புதன், 25 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –14.- தமிழர் இசைக்கருவிகள்

 

·         சங்கு- ஓர் ஆய்வு –14.- தமிழர் இசைக்கருவிகள் 

1: திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்
சங்குதீர்த்தக்குளத்தில் வியாழக்கிழமை புனித சங்கு உருவானது.சங்குதீர்த்தக்குளத்தில்சங்கு உருவாகும் வரலாறு குறித்து திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர்திருக்கோயில் செயல் அலுவலர் கோ.சரவணன் கூறியது:

மார்க்கண்டேயர்அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டுவிட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரிசமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்ததாகவும், அங்கு அவர் பூஜைசெய்யும் போது தீர்த்தம் எடுப்பதற்கான பாத்திரம் இல்லாததால் அவர்

பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்ததாகவும், அப்போது
சங்குதீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியதாகவும்,
அச்சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாகவும் தலவரலாறு
கூறுகிறது. இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்குதீர்த்தக்
குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து
வருவதாகவும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில்
வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது
சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில்முதன்மைபெறும்.இதற்கு
முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு ஆடி பூரம் தினத்தில்
சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு உருவானது. இதனையடுத்து 12 ஆண்டுக்குப்பிறகு தற்போது விநாயகர் சதுர்த்தியான வியாழக்கிழமை
சங்குதீர்த்தக்குளத்தில் புனித சங்கு கரை ஒதுங்கியது. புனித சங்குக்கு
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு,
சதுரங்கப்பட்டினம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித சங்கை கண்டு தரிசனம்செய்து வருகின்றனர்.
 

நன்றியுடன்…………………………… தினமணி, தமிழ் தமிழ் அகரமுதலி

முற்றும்.

செவ்வாய், 24 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –13.- தமிழர் இசைக்கருவிகள்

 

·         சங்கு- ஓர் ஆய்வு –13.- தமிழர் இசைக்கருவிகள் 

 

இறைவன் இன்றும் நம்முடன் இருக்கின்றான் என்பதற்கு இன்று நடந்த நிகழ்ச்சியே சாட்சி.திருக்கழுக்குன்றம்-சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் - செங்கல்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டடரிலும் - மகாபலிபுரம் -கல்பாக்கம் - திருப்போருர் - மதுராந்தகம் -மேல்மருவத்துர் -ஆகிய புகழ்பெற்ற ஊர்களிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-சங்கு தீர்த்த குளம் ஆகும்.

 


இதில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.இன்று காலையிலும் 9 மணிஅளவில் அதுபோல் சங்கு பிறந்தது. ஆயிரக்கனக்கான மக்கள் அதனை கண்டுகளித்தார்கள்.

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்துள்ளார்கள்.

 

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான இதுதோன்றும்.இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.இன்றைய நிகழ்ச்சியை பற்றிய விரிவான வீடியோ தொகுப்பு விரைவில்.....

நன்றியுடன்
வாழ்க வளமுடன்.
வேலன்.

………………………………..தொடரும்……………………………….

திங்கள், 23 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –12.- தமிழர் இசைக்கருவிகள்

 

·         சங்கு- ஓர் ஆய்வு –12.- தமிழர் இசைக்கருவிகள் 

வெண் சங்கு (சாங்கசு பைரம்Xancus pyrum) கடல் நத்தை வகையைச் சேர்ந்த மெல்லுடலி ஆகும். இது வலம்புரிச் சங்கு எனவும் சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இந்தியச் சங்கு இனம், தற்போது டர்பினல்லா பைரம்[1] (Turbinella pyrum) எனவும் அழைக்கப்படுகிறது. சாங்கசு என்னும் சங்கினத்தில் சாங்கசு பைரம்சாங்கசு ஆங்குலேட்டர் . லேட்டசுசாங்கசு ,

லேவிகேட்டர் என்ற மூன்று சிற்றினங்கள் உள்ளன.  இந்த மூன்று வகைகளில் சாங்கசு பைரம் என்னும் சங்கே சிறப்பானது.

சேகண்டி அல்லது சேமக்கலம், மேலும் இதனைச் சவுண்டி , செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , என்றும் அழைக்கப்படுகிறது. சேமக்கலத்தை வெண்கலத்தால் வட்ட வடிவமாக உருவாக்கப்படுகிறது. வெண் சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, கனத்த தேக்கு குச்சியால் அடித்து ஒலி எழுப்பப்படுகிறது.

திருச்சங்கு திருமாலுக்கு உரியது. சேமக்கலம் சிவனுக்கு உரியது. சிவனும், திருமாலும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்கும் பொருட்டு சேமக்கலத்தைசங்கொலியுடன் இணைத்து இசைக்கப்படுகின்றன.[1]

சிவன் கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போது சேமக்கலம் எனும் சேகண்டி இசை ஒலி எழுப்பப்படுகிறது. பிற்காலத்தில் மனித இறப்புகளில் சேகண்டியுடன் சங்கு ஒலிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. இறப்புகளில் வாசிக்கப்படும் பித்தளையால் ஆன சேமக்கலத்தை சேகண்டி அல்லது சவுண்டி அல்லது சேகண்டி என்பர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் திருமண விழாவின் போது சேமக்கல ஒலியுடன், சங்கொலி மற்றும் குலவை ஒலி பெண்களால் எழுப்பப்படுகிறது.

பெயர்க் காரணம்

சோமன் எனும் சந்திரன் போன்ற வட்ட வடிவ அமைப்பு கொண்ட சேகண்டிக்கு சோமன் கலம் . என்ற பெயராயிற்று. பின்னர் இப்பெயர் மறுவி சேமக்கலம், சேகண்டி என்றாயிற்று.

………………………………..தொடரும்……………………………….

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –11.- தமிழர் இசைக்கருவிகள்

 

சங்கு- ஓர் ஆய்வு –11.- தமிழர் இசைக்கருவிகள் 

 

காற்றுக் கருவிகள்

·        புல்லாங்குழல்

·        முகவீணை

·        மகுடி

·        சங்கு

·        தாரை

·        நாதசுவரம்

·        கொம்பு

·        ஒத்து

·        எக்காளம்

·        கொக்கறை

·        நமரி

·        திருச்சின்னம்

·        தூம்பு

·        வயிர்

·         சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.

·         தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிப்பாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும் இசைக்கப்படுகிறது.

·         ………………………………..தொடரும்……………………………….

சனி, 21 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –10.- தமிழர் இசைக்கருவிகள்

 

சங்கு- ஓர் ஆய்வு –10.- தமிழர் இசைக்கருவிகள் 

1.  தத்தளகம்

2.  தண்டு

3.  தண்ணுமை

4.  தமருகம்

5.  தாரை

6.  தாளம்

7.  துத்திரி

8.  துந்துபி

9.  துடி

10.              தூரியம்

11.              திமிலை

12.              தொண்டகம்

13.              நரல் சுரிசங்கு

14.              படகம்

15.              படுதம்

16.              பணிலம்

17.              பம்பை

18.              பல்லியம்

19.              பறண்டை

20.              பறை

21.              பாணி

22.              பாண்டில்

23.              பிடவம்

24.              பேரிகை

25.              மத்தளம்

26.              மணி

27.              மருவம்

28.              முரசு

29.              முரவம்

30.              முருகியம்

31.              முருடு

32.              முழவு

33.              மொந்தை

34.              யாழ்

35.              வட்டணை

36.              வீணை

37.              வீளை

70.வெங்குரல் [2]

………………………………..தொடரும்……………………………….

வெள்ளி, 20 அக்டோபர், 2023

சங்கு- ஓர் ஆய்வு –9.- தமிழர் இசைக்கருவிகள்

 

சங்கு- ஓர் ஆய்வு –9.- தமிழர் இசைக்கருவிகள் 

திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்[தொகு]

1.  ஆகுளி,

2.  இடக்கை

3.  இலயம்

4.  உடுக்கை

5.  ஏழில்

6.  கத்திரிகை

7.  கண்டை

8.  கரதாளம்

9.  கல்லலகு

10.              கல்லவடம்

11.              கவிழ்

12.              கழல்

13.              காளம்

14.              கிணை

15.              கிளை

16.              கின்னரம்

17.              குடமுழா

18.              குழல்

19.              கையலகு

20.              கொக்கரை

21.              கொடுகொட்டி

22.              கொட்டு

23.              கொம்பு

24.              சங்கு

25.              சச்சரி

26.              சலஞ்சலம்

27.              சல்லரி

28.              சிலம்பு

29.              தகுணிச்சம்

30.              தக்கை

31.              தடாரி

32.              தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)

………………………………..தொடரும்……………………………….