” .”-(சோ. சந்திரசேகரன்,
மா. கருணாநிதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக