தமிழ்
முழக்கம் 22- பேராசிரியர் சி. இலக்குவனார்
மதுரையில் பல்கலைக் கழகம்
“தமிழ்வழி
கற்றலே தரும்நற் பயனை
இமிழ்சீர்
அளித்திடும் என்றும்.
தென்தமிழ்
நாட்டுத் தீந்தமிழ் மதுரையில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் அமைந்து தமிழை வளப்படுத்த
வேண்டும். தமிழை வளப்படுத்துதற்கு முதற்படியாகப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மொழியாகத்
தமிழை ஆக்க வேண்டும். அங்ஙனமின்றி ஆங்கிலமே அதன் ஆட்சிமொழியாக இருக்குமானால் இப்பல்கலைக்
கழகம் தோன்றுவதனால் பயனொன்றும் இராது. எண்ணிக்கையில் வேறாக இருக்குமேயன்றிப் பயனில் புதியன காணல் இயலாது. ஆதலின் சென்னைப் பல்கலைக்
கழகம் ஒன்றே போதுமானதாகும்.இதை அமைப்பதில் செலவிடும் பொருளை வேறு வகையில் பயன்படுத்தலாம்.” …தொடரும்…------இலக்குவனார் இதழுரைகள். (1965)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக