புதன், 12 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 20 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 20 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 

“……..ஆகவே, தேர்வுக்காக ஆயத்தம் செய்வதே கல்வி நிலையங்களின்  கடமை என்பது மாறுதல் வேண்டும். வாழ்க்கைக்காக ஆயத்தம் செய்வதே கல்வி நிலையங்கலின் கடமை என்பதைக் குறிக்கோளாகக் கொள்ளல் வேண்டும், அங்ஙனமாயின் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் தேர்வுகளை மட்டும் கொண்டு மாணவர்களின் புலமைகளை அளந்தறிதல் கூடாது, மாணவர்கள் ஆண்டு முழுவதும் வகுப்புகளிலும் வகுப்புக்கு வெளியிலும்  நடந்து கொள்ளும் முறை, நாள்தோறும் பாடங்களில் காட்டி வரும் ஆர்வம், வாரத் தேர்வு, திங்கள் தேர்வுகளில் பெறும் மதிப்பு எண்கள், ஆசிரியர்களுடனும் ஏனைய மாணவர்களுடனும் நடந்துகொள்ளும் முறை. கலைத்துறை, விளையாட்டுத்துறை,பொதுநலத் தொண்டுத்துறை முதலியவற்றில் மாணவர்கள் பெற்றிருக்கும் ஈடுபாடு முதலானவற்றை ஆராய்ந்து, ஆண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களையும் உளத்தில் கொண்டு மாணவர் தகுதி நிலையை ஆராய்ந்து பட்டம் அல்லது சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்யின்  மாணவர்கள் வருங்காலப் பெருமக்களாகச் சிறந்து விளங்குதற்குரிய முறையில் கல்விப் பயிற்சி பெறுதல் கூடும். கல்வி நிலையங்களில் இப்பொழுது ஆங்காங்குத் தோன்றும் ஒழுங்கு முறை குறைபாடும் மறைந்து ஒழியும்…..”   தொடரும்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக